Published:Updated:

சம்திங் ஸ்பெஷல்!

ஃபர்ஸ்ட் ரைடு: வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரிதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவுக்கு க்ராஸ்ஓவர் கார்கள் புதிது அல்ல. ஃபியட் அவென்ச்சுரா, i20 ஆக்டிவ், போலோ க்ராஸ், எட்டியோஸ் க்ராஸ் போன்ற க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக்குகள், டாடா ஆரியா, S-க்ராஸ் போன்ற க்ராஸ்ஓவர் எம்பிவிக்கள் என எல்லாம் ஓகேதான். ‘ஆனால், க்ராஸ்ஓவர் செடான் கொஞ்சம் ஓவராகத்தானே இருக்கிறது?’ என நாம் நினைக்க, S60 க்ராஸ் கன்ட்ரி காருடன் மெய்டன் ஓவரை வீசியிருக்கிறது வால்வோ.

உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன், ஆல்-வீல் டிரைவ், 201 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என கடமைக்கு கிராஸ்ஓவராக S60 செடான் மாற்றப்படவில்லை. இமேஜுக்காக வீல் ஆர்ச் கிளாடிங்குக்கள், சில்வர் கலர் ஸ்கஃப் பிளேட்ஸ், ஹனிகோம்ப் க்ரில் என தோற்றத்திலும் கார் வித்தியாசம்தான். பெரிய வீல்களும், டயர்களும் காருக்கு மிரட்டலான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

செடான் வாங்க விரும்பும் ஆனால், இரண்டாவது காராக எஸ்யுவி வாங்க விரும்பாத வாடிக்கையாளர்களையே இந்த கார் மூலம் டார்கெட் செய்கிறது வால்வோ. அவ்வப்போது மோசமான சாலைகளைத் தாண்டி இருக்கும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகளுக்குச் செல்ல இந்த கார் பெஸ்ட் என்கிறது வால்வோ.

சம்திங் ஸ்பெஷல்!
சம்திங் ஸ்பெஷல்!

S60 க்ராஸ் கன்ட்ரி காரின் உள்பக்கம், செடான் காரைப் போலவே இருப்பது கொஞ்சம் போர்தான். காரின் கேபினும் பார்த்துப் பார்த்து பழகிய டிஸைன். பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்று உள்பக்கம் எக்ஸைட்டிங்காக இல்லை. க்ராஸ் கன்ட்ரி மாடல் டாப் வேரியன்ட்டில் மட்டுமே விற்பனையாவதால் முன்பக்க எலெக்ட்ரிக் இருக்கைகள், டிரைவர் சீட் மெமரி, சேட்டிலைட் நேவிகேஷன், முன்/பின் பார்க்கிங் சென்ஸார், ரியர்வியூ கேமரா, வால்வோவின் டிரேட்மார்க் பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாகக் கிடைக்கின்றன. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் லேட்டஸ்டாகத் தெரிந்தாலும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பழையதாகத் தெரிகிறது.

சம்திங் ஸ்பெஷல்!

முன்னிருக்கைகள் வசதியாக, சொகுசாக உள்ளன. பின்னிருக்கைகள் சற்றுத் தாழ்வாக உள்ளன. முன்னிருக்கையில் உட்கார்ந்து பார்த்தால், உயரமான காரில் அமர்ந்த உணர்வு இல்லை.

189 bhp சக்தியையும், 42.83 kgm டார்க்கையும் அளிக்கும் 2.4 லிட்டர் D4 டீசல் இன்ஜினைக்கொண்டிருக்கிறது S60 க்ராஸ் கன்ட்ரி. இதனுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. ரொம்பவே த்ரில்லான இன்ஜின் இல்லையென்றாலும், பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவே உள்ளது. 1.7 டன் எடை கொண்ட இந்த கார், 0-100 கி.மீ வேகத்தை 8.2 விநாடிகளில் கடக்கிறது. குறைந்த ஆர்பிஎம்-ல் சத்தம் குறைவு என்றாலும், 1,800 ஆர்பிஎம் மேல் சத்தம் அதிகரிக்கிறது.

சம்திங் ஸ்பெஷல்!
சம்திங் ஸ்பெஷல்!

காரின் உயரத்தை அதிகரித்ததால், சஸ்பென்ஷனை இறுக்கியுள்ளது வால்வோ. இதனால், ஓட்டுதல் தரம் சற்று இறுக்கமாக இருந்தாலும், கடுப்பேற்றும் அளவுக்கு இல்லை. கையாளுமை நியூட்ரல்தான். ஆல் வீல் டிரைவ் இருந்தாலும், கையாளுமையில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

 ஒரு செடான் காருக்கான சொகுசு, இமேஜைத் தரும் அதே நேரத்தில், ஒரு எஸ்யுவிக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ், கரடுமுரடுத் தன்மையும் தருகிறது S60 க்ராஸ் கன்ட்ரி. சுமார் 39 லட்சம் ரூபாய் விலையில், ஜெர்மன் காம்பேக்ட் சொகுசு எஸ்யுவிகளுடன் நேரடியாகப் போட்டியிடுகிறது. சம்திங் ஸ்பெஷல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு