எத்தனையோ பைக்ஸ் இருந்தாலும் பஜாஜ் பல்ஸர் என்றால், எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பு டிவிஎஸ் சென்ட்ரா வைத்திருந்தேன். அது வாங்கி பல ஆண்டுகளாகிவிட்டதால், எனது நீண்ட நாள் ஆசையான பல்ஸரைத்தான் வாங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

ஏன் பல்ஸர் AS 150?

முதலில், பல்ஸர் 150 DTSi மாடலைத்தான் வாங்க நினைத்தேன். அதிலும் ப்யூர் பிளாக் கலர், என் ஃபேவரிட். அதை புக் செய்வதற்காகத்தான் ஷோரூம் சென்றிருந்தேன். ஆனால், ப்யூர் பிளாக் கலர் பல்ஸர் அப்போது கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக, வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பைக்தான் இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் கோவை 100 அடி சாலையில் இருக்கும் ஜெய்கிருஷ்ணா பஜாஜ் ஷோரூமில் AS150 பைக்கைப் பார்த்தேன். பார்த்தவுடன் இதன் ஃப்ரெஷ் டிஸைன் கவர்ந்துவிட்டது. நீல நிற பைக் மிக அழகாக இருந்தது. பைக்கின் விவரங்களை எல்லாம் கேட்ட பிறகு, இதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றியது.

ஷோரூம் அனுபவம்

AS150 பைக்கின் சிறப்பம்சங்களைப் பற்றி ஷோரூமில் கூறினார்கள். அதனால், நம்பிக்கையாக புக் (ஆகஸ்ட் மாதம்) செய்தேன். சரியாக, சொன்ன தேதிக்கு டெலிவரி கொடுத்துவிட்டார்கள். பைக் வாங்கிய பிறகு, இதுவரை மூன்று சர்வீஸ் செய்துவிட்டேன். ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் அனுபவம் திருப்தியாக இருக்கிறது.

எப்படி இருக்கிறது பல்ஸர் AS150?

நான் எதிர்பார்த்ததைவிட பெர்ஃபாமென்ஸ் அருமை. குறிப்பாக, இன்ஜின் பிக்-அப் சூப்பர். துவக்கத்தில் இருந்தே பவர் டெலிவரி நன்றாக வெளிப்படுவதுடன், டாப் ஸ்பீடு வரையிலும் சீராக இருக்கிறது. பைக்கைக் கையாள்வது எளிமையாக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கில் சிரமம் இல்லாமல் ஓட்ட முடிகிறது. நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி சீட்டிங் பொசிஷன் சரியாக இருப்பதால், முதுகுவலி பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஹேண்டில்பார் சரியான உயரத்தில் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. முன்புறம் இருக்கும் வைஸர், காற்றை முகத்தில் அறையாமல் தடுக்கிறது. ஹெட்லைட், இரவில் நல்ல வெளிச்சம் தருகிறது. வைஸர், ஹெட்லைட் ஆகியவை இரண்டும் இணைந்திருக்கும் பைக்கின் முன்புற டிஸைன் சூப்பர். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் துல்லியமாக, தேவையான தகவல்களைத் தருகிறது. வெயிலில்கூட எளிதாகத் தகவல்களைக் காண முடிவது இதன் ஹைலைட். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்மூத்தாக இருக்கிறது. அதேபோல, மைலேஜ் 40 கி.மீ வரை கிடைக்கிறது. அதிர்வுகள் இல்லாமல் சஸ்பென்ஷன் மென்மையாக இருக்கிறது.

ப்ளஸ்

ஸ்மூத் இன்ஜின், சீரான பவர் மற்றும் பிக்-அப் பெரிய ப்ளஸ். அதேபோல், பைக்கின் டிஸைன் பார்த்ததும் பிடித்துப்போகும். மோனோஷாக் சஸ்பென்ஷன் நன்றாக இருப்பதால், ரைடிங் அனுபவம் அருமை. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் எளிதாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கிறது.

மைனஸ்

பில்லியன் சீட் மிக உயரமாக இருக்கிறது. இது ஸ்போர்ட்டியாக இருந்தாலும், பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு வசதியாக இல்லை. முன்பக்கம் டிஸ்க் பிரேக்; பின்புறம் டிரம் பிரேக்தான். மேலும், பிரேக் பிடிக்கும்போது, ஷார்ப்னெஸ் இல்லை. குறைந்த வேகத்தில் பிரேக் பிடித்தாலும்கூட, ஸ்டெபிலிட்டி கிடைக்காமல், முன்னால் உந்தப்படுகிறோம். பைக்கின் தரத்தை வைத்துப் பார்த்தால், விலை கொஞ்சம் அதிகம்தான்.

என் தீர்ப்பு

ஸ்போர்ட்டியான டிஸைன் வேண்டும் என்பவர்களும், நீண்ட தூரப் பயணம் செய்ய விரும்பும் டூரர்களுக்கும் ஏற்ற பவர்ஃபுல் பைக்காக இருக்கிறது பல்ஸர் AS150.