சொந்த கார் என்றால் பிரச்னை இல்லை. இந்தியா முழுக்கச் சுற்றினாலும், ‘பெர்மிட் எங்கே? ஆர்சி எங்கே?’ என்று கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். இதுவே வாடகை கார்களில் மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது, டிரைவர்கள் என்னென்ன வெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; பெர்மிட்டுக்கு என்ன வழிமுறைகள்? இதற்குப் பாடமாய் அமைந்திருக்கிறார் டிரைவர் சண்முகநாதன்.

‘‘திருப்பதி போனா திருப்பம் வரும்னு சொல்வாங்க... எனக்கும் திருப்பம் வந்துச்சு.ஆனா, கொஞ்சம் நஷ்டமான திருப்பம்!’’ என்று நொந்தபடி சொன்னார் டிரைவர் சண்முகநாதன். தூத்துக்குடி ஃபாஸ்ட் டிராக் அலுவலகத்தில், தனது மஹிந்திரா ஸைலோவை அட்டாச்மென்ட்டுக்கு விட்டு வாடகைக்கு கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார் சண்முகநாதன். ஓனரும் இவரே; டிரைவரும் இவரே! தூத்துக்குடியில் இருந்து திருப்பதிக்கு தனது வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றபோது, பெர்மிட் எல்லாம் பக்காவாக எடுத்தவர், ஆந்திரா செக்போஸ்ட்டில் பெர்மிட்டில் சீல் வாங்க மறந்திருக்கிறார். இதனால், ஆந்திர மாநில அதிகாரிகளிடம் ஏற்பட்ட மோசமான அனுபவம் + நேர, பண விரயத்தைச் சொன்னார் சண்முகநாதன்.

‘‘திருப்பதி சவாரிக்காக ஒரு சவாரி புக் ஆனது. மொத்தம் ஏழு கஸ்டமர்கள். திருப்பதி தரிசனம் முடியுற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. திரும்பி வர்றப்போ அலிபிரி செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினாங்க. வண்டி டாக்குமென்ட்ஸ், பெர்மிட் எல்லாம் செக் பண்ணினவங்க, ‘தம்பி, ஆந்திரா ரோட்டுக்கு டாக்ஸ் கட்டலை... 15,000 ரூபாய் ஆகும்’னு சொன்னாங்க. அப்புறம் ஆஃபீஸ்ல விசாரிச்சதுலதான், நான் ஆந்திரா பார்டர்ல சீல் மட்டும் வாங்க மறந்துட்டேன்கிற விஷயம் தெரிஞ்சது. ‘அவ்வளவு பணம் இல்லை சார்’னு சாயங்காலம் முழுதும் கெஞ்சினதும், அபராதத்தைப் பாதியா குறைச்சுக்கிட்டாங்க. ரொம்ப சிக்கல் ஆகிடுச்சு. அப்புறம் என் கார்ல இருந்த வாடிக்கையாளர்தான் எனக்குப் பணம் கொடுத்து உதவினார். அந்த ட்ரிப்ல நான் சம்பாதிச்சதே கம்மி. அதையும் ஃபைன் கட்டி அழுதுட்டேன்! என்னை மாதிரியே நிறைய டிரைவர்கள் சிக்கியிருந்தாங்க...டிரைவர்களே, திருப்பதி போனா பெர்மிட் விஷயத்தில் கவனமா செயல்படுங்க!’’ என்று சொன்னார்.

கார் டாக்குமென்ட்ஸ், லைசென்ஸ், பெர்மிட் என்று எல்லாம் பக்காவாக இருந்தும், பெர்மிட்டில் சீல் இல்லாத காரணத்தால், ‘சீட் பெல்ட் போடவில்லை; யூனிஃபார்ம் இல்லை; பேட்ஜ் இல்லை’ என்று ஏகப்பட்ட குற்றங்களைச் சேர்த்து மொத்தமாக 7,000 ரூபாய்க்கு அபராதம் கட்டி வந்திருக்கிறார் சண்முகநாதன்.

ஆந்திராவில் வரி அதிகம்!

டிரைவர் சண்முகநாதனுக்கு ஏன் இப்படி நேர்ந்தது? அவரைப்போல மற்ற டிரைவர்கள் இன்னல்களுக்கு ஆளாக இருக்க வேண்டுமனால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளோடு செல்ல வேண்டும்?
விவரிக்கிறார் ஃபாஸ்ட் டிராக் தூத்துக்குடி அலுவலகத்தின் ரீஜனல் மேனேஜர் சுந்தர். ‘‘தமிழ்நாட்டு எல்லையில் பெர்மிட் எடுத்துவிட்டு, அதை அடுத்த மாநில நுழைவு செக்போஸ்ட்டில் காண்பித்து சீல் வைத்து, வாகனத்துக்குத் தகுந்தாற்போல் பணம் செலுத்தி ரசீது வாங்க வேண்டும். அந்த பெர்மிட்டையும் ரசீதையும் வைத்து, நாம் குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த மாநிலத்தில் பயணிக்கலாம். திரும்பும்போது அதைக் காண்பித்துவிட்டு வந்துவிடுவது நடைமுறையில் இருந்துவந்தது. ஆனால், இப்போது அந்தந்த மாநிலத்துக்கு என்று ‘தலைக்கு இவ்வளவு’ என்று வரி கட்டச் சொல்கிறார்கள். வாடகை வாகனத்தில், இருக்கைக்கு 250 ரூபாய் வீதம் வரி வசூலிக்கிறார்கள். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, ஆந்திர மாநிலத்தில் இதற்கான வரி அதிகம். சண்முகநாதன் தமிழ்நாடு செக்போஸ்டில் பெர்மிட் வாங்கியிருக்கிறார். ஆனால், ஆந்திரா செக்போஸ்ட்டில் சீல் வைக்கவும், சீட் பெர்மிட் வாங்கவும் மறந்திருக்கிறார்.’’ என்றார்.

வாடகை வாகனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான பெர்மிட், வரி நடைமுறையில் இருக்கிறது. எனவே, புதிதாக மாநில எல்லை தாண்டும் டிரைவர்கள், அதற்கான நடைமுறை அறிந்துகொண்டு செயல்பட்டால், தேவையற்ற அபராதத்தில் இருந்து தப்பிக்கலாம்.ஒரே நாட்டில், சாலையில் பயணிப்பதற்கு வெவ்வேறு நடைமுறைகள் இருப்பதைக் களைய, மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் தீர்வு காணும் என்று நம்புவோம்.