தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள், கிட்டத்தட்ட வீடு போன்று ஏ.சி, டி.வி, வைஃபை, பாத்ரூம், படுக்கை அறை என அத்தனை வசதிகளுடனும் கோவையில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. எந்தத் தலைவர் வாகனத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்.

தமிழக அரசியல் தலைவர்களில், அதிநவீன வசதிகள்கொண்ட பிரசார வாகனம் முதல்வர் ஜெயலலிதா உடையதுதான். ஃபோர்ஸ் மோட்டார்ஸின் டிராவலர் வாகனம் சுறுசுறுப்பாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. நம் காதுக்கு எட்டிய வகையில், ஜெயலலிதா பிரசாரத்துக்கு என மூன்று வாகனங்கள், ஓய்வுக்கு என இரண்டு வாகனங்கள்.. ஆக மொத்தம் ஐந்து வாகனங்கள் அசுர வேகத்தில் தயாராகி வருகின்றன.

வால்வோ பேருந்துகளில் பயன்படுத்தப் படுவதைப்போல ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஜெயலலிதா வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எந்த அதிர்வும் இல்லாமல் பயணிக்கலாம். அடுத்து வேனில் நின்றபடி பேசாமல், அமர்ந்தபடியே பேசும் வகையில் ஹைட்ராலிக் லிஃப்ட் வசதியுடன் கூடிய நாற்காலி அமைக்கப்பட்டுள்ளது. முன்னிருக்கை சுழலும் வகையிலும், பின்னிருக்கை மேலும் கீழும் செல்லும் வகையிலும் அமைக்கப்படுகின்றன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீல் சேரை ஏற்றி இறக்க, பிரசார வேனில் வசதி செய்யப்பட்டுள்ளது. சோஃபா போன்ற வடிவமைப்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. DTH வசதியுடன் தொலைக்காட்சி பார்க்க வசதியாக ஹோம் தியேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, மல்ட்டி ஏர் சஸ்பென்ஷனும் செய்யப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் பிரசார வாகனங்கள் தயாராகிச் சென்றுவிட்டன. பென்ஸ் நிறுவனத்தின் வேன்தான் ஸ்டாலினின் பிரசார வாகனம். ஏற்கெனவே ‘நமக்கு நாமே’ பயணத்தில் பென்ஸ் நிறுவனத்தின் வாகனத்தைத்தான் அவர் பயன்படுத்தினார். அதுவே இப்போது தேர்தல் பிரசார வாகனமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த், பிரேமலதா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கான பிரசார வாகனங்களும் கோவையின் பல்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன. ஆனால், இவை பெரிய அளவில் வசதிகொண்டதாக இல்லை. வழக்கமான பிரசார வாகனங்களைப்போலத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.