1980-களில், என் அம்மாவுக்காக 30,000 ரூபாய்க்கு ஃபியட் கார் வாங்கினேன். அதுதான் என்னுடைய முதல் கார். அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை நான் வசிக்கும் சௌகார்பேட்டை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி. காரை பார்க்கிங் செய்வதுதான் இங்கே மிகப் பெரிய பிரச்னை. அதனால், சில ஆண்டுகளில் அந்த காரை விற்று விட்டேன். பின்பு 1990-களின் இறுதியில், பழைய மாருதி 800 வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். ஆனால், மீண்டும் அதே பார்க்கிங் பிரச்னை தலைதூக்க... அந்த காரையும் விற்றுவிட்டேன்.

அதன் பிறகு, அலுவலகத்துக்குப் போய் வருவதற்கு மிகச் சிரமமாக இருந்ததால், கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். அதில் மகாபலிபுரம் வரைகூட சென்றுவந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சின்ன விபத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிட்டேன். அலுவலகத்துக்குச் சென்றுவர சின்ன கார் ஒன்றை வாங்கலாம் என நினைத்தேன்.

ஏன் ரெனோ க்விட்?

கார் வாங்க முடிவு செய்தவுடன், இணைய தளங்களில் லேட்டஸ்ட் மாடல் கார்களைப் பற்றித் தேடித் தெரிந்துகொண்டேன். அவற்றில், ‘எது சிறந்த கார்?’ என ஆராய்ச்சியில் இறங்கியபோது, 3-4 லட்சம் ரூபாய் விலையில் உள்ள மற்ற கார்களைவிட, ரெனோ க்விட் அனைத்திலும் சிறப்பாக இருந்தது. மோட்டார் விகடன் இதழிலும் இந்த காரைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்த பின்பு, க்விட் கார் வாங்கலாம் எனத் தீர்மானித்தேன். மேலும், என்னுடைய நண்பர்கள் சிலர் ரெனோ டஸ்ட்டர் வைத்துள்ளதால், அவர்களும் ரெனோ நிறுவன காரை நம்பி வாங்கலாம் என நம்பிக்கை அளித்தனர். அதனால், கடந்த அக்டோபரில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ரெனோ ஷோரூமுக்குச் சென்றேன்.

ஷோரூம் அனுபவம்

ஷோரூமில் கஸ்டமர் சப்போர்ட் நன்றாக இருந்தது. இரண்டு முறை க்விட் காரை டெஸ்ட் டிரைவ் செய்தேன். முதல் டெஸ்ட் டிரைவுக்கு நான் மட்டும் சென்று, காரை ஓட்டிப் பார்த்தேன். பிறகு, உடன் வந்த ஷோரூம் அலுவலரை காரை ஓட்டச் சொல்லி, நான் பின் சீட்டில் உட்கார்ந்து பார்த்தேன். இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் டிரைவின்போது, என்னுடைய அண்ணன் மகனுடன் சென்றேன். அவர் ஆல்ட்டோ கார் வைத்துள்ளார். இதை ஓட்டிப் பார்த்த பின்பு, ஆல்ட்டோவைவிட இதன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ளதாகக் கூறினார். அதனால், உடனே 5,000 ரூபாய் முன்பணம் செலுத்தி, காரை புக் செய்தேன்.

‘டிசம்பர் மாத இறுதியில்தான் காரை டெலிவரி செய்ய முடியும்’ என்றனர். ஆனால், எனக்கு தை மாதம் பிறந்த பின்புதான் டெலிவரி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் கேட்டிருந்தபடி தை மாதம் கார் டெலிவரி தந்தனர்.

எப்படி இருக்கிறது ரெனோ க்விட்?

வாங்கி சில வாரங்களே ஆனதால், இதை வீட்டில் இருந்து அலுவலகத்துக்குச் செல்ல மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். ஒரே ஒருமுறை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்றோம். சிட்டி டிரைவிங்குக்கு ஏற்ற கார் க்விட். சின்ன கார் என்பதால், பார்க்கிங் பிரச்னை இல்லை. வெளித்தோற்றமும் பிரமாதமாக உள்ளது. பார்ப்பவர்கள் அனைவரும், கார் மிகவும் அழகாக இருக்கிறது என்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் எனது மகள்கள், காரின் புகைப்படங்களைப் பார்த்து அசந்துபோனார்கள். டிராஃபிக்கில் ஓட்டும்போது மிகவும் சௌகரியமாக உள்ளது. மற்ற 800 சிசி கார்களுடன் ஒப்பிடுகையில், இதில் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளன. இதில் தரப்பட்டுள்ள டச் ஸ்கிரீனில் GPRS, நேவிகேஷன், மேப்ஸ் போன்ற லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

ப்ளஸ்

இந்த காரின் முக்கியமான ப்ளஸ் பாய்ன்ட்டுகள் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும், டிக்கி இட வசதியும்தான். பெரிய ஸ்பீடு பிரேக்கரில் ஏறும்போதுகூட அடிபடாமல் செல்கிறது. 300 லிட்டருக்கு விசாலமான டிக்கி இருப்பதால், நிறைய பொருட்களை வைத்துக்கொள்ளலாம். காரைத் திருப்புவது சுலபமாக இருக்கிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க ப்ளஸ், பவர் ஸ்டீயரிங். இது, சிட்டியில் ஓட்டும்போது டிரைவிங் அனுபவத்தைச் சிறப்பாக்குகிறது. பவர் விண்டோஸ், முன்பக்கம் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது வசதியாகவே இருக்கிறது.

மைனஸ்

டச் ஸ்கிரீன் இருந்தும் இந்த காரின் மிகப் பெரிய மைனஸ், ரிவர்ஸ் கேமரா பொருத்தப்படாததுதான். சைடு மிரர்களில் பார்த்துப் பார்த்து அல்லது பின்னால் இருந்து யாராவது வழிகாட்டினால்தான் ரிவர்ஸ் எடுக்க முடிகிறது. நான் வசிக்கும் பகுதியில் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து என நெருக்கடி அதிகம் இருப்பதால், ரிவர்ஸ் எடுப்பது சிரமமாக இருக்கிறது. ஹெட்லைட் விஷயத்தில் எனக்குத் திருப்தி இல்லை. இதில் வெளிச்சம் குறைவாகவே உள்ளது. இன்னும் பிரகாசமாகவும் ஷார்ப்பாகவும் இருந்தால், இரவு நேரப் பயணங்களின்போது உதவியாக இருக்கும். ரிவர்ஸ் கியர், ஃபர்ஸ்ட் கியரின் அருகே இருப்பதால், சில நாட்களுக்குக் குழப்பமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.

என் தீர்ப்பு

நகரத்தில் வசிக்கும், சின்ன குடும்பத்துக்கு எற்ற கார் க்விட். கொடுக்கும் நான்கு லட்சம் ரூபாய்க்கு ஏற்ற, அழகான கார்!