Election bannerElection banner
Published:Updated:

கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!

கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!
கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!

கார் பராமரிப்பு ச.ஜெ.ரவி படங்கள்: தி.விஜய்

மாஸ்டர் ஹெல்த் செக்கப், மனிதர்களுக்கு அவசியம். ஏனெனில், நீண்ட நாள் வெளியே தெரியாமல் இருக்கும் நோயை, இந்த செக்கப் மூலம்தான் அறிய முடியும். அதேபோல், காருக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் வந்துவிட்டது. இதில், காரின் நீண்ட நாள் பிரச்னை, எவ்வளவு தேய்மானம், எந்தெந்த பாகம் எவ்வளவு காலம் உழைக்கும் என்பதை, இந்த செக்கப் - ரிப்போர்ட்டாகக் கொடுக்கிறது.

சரி, வழக்கமாக சர்வீஸ் செய்யும் இடத்தில்தான் காரை சர்வீஸுக்கு விடுகிறோம். அங்கே, காரின் சர்வீஸ் தகவல்கள் எல்லாம் இருக்குமே... தனியாக ஏன் சோதிக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா சர்வீஸ் சென்டரிலும் உதிரிபாகங்களின் செயல்பாட்டைத் துல்லியமாக அளவிடும் இயந்திரங்கள் இல்லை.

ஏடிஎஸ் எல்ஜி எனும் நிறுவனம், ‘ஆட்டோ ஸ்யூர்’ என்ற பெயரில் இப்படிப்பட்ட ஒரு மையத்தை கோவையில் துவங்கியிருக்கிறது. முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்பட்ட இயந்திரங்களைக்கொண்டு, கார்களின் செயல்பாட்டை எடை போட்டு துல்லியமான அறிக்கையை அளிப்பதுதான் இந்த மையத்தின் நோக்கம்.

கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!

‘‘பழைய கார் வாங்குபவர்கள் கார் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு வாங்கவும், கார்களை அதிகம் பயன்படுத்துவோர் காரை நல்ல நிலையில் வைத்திருக்கவும், நல்ல காரை விற்பவர்கள் காரின் தன்மை குறித்து விளக்கி, கூடுதல் விலைக்கு விற்கவும் இந்த அறிவியல்பூர்வமான சோதனைகள் பயன்படும்!’’ என்கிறார் ஆட்டோ ஸ்யூர் டெஸ்ட்டிங் சென்டரின் ஆபரேஷன்ஸ் பிரிவின் தலைவர் ஜனார்த்தன். கடந்த 50 ஆண்டு காலமாக கார் சர்வீஸ் செய்யத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்யும் ஏடிஎஸ் எல்.ஜி நிறுவனத்தின் அங்கம்தான், இந்த ஆட்டோ ஸ்யூர்.
 
தொடர்ந்து பேசிய ஜானார்த்தன், “நவீன கருவிகளைப் பயன்படுத்தி காரின் சேஸி, வீல் அலைன்மென்ட், சஸ்பென்ஷன், பிரேக், ஹெட்லைட்ஸ், இன்ஜின் என அனைத்தையும் சோதிக்கிறோம்.

அதன் அடிப்படையில் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்பட்ட ‘டயக்னோஸ்டிக் ரிப்போர்ட்’ மற்றும் 150 விதமான விஷுவல் டெஸ்ட்டில் பரிசோதிக்கப்பட்ட ‘எக்ஸ்பர்ட் ரிப்போர்ட்’ என இரண்டு அறிக்கைகளை வழங்குவோம்.

காரைப் பொறுத்தவரை சேஸி நன்றாக இருக்க வேண்டும். சேஸியை செக் செய்ய, பொதுவாக காரின் அடிபாகத்தைச் சோதனை செய்வோம். அது லேசாக சேதமாகி வளைந்திருந்தால், கண்களுக்குத் தெரியாது. இதற்காகவே இத்தாலியில் இருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கருவியை இறக்குமதி செய்துள்ளோம். இது, மூன்று கோணங்களில் அளந்து, சேஸி 1 மிமீ விலகி இருந்தால்கூட சொல்லிவிடும்.

கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!

அதேபோல், வீல் அலைன் மென்ட், சஸ்பென்ஷன், பிரேக், இன்ஜின் ஆகியவற்றையும் முழுமையாகச் சோதிக்கிறோம். காரை முழு வேகத்தில் ஓடவிட்டு இன்ஜின் பவர், டார்க், டிரான்ஸ்மிஷன் தேய்மானம் என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிடுகிறோம்.

கார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்!

மேலும், விஷுவலாகப் பார்த்து, எங்காவது அடிபட்டிருக் கிறதா? இன்டிகேட்டர், ஏ.சி எல்லாம் முறையாக வேலை செய்கிறதா? ஸ்கிராட்ச் இருக்கிறதா என அனைத்தையும் பரிசோதிப்போம்.

அறிக்கையைப் பொறுத்தவரையில், டெக்னிக்கலாக எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பச்சை இருந்தால், ஓகே; சிவப்பு இருந்தால், அதில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். அதுபோக, ஒவ்வொன்றுக்கும் நார்மல் வேல்யூஸைக் கொடுத்து, உங்கள் காரின் வேல்யூவையும் கொடுத்திருப்போம். அதனால், எளிதாக உங்கள் காரில் என்ன பிரச்னை என உங்களால் அறிந்துகொள்ள முடியும்.  அடுத்து இதை நாடு முழுவதும் பரவலாக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருக் கிறோம்!” என்கிறார் ஜனார்த்தன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு