Published:Updated:

இன்னும் உறுதியாக...

ஃபேஸ்லிஃப்ட்: ரெனோ டஸ்ட்டர் ராகுல் சிவகுரு, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டைத் துவக்கிவைத்த பெருமை, ரெனோ டஸ்ட்டரையே சேரும். ஆனால், இப்போது இந்த செக்மென்ட்டின் ராஜாவாகத் திகழ்வது, ஹூண்டாய் க்ரெட்டா. எனவே, இழந்ததை மீட்க - மேம்படுத்தப்பட்ட தோற்றம், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய AMT கியர்பாக்ஸ் கொடுத்து, புத்துணர்ச்சி அளித்துள்ளது ரெனோ.

அடிப்படை வடிவம் அப்படியே இருந்தாலும், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், ப்ரெஷ்ஷாக இருக்கிறது டஸ்ட்டர். 2012-ல் அறிமுகமான டஸ்ட்டரின் மிகப் பெரிய மைனஸாக இருந்தது, டல் கேபின். கறுப்பு மற்றும் சாக்லெட் ப்ரவுன் நிற பிளாஸ்டிக்ஸ் மூலம் அந்தக் குறைபாட்டை ஓரளவுக்குச் சீர்செய்துள்ளது ரெனோ. டேஷ்போர்டில் சில்வர் மற்றும் க்ரோம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேபின் தரம் ஒட்டுமொத்தமாக உயர்ந்திருந்தாலும், க்ரெட்டா அளவுக்கு இல்லை.

இன்னும் உறுதியாக...

104PS பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 85PS மற்றும் 110PS பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. ஃப்ரன்ட் வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவதுடன், 110PS மாடலில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. Easy-R எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய 6-ஸ்பீடு AMT கியர்பாக்ஸை, 110PS ஃப்ரன்ட் வீல் டிரைவ் மாடலில் ஆப்ஷனலாக அளித்துள்ளது ரெனோ. இதனுடன் AMT கியர்பாக்ஸ்களிலே முதன்முறையாக Hill-Start Assist வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மிதமான வேகத்தில் செல்லும்போது, கியர்பாக்ஸின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. மற்ற AMT கியர்பாக்ஸைவிட ரெனோவின் Easy-R-ல் கியர் மாற்றுவது ஸ்மூத்தான். ஆனால், ஓவர்டேக் செய்ய ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, உடனடியாகச் செயல்பட மறுக்கிறது. க்ரெட்டாவின் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் அளவுக்கு ரெனோவின் AMT கியர்பாக்ஸ் இல்லை. ஆனால், மற்ற AMT கியர்பாக்ஸைவிட இது பெஸ்ட்.

குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும்போது, பழைய டஸ்ட்டரின் ஸ்டீயரிங்கில் இருந்த அதிர்வுகள் குறைந்திருக்கின்றன. 4 வீல் டிரைவ் மாடலின் பின்பக்கம், இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷனைப் பொருத்தியிருக்கிறது ரெனோ. ஆனால், இதில் AMT கியர்பாக்ஸ் இல்லாதது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

இன்னும் உறுதியாக...

டஸ்ட்டரில் குறைகளாக இருந்த பலவற்றை, இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் சரிசெய்துவிட்டது ரெனோ. கேபின் பளிச்சென இருப்பதுடன், டாப் வேரியன்ட்டில் புதிய சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளன. காரின் டிஸைன் ப்ரெஷ்ஷாக மாறியிருந்தாலும், தனது எஸ்யுவி கெத்தை விட்டுக்கொடுக்கவில்லை. இதிலுள்ள AMT கியர்பாக்ஸ், டார்க் கன்வெர்ட்டர் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்போல துல்லியமாக இல்லாவிட்டாலும், காரை எளிதாக ஓட்ட முடிவதே பெரிய ப்ளஸ்.

Easy-R கியர்பாக்ஸ், இந்த இன்ஜினின் பவரைச் சற்று மழுங்கச் செய்வது போலத் தெரிந்தாலும், மேனுவல் மோடில் கியர் மாற்றினால், ஓவர்டேக் செய்வது சுலபமானதாக மாறிவிடுகிறது. இதன் மைலேஜும் கிட்டதட்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு இணையாகவே இருக்கும்.

டஸ்ட்டரின் இரு வேரியன்ட்களில் AMT கியர்பாக்ஸை வழங்கியிருக்கும் ரெனோ, அவற்றின் விலைகளை AMT RxL - 14.34 லட்சம் மற்றும் AMT RxZ - 15.76 லட்சம் (சென்னை ஆன் ரோடு) என மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களைவிட 70,000 ரூபாய் அதிகமாக நிர்ணயித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு