Published:Updated:

தெறி (1) - டுகாட்டி!

ஃபர்ஸ்ட் ரைடு: டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா 1200Sதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா... மோட்டார் சைக்கிள் உலகில், பன்முகத்தன்மை கொண்ட மிகச் சில பைக்குகளில் ஒன்று. தொழில்நுட்பரீதியாக பைக்கை எண்ணற்ற முறையில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும் என்று நிரூபித்தது. இந்த நிலையில், மூன்றாவது தலைமுறை மல்ட்டிஸ்ட்ராடா பைக்கைக் களமிறக்கியுள்ளது டுகாட்டி. ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று உணர்த்துகிறது புதிய பைக்.

புதிய மல்ட்டிஸ்ட்ராடாவைப் பார்த்தால், ‘இது புதிய பைக்’ என்று நம்புவதற்குச் சில நிமிடங்கள் ஆகும். டிஸைனில் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதால் இந்த நிலை. ஆனால், பைக்கின் முன்பக்கம் முன்பைவிட பெரிதாக, அகலமாக இருக்கிறது. ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை நிறைய மாற்றங்கள் கண்டிருக்கின்றன. இப்போது ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

‘இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட்’ (IMU) எனும் மல்ட்டி சென்ஸார் தொழில்நுட்பம், பைக்கின் அசைவுகளை ஐந்து ஆக்ஸஸ்களில் உணர்ந்து, சஸ்பென்ஷனை எலெக்ட்ரானிக்கலாக மாற்றி அமைக்கிறது. கார்னரிங் ஏபிஎஸ், டுகாட்டி வீலி கன்ட்ரோல், கார்னரிங் லைட் என அனைத்தையும் கவனிப்பது இந்த IMUதான். அர்பன், டூரிங், ஸ்போர்ட், எண்ட்யூரோ என நான்கு டிரைவிங் மோடுகள் கொண்டுள்ளது மல்ட்டிஸ்ட்ராடா.

தெறி (1) - டுகாட்டி!

மிக முக்கியமான மாற்றம் இன்ஜினில்தான். இப்போது சேர்க்கப்பட்டிருக்கும் DVT - அதாவது, டுகாட்டி வேரியபிள் டைமிங், இன்டேக் மட்டுமல்லாமல் எக்ஸாஸ்ட் வால்வையும் சேர்த்தே அட்ஜஸ்ட் செய்கிறது. மேலும், ஆன்ட்டி-நாக் சென்ஸாரும் இப்போது இருக்கிறது.

தெறி (1) - டுகாட்டி!

ஆனால், இந்த L-ட்வின் இன்ஜின், குறைந்த ஆர்பிஎம்-களில் இன்னும் ஸ்மூத்தாக இயங்கலாம். ஏனென்றால், குறைந்த வேகங்களில் கொஞ்சம் ஜெர்க் இருக்கவே செய்கிறது. அர்பன் மோடில், பவர் டெலிவரி பற்றிக் கவலைப்படாமல் நகர டிராஃபிக்கில் ஓட்ட முடிகிறது. இந்த மோடில் திராட்டில் ரெஸ்பான்ஸை சாஃப்ட்டாக ஆக்குவதுடன் இல்லாமல், பவரை 100bhp-க்கு லிமிட் செய்கிறது.  ஸ்போர்ட் மோடில், டிராஃபிக் இல்லாத சாலை கிடைத்தால் தெறிக்கவிடுகிறது மல்ட்டிஸ்ட்ராடா. 3,000 ஆர்பிஎம்-க்கு மேல் வேகம் பிடித்தாலும், 6,000 ஆர்பிஎம் தாண்டி, 10,500 ஆர்பிஎம் வரை செம த்ரில்!

தெறி (1) - டுகாட்டி!

ஏகப்பட்ட எலெக்ட்ரானிக் சமாசாரங்கள் கையாளுமைக்குக் கை கொடுத்தாலும், ஆரம்பத்தில் கையாளுமை நம்பிக்கை அளிக்கவில்லை. ஆனால், டூரிங் மோடில் ‘ஹார்டு’ செட்டிங் கன்ட்ரோலுக்கும், சொகுசுக்கும் நல்ல பேலன்ஸை அளித்தது. ஸ்போர்ட் மோடில், ‘ஹார்டு’ செட்டிங் தீவிரமான ரைடிங்குக்குதான்.

தெறி (1) - டுகாட்டி!

254 கிலோ எடை இருந்தாலும், பைக்கை வளைத்துத் திருப்பி ஓட்ட எளிதாக இருப்பது சர்ப்ரைஸிங். ஆனால், பைரலி ஸ்கார்பியன் ட்ரெயில் II டயர்கள், ஆஃப் ரோடு பெர்ஃபாமென்ஸுக்காகவும், லைஃப்புக்காகவும் கிரிப்பைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறது. பிரெம்போ M50 மோனோ பிளாக் கேலிபர் பிரேக்குகள் கச்சிதமாக இயங்குகின்றன.

தெறி (1) - டுகாட்டி!

கியர்பாக்ஸ், டயர்கள் மட்டும் இந்த பைக்கில் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்த இரண்டைத் தவிர, மல்ட்டிஸ்ட்ராடாவைக் குறை சொல்லவே முடியாது. 18 லட்ச ரூபாய் (உத்தேசமாக) விலை அதிகம்தான். ஆனால், தவிர்க்க முடியாத பைக்காக இருக்கிறதே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு