Published:Updated:

டீசல் சண்டை வின்னர் யார்?

ஒப்பீடு: மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா Vs ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தொகுப்பு: ர.ராஜா ராம மூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரை விற்பனைக்குக் கொண்டுவந்த இரண்டு நாட்களிலேயே, ஃபோர்டு நிறுவனம் எக்கோஸ்போர்ட் காரின் விலையை அதிரடியாகக் குறைத்தது. டீசல் எக்கோஸ்போர்ட் கார்களின் விலை இப்போது முன்பைவிட சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரை குறைவு. இப்போது டாப் வேரியன்ட்டான எக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்+ மாடலின் விலை, 11.63 லட்ச ரூபாய் (சென்னை ஆன்ரோடு). ஆனால், டாப் வேரியன்ட்டான ப்ரெஸ்ஸா ZDi+ மாடலின் விலை 11.46 லட்சம்.   சபாஷ் ... சரியான போட்டி!

ஓட்டுதல் தரம், கையாளுமை

எக்கோஸ்போர்ட் காரை ஓட்ட ஆரம்பிக்கும்போதே... பிடிக்கிறது. ஷார்ப்பான ஸ்டீயரிங், கச்சிதமான பாடி கன்ட்ரோல் என ஒவ்வொரு வளைவிலும் வசீகரிக்கிறது எக்கோ ஸ்போர்ட்டின் கையாளுமை.
மாருதியின் விட்டாரா ப்ரெஸ்ஸா, வளைவுகளில் நம்பிக்கையுடன் கிரிப்பாகத் திரும்பினாலும், எக்கோ ஸ்போர்ட் தரும் உற்சாகம் இதில் இல்லை. தேவையற்ற பாடி ரோல் இல்லை என்றாலும், எக்கோ ஸ்போர்ட்டில் இருக்கும் ஸ்டீயரிங் ஃபீல் இதில் இல்லவே இல்லை. ஓட்டுதல் தரத்தில் இரண்டு கார்களும் நன்றாகவே இருக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளில் எக்கோஸ்போர்ட் சஸ்பென்ஷன்தான் பெஸ்ட்.

டீசல் சண்டை வின்னர் யார்?

இன்ஜின்

எக்கோஸ்போர்ட் காரில் இருக்கும் லேட்டஸ்ட் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 98.9bhp சக்தியை 3,750 ஆர்பிஎம்-மிலும் 20.9kgm டார்க்கை 1,750-3,250 ஆர்பிஎம்-மிலும் அளிக்கிறது. பவர் மிகவும் சீராக வெளிப்படுவது நகர டிராஃபிக்கில் பேருதவியாக இருக்கிறது. இதனால், குறைந்த வேகங்களில் கொஞ்சம் சுமாராக இயங்கும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை நோண்டிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை.

விட்டாராவிலும் கியர்ஷிஃப்ட் சூப்பராக இல்லைதான். ஆனால், கிளட்ச் லைட்டாக இருக்கிறதே! குறைந்த ஆர்பிஎம்-ல் சரியான கியரில்தான் இருக்கிறோமா என்கிற கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. காரணம், இதன் 88.5bhp சக்தியையும், 20.4kgm டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின், 2,000 ஆர்பிஎம்-க்கு கீழே க்விக்காக இல்லை. ஆனால், மிட்-ரேஞ்ச் சிறப்பாகவே இருக்கிறது. 5,000 ஆர்பிஎம்-க்கு மேலும் நல்ல பவர் டெலிவரி.

மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை அடைய 12.96 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது விட்டாரா. எக்கோஸ்போர்ட் இதே வேகத்தை அடைய 13.67 விநாடிகள் ஆகிறது. விட்டாரா, எக்கோஸ்போர்ட்டைவிட சுமார் 10bhp சக்தி குறைவாக இருந்தாலும், எடையில் 95 கிலோ குறைவு. இது, பெர்ஃபாமென்ஸில் உதவினாலும், விட்டாராவின் கட்டுமானம் லைட்டாக இருக்கும் உணர்வைத் தருகிறது.

டீசல் சண்டை வின்னர் யார்?
டீசல் சண்டை வின்னர் யார்?

உள்பக்கம்

இரண்டு கார்களின் கேபின்களும் முற்றிலும் மாறுபட்டவை. விட்டாரா பிரெஸ்ஸாவின் கேபின் அகலமாக, உள்ளே புழங்க வசதியாக இருக்கிறது. ஆனால், எக்கோஸ்போர்ட் காரின் தடிமனான A,  C பில்லர்கள் பார்வையை மறைக்க, விட்டாரா விசாலமான பார்வையைத் தருகிறது.

பிரெஸ்ஸாவின் 7-இன்ச் டச் ஸ்கிரீன் பார்க்க தெளிவாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. எக்கோஸ்போர்ட் காரின் உள்பக்க பிளாஸ்டிக்ஸ், முன்பைவிட முன்னேற்றப்பட்டிருந்தாலும் சிறப்பாக இல்லை.

எக்கோஸ்போர்ட் காரின் டேஷ்போர்டு அவ்வளவு யூத்ஃபுல்லாக இருந்தாலும், பயன்படுத்த ஈஸி இல்லை. சென்டர் கன்ஸோலில் நிறைய பட்டன்கள். SYNC இன்ஃபோடெயின்மென்ட் சிறிதாகவும், ஓட்டும்போது படிக்க வசதியாகவும் இல்லை.

டீசல் சண்டை வின்னர் யார்?
டீசல் சண்டை வின்னர் யார்?

எக்கோஸ்போர்ட் காரின் முன்னிருக்கைகள் பார்க்க சூப்பராக இருந்தாலும், சொகுசாக இருப்பது என்னவோ, பிரெஸ்ஸாவின் இருக்கைகள்தான். கேபினில் பொருட்கள் வைக்க இடம் இரண்டு கார்களிலும் போதுமான அளவு இருக்கின்றன.

விட்டாராவின் பின்னிருக்கை இடவசதி ஓகே! மூன்று பேர் தாராளமாக விட்டாராவின் பின்னிருக்கையில் பயணிக்கலாம். எக்கோஸ்போர்ட் பின்னிருக்கையில் மூன்று பேர் வசதியாகச் செல்ல முடியாது. ஆனால், சீட் சப்போர்ட்டில் எக்கோஸ்போர்ட்தான் பெஸ்ட்.

இரண்டு கார்களின் பின் இருக்கைகளுமே 60:40 டைப்பில் ஸ்பிளிட் செய்ய முடியும். பின்னிருக்கைகள் மடிக்காமல், எக்கோ ஸ்போர்ட்டில் 362 லிட்டர் கொள்ளளவு இடம் இருக்க, பிரெஸ்ஸாவில் 328 லிட்டர் இடம் மட்டுமே இருக்கிறது.

வசதிகள்

இரண்டு கார்களிலும் புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங்-மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல்ஸ், ப்ளூடூத், ஆடியோ ஸ்ட்ரீமிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரெயின் - சென்ஸிங் வைப்பர்ஸ் ஆகிய வசதிகள் உள்ளன. ஆப்பிள் CarPlay வசதியை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பிரெஸ்ஸாவில் உண்டு. டாப் வேரியன்ட்டில் சேட்டிலைட் நேவிகேஷன், ரிவர்ஸ் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகளும் உள்ளன.

டீசல் சண்டை வின்னர் யார்?

எக்கோஸ்போர்ட் காரின் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், மாருதி அளவுக்கு இல்லையென்றாலும்,

டீசல் சண்டை வின்னர் யார்?

விபத்து ஏற்பட்டால் தானாகவே உதவிக்கு அழைக்கும் ‘எமெர்ஜென்சி அசிஸ்ட்‘ சிஸ்டம் கொண்டுள்ளது. அதேபோல், டாப் வேரியன்ட் எக்கோஸ்போர்ட்டில் 6 காற்றுப் பைகள் இருக்க, மாருதியில் 2 காற்றுப் பைகள் மட்டுமே!

தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது, எக்கோஸ்போர்ட்தான் யூத்ஃபுல். நல்ல இன்ஜின், பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், கையாளுமைதான் எக்கோஸ்போர்ட்டின் ப்ளஸ் பாயின்ட். டிஸைனைப் பொறுத்த வரை பிரெஸ்ஸா வழக்கமான மாருதிதான். பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை மாருதி பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறது. மைலேஜ் விஷயத்திலும் பிரெஸ்ஸா பெஸ்ட்தான். ஓவரால் வின்னராக ஆட்சியைப் பிடிக்கிறது, விட்டாரா பிரெஸ்ஸா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு