Published:Updated:

பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!
பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!

மல்ட்டிலெவல் கார் பார்க்கிங் ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

‘எங்கிட்ட கார் இருக்கே’ என்கிற பெருமை காணாமல் போவது எப்போது என்றால், பார்க்கிங் செய்ய இடம் கிடைக்காதபோதுதான். ஹோட்டல்களுக்குச் சென்றால், நாம் பார்க்கிங் செய்வதற்குள் உடன் வந்தவர்கள் உணவை முடித்து விடுவார்கள். காரில் கெத்தாகப் போய், ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் பார்க்கிங் செய்துவிட்டு, அங்கிருந்து நடந்து செல்லும் சூழலையும் பலர் அனுபவித்திருப்பீர்கள்.

பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!

சென்னையைப்போன்று இன்னும் கடுமையான நெருக்கடியை கோவை சந்திக்கவில்லை என்ற போதும், நெருக்கடியை உணர ஆரம்பித்து விட்டது. துணிக் கடைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில கார்களை பார்க் செய்ய மட்டுமே இடவசதி உள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகளில் அதிகபட்சம் 50 கார்கள் வரை நிறுத்தலாம். ஒரே நேரத்தில் 100-க்கும் அதிகமான கார்கள் வந்தால், மற்ற கார்கள் பார்க்கிங் செய்ய காத்திருக்க வேண்டும் அல்லது வேறு இடம் தேடி அலைய வேண்டும். நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் எங்குதான் கார்களை நிறுத்த முடியும் எனக் கவலையில் இருந்தவர்களுக்கு, கோவையில் தற்போது அடுத்தடுத்து அமலாகி வரும் மல்ட்டிலெவல் கார் பார்க்கிங் சிஸ்டம் சற்று நிம்மதியை அளித்துள்ளது. பெரிய ஜவுளி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் மல்ட்டிலெவல் பார்க்கிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளது.

பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!


இந்தியாவிலேயே மிகப் பெரிய, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தானியங்கி மல்ட்டிலெவல் பார்க்கிங் சிஸ்டத்தை கோவை ஜி.கே.என்.எம். மருத்துவ மனையில் அமைத்துள்ளது, கோவையைச் சேர்ந்த சீகர் பார்க்கிங் நிறுவனம். ஒரே நேரத்தில் 375 கார்களை இங்கு பார்க்கிங் செய்ய முடியும். ஐந்து அடுக்குகளாக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட ஸ்டீல் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதில், மிக எளிமையாக பார்க்கிங் செய்துவிட முடிகிறது. ‘அப்படியா?’ என்ற கேள்வியுடன், சீசர் பார்க்கிங் நிறுவனத்தின் குவாலிட்டி பிரிவைச் சேர்ந்த செந்திலிடம் பேசினோம். ‘‘எழுபது கார் நிறுத்தும் இடத்தில் 375 கார்களை நிறுத்த முடியும். காரை எந்த இடத்தில் பார்க்கிங் செய்ய வேண்டும் எனத் தேட வேண்டியது இல்லை. 60 விநாடியில் உங்கள் காரை பார்க்கிங் செய்துவிடலாம். ஒரே நேரத்தில் 12 கார்களை வெவ்வேறு இடங்களில் பார்க்கிங் செய்ய வசதியாக, 12 சிஸ்டம் இங்கே அமைத்துள்ளோம்” என்றவர், பார்க்கிங் செய்யும் நடைமுறையையும் விளக்கினார்.

பார்க்கிங் இப்போ ஈஸி! - ஒரே நேரத்தில் 375 கார்கள்!

“ரேம்ப்பின் குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டால் போதும். அதுவே உங்கள் காரை பத்திரமாக மேலே கொண்டு போய் பார்க்கிங் செய்துவிடும். திரும்ப எடுக்க வரும்போது, உங்கள் கார் நம்பரைச் சொன்னால் போதும்; கார் உடனே கீழே வந்துவிடும். கார் பார்க்கிங் செய்யும் ஒவ்வொரு இடத்திலும் இரண்டு சென்ஸார்கள் இருக்கின்றன. ஒன்று, காரையும் மற்றொன்று, மனிதர்களையும் கண்டுபிடிக்கும். அதாவது பார்க்கிங் செய்யும்போது, கார் உள்ளே போகும் போது காரை சென்ஸார் மூலம் உணர்ந்து கொள்ளும்!” என்றார்.

இந்த மல்டிலெவல் பார்க்கிங் சிஸ்டம் அமைக்க செலவிடப்பட்ட தொகை 13 கோடி ரூபாயாம். இதுதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய மல்ட்டிலெவல் பார்க்கிங் சிஸ்டம்.

சென்னையில் தெருவுக்கு இரண்டு வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு