பிரீமியம் ஸ்டோரி

விட்டாச்சு லீவு.... விடுமுறைக்குச் சுற்றுலா செல்ல பலரும் தயாராகிக்கொண்டிருக்கும் காலம். ஆனால், பயணம் பாதுகாப்பானதாக அமைந்தால்தான் விடுமுறையும் இனிக்கும்.

• காற்றுப் பைகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்கு உறுதுணையாக நிற்கும். குழந்தைகளை முன்சீட்டில் உட்கார வைக்க வேண்டாம்.

•   கடைசி நேரத்தில் அவசர அவசரமாகப் கிளம்பாதீர்கள். ‘நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்’ என்று உடன் பயணிப்பவர்கள் சொன்னால், அதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
 

• மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது கவனம் தேவை. முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், சமாளிப்பது சிரமம். செல்போன் பேசிக்கொண்டே காரை ஓட்டாதீர்கள். உங்களுக்கான வழியில் (Lane) காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது, இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டு வேறு வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்தபிறகு ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள்.

•   வேகமாகச் செல்லும் வாகனங் களுக்கு வலதுபக்கம் வழி கொடுங்கள். இடதுபக்கமாக ஓவர்டேக் செய்யாதீர்கள்; செய்ய அனுமதிக்காதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாகப் பயன்படுத்துங்கள்.

விட்டாச்சு லீவு!

•   ஓவர்டேக் செய்யும்போதுதான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன என்பது நினைவில் இருக்கட்டும். அதனால், ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனம் தேவை.

•   பாதசாரிகள் கடக்கும் இடம், ரயில்வே கிராஸிங், இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக் கூடாது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஓவர்டேக் செய்யக் கூடாது.

•   கார் ஓட்ட மிக மிக அவசியம், முடிவெடுக்கும் திறன். சாலையில் செல்லும்போது உடனுக்குடன் முடிவெடுக்க வேண்டும். சாலையின் நடுவில் கார் ஓட்டிக்கொண்டு யோசிக்கக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றபடி உடனடியாக முடிவெடுத்து காரை ஓட்ட வேண்டும்!

• சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி ‘வார்னிங் லைட்ஸ்’ ஒளிரவிடுங்கள். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்துவிட்டு, எமெர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்யுங்கள்.

விட்டாச்சு லீவு!

•   டயர்களுக்குக் காற்று நிரப்பும்போது, மறக்காமல் ஸ்டெஃப்னி வீலுக்கும் காற்றை நிரப்புங்கள். ட்யூப்லெஸ் டயர்களாக இருந்தாலும்கூட ஸ்பேர் ட்யூப் இருப்பது நல்லது. காரணம், ட்யூப்லெஸ் டயரில் சைடு வாலில் பஞ்சரானால் காற்று நிற்காது.

•   ட்யூப்லெஸ் டயருக்கான பஞ்சர் கிட், சீலன்ட் கிட் கைவசம் எப்போதும் இருக்க வேண்டும். நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், 12 வோல்ட்டில் இயங்கும் போர்டபிள் ஏர் கம்ப்ரஸர் அல்லது ஃபுட் பம்ப் வைத்திருப்பது சிறந்தது.

•   கார் ஓட்டுபவருடன் ஒருவர் பேசிக் கொண்டே வருவது அவசியம். காருக்குள் இருக்கும் எல்லோரும் தூங்கும்போது, ஓட்டுபவருக்கும் தூக்கம் எளிதில் தொற்றிக்கொள்ளும்.

•   பயணங்களின்போது காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். விரைவில் ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

விட்டாச்சு லீவு!

• பயணத்தின்போது நீண்ட நேரம் காரில் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பத்தைத் தணிக்க ஃப்ரெஷ் ஜூஸ், இளநீர் உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு