Published:Updated:

அமேஸுக்கு இது புதுசு!

ஃபேஸ்லிஃப்ட் : ஹோண்டா அமேஸ் CVT தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

திக இடவசதி, நல்ல பெர்ஃபாமென்ஸ், கச்சிதமான டிஸைன் எனப் பல சாதகமான விஷயங்களைக்கொண்ட ஹோண்டா அமேஸ் 2013-ல் அறிமுகமானபோது, வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைப் பெற்றது. ஆனால், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ, ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஜெஸ்ட் எனப் போட்டியாளர்கள் வரிசை கட்டி வந்ததால், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, அமேஸுக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ளது ஹோண்டா.

டிஸைன், உள்பக்கம்

அமேஸை ஷார்ப்பாகக் காட்டுவதற்காக, காரின் முன்பக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது ஹோண்டா. பழைய காரில் இருந்த சின்ன கிரில்லுக்குப் பதிலாக, இரு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் க்ரோம் பட்டையுடன் கிரில்லின் அளவு பெரிதாகி இருக்கிறது.

காரின் கதவைத் திறந்தவுடன் நம்மை வரவேற்பது முற்றிலும் புதிய டேஷ்போர்டு. பழைய காரின் டேஷ்போர்டு டல்லாகவும், முறையற்ற வடிவத்தையும் (சென்டர் கன்ஸோல்) கொண்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட அமேஸில் சென்டர் கன்ஸோல் ஒரே சீராக இருப்பதுடன், பியானோ ப்ளாக் ஃபினிஷில் இருக்கும் மல்ட்டி மீடியா சிஸ்டம் மற்றும் ஏ.சி கன்ட்ரோல்கள் ஈர்க்கின்றன. பீஜ் - கறுப்பு என இரட்டை வண்ணத்தில் இருக்கும் டேஷ்போர்டில், ஆங்காங்கே சில்வர் பயன்படுத்தப்பட்டிருப்பது க்ளாஸ்.

அமேஸுக்கு இது புதுசு!
அமேஸுக்கு இது புதுசு!

ப்ளுடூத், மொபைல்போன் வசதிகளைக் கொண்ட ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, மல்ட்டி இன்பஃர்மேஷன் டிஸ்ப்ளே உடனான இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் எனக் கூடுதல் சிறப்பம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் ஹோண்டாவின் Connect பேக்கேஜ் ஆப்ஷனலாகக் கிடைக்கிறது. இது தவிர, வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும் விண்ட் ஷீல்ட் மற்றும் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கும் அளவைக் குறைக்கும் Sound Insulation என உபயோகமான முன்னேற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

அமேஸுக்கு இது புதுசு!
அமேஸுக்கு இது புதுசு!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, புதிய CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கியர்பாக்ஸ், பழையதைவிட 16 சதவிகிதம் எடை குறைவாகவும், 24 சதவிகிதம் கூடுதல் ரேஷியோக்களையும் வழங்குவதால், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுடன் ஒப்பிடும்போது, இன்ஜின் பவர், டார்க், மைலேஜ் ஆகியவை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் சற்று அதிகரித்திருக்கின்றன. அமேஸில் இருக்கும் ஸ்மூத்தான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி அமைத்து, சிறப்பாகச் செயல்படுகிறது. குறைவான வேகங்களில் போதுமான டார்க் கிடைப்பதுடன், நெடுஞ்சாலைக்கு ஏற்ற வேகத்தில் செல்லும்போது, 4,000 ஆர்பிஎம் வரை கியர்கள் ஹோல்டு செய்யப்படுவதால், நல்ல ஆக்ஸிலரேஷன் கிடைக்கிறது. கியர்கள் உடனடியாக மாறுவதுடன், S, L கியர் மோடுகள் ஸ்பெஷல். மலைப் பிரதேசங்களில் பயணிப்போருக்கு உதவும் வகையில் இருக்கிறது.

பழைய காரில் இருந்த அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான் புதிய காரிலும் இருக்கிறது என்றாலும், இன்ஜின் சத்தம் குறைந்திருப்பதை உணர முடிகிறது. கிளட்ச் பயன்படுத்த சற்று ஹெவியாக இருந்தாலும், கியர்பாக்ஸ் துல்லியமாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு