ராயல் என்ஃபீல்டு - நல்ல நிலையில் உள்ளது என்பதற்கு உதாரணம், ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக். சில ஆண்டுகளுக்கு முன்பு மோசமான விற்பனை எண்ணிக்கை, பழைய காலத் தொழில்நுட்பம் என சோர்வடைந்து இருந்தது என்ஃபீல்டு. இன்று நிலைமை அப்படியே தலைகீழ். இந்தியாவில் எந்த நிறுவனத்துக்கும் ‘அட்வென்ச்சர்’ செக்மென்ட்டில் களமிறங்க வராத தைரியம், ராயல் என்ஃபீல்டுக்கு வந்துள்ளது.

ஆழம் தெரிந்துதான் காலை விட்டிருக்கிறதா ராயல் என்ஃபீல்டு?

டிஸைன்

‘ராயல் என்ஃபீல்டு’ சாயல் வேண்டும் என்பதற்காகவே பைக், கொஞ்சம் பழைமை கலந்த தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கில் பேட்டரி தீர்ந்தாலும், ஹெட்லைட் இயங்குகிறது. அப்போது எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் செயலிழந்தால், பைக்கைத் தள்ளியும் ஸ்டார்ட் செய்யலாம்.

முன்பக்கம் உள்ள விண்ட் ஸ்கிரீன், தூசும் மண் துகள்களும் முகத்தில் அடிக்காமல் காக்கிறது. இந்த ஸ்க்ரீனை அட்ஜஸ்ட் செய்யவும் முடியும். டேக்கோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர் ஆகியவை தெளிவாக எண்களைக் காட்டுகின்றன. எரிபொருள், நீர் ஆகியவற்றை எடுத்துச் செல்ல, கேன்கள் வைக்க இடங்களும் உண்டு. அலாய் கன்ட்ரோல் லீவர்கள் உள்ளன.

உயரமான பைக் என்பதால், சென்டர் ஆஃப் கிராவிட்டிக்காக இன்ஜின் தாழ்வாகப் பொருத்தப்பட்டுள்ளது. 15 லிட்டர் ஃப்யூல் டேங்க் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதால், மோசமான இடங்களில் பைக்கை ஓட்டும்போது, எழுந்து நின்று ஓட்ட வசதியாக உள்ளது. மேலும் வழக்கமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட, இதன் கட்டுமானத் தரம் ஒருபடி மேலேயே இருக்கிறது.

இன்ஜின்

ஹிமாலயன் பைக்கில் இருப்பது இரண்டு வால்வுகள் கொண்ட 4-ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, 411 சிசி இன்ஜின். கார்புரேட்டர் வைக்கலாமா, ஃப்யூல் இன்ஜெக்ஷன் வைக்கலாமா என கடும் ஆய்வுகளுக்குப் பிறகு கார்புரேட்டரையே வைத்துள்ளது ராயல் என்ஃபீல்டு. ஏனென்றால், அதிக விலையில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் வைத்தாலும், அதனால் கிடைக்கும் ஒட்டுமொத்த பலன்கள் குறைவுதான்.

3.3 kgm டார்க்கை 4,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது ஹிமாலயன் இன்ஜின். குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே டார்க் டெலிவரி சீராக இருக்கிறது. இதனால், அடிக்கடி கியர்களைக் குறைக்கவோ, இன்ஜினை விரட்டவோ தேவை இல்லை. 24.5 bhp சக்தியை 6,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது இந்த இன்ஜின். 10 ஆயிரம் கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மாற்றினால் போதும் என்கிறது ராயல் என்ஃபீல்டு. முழுமையான டெஸ்ட்டுக்குக் காத்திருப்போம்!

இன்ஜின் சத்தம் வழக்கமான ராயல் என்ஃபீல்டு ஸ்டைலில் இல்லை. சத்தம் குறைவாக இருந்தாலும், ரிதம் நன்றாகவே இருக்கிறது.

சராசரியான உயரம் கொண்ட ஒரு நபர் வசதியாக ஹிமாலயன் பைக்கில் அமர முடியும். இருக்கை சொகுசாக இருக்கிறது. 182 கிலோ எடை கொண்ட இந்த ஆஃப் ரோடு பைக்கின் கையாளுமை எப்படி இருக்கிறது என்று ஓட்டிப் பார்க்கும்போது தெரியும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் தாராளம். ஸ்டீல் ஃப்ரேமில்தான் பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 41 மிமீ டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும், ஸ்விங் ஆர்மும் உள்ளன. ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடுக்கென டூயல் பர்ப்பஸ் டயர்களுடன் வருகிறது ஹிமாலயன். முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.
பெரும்பாலான அட்வென்ச்சர் பைக்குகள் இந்திய சாலைகளுக்கும், சாகசங்களுக்கும் நன்றாகவே பொருந்துபவை. ஆஃப் ரோடு பைக்குகளுக்குப் பெயர் பெற்ற கேடிஎம் நிறுவனமே இங்கு இந்த செக்மென்ட்டில் நுழைவதற்குத் தயக்கம் காட்ட, ராயல் என்ஃபீல்டு ஒரே அடி, தெறி அடியாக ஹிமாலயனைத் தைரியமாக களமிறக்கிவிட்டது.

ஆழம் தெரிந்துதான் ராயல் என்ஃபீல்டு காலை விட்டிருக்கிறதா எனக் கண்டுபிடிக்க, முதலில் நாம் பைக்கில் காலை வைக்க வேண்டும்! இது ஃபர்ஸ்ட் லுக்தான்!