இந்தியாவில் கார், கமர்ஷியல் வாகனம் மற்றும் ஆஃப் ரோடு வாகனத் துறையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டயர் தயாரிப்பில் கோலோச்சி வருகிறது அப்பல்லோ டயர்ஸ். இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு, சென்னை, கொச்சி, பரோடா ஆகிய இடங்களில் மூன்று தொழிற்சாலைகளும் நெதர்லாந்தில் ஒரு தொழிற்சாலையும் உள்ளன. ஹங்கேரியிலும் தொழிற்சாலை அமைத்துக்கொண்டிருக்கிறது. 100 நாடுகளுக்கும் மேல் டயர்களை ஏற்றுமதியும் செய்துவருகிறது அப்பல்லோ நிறுவனம்.

அப்பல்லோ இதுவரை இரு சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் இறங்காமல் இருந்தது. இப்போது ஆஃப்டர் மார்க்கெட்டில் மற்ற டூ வீலர் டயர் நிறுவனங்களுக்குச் சவால்விடும் வகையில், ஆறு விதமான டயர்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்களுக்கு நேரடியாக டயர்களை சப்ளை செய்துவிட்டு, அதன் பிறகுதான் ஆஃப்டர் மார்க்கெட் சந்தையில் நுழைவதுதான் டயர் தயாரிப்பாளர்களின் வழக்கம். ஆனால், அப்பல்லோ நிறுவனம் நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இரு சக்கர வாகனங்களுக்கான புதிய டயர்களை அறிமுகம் செய்துவிட்டுப் பேசிய அப்பல்லோ நிறுவனத்தின் தலைவர் ஓங்கார் எஸ் கன்வர், “இந்தியாவில் 120 மில்லியன் இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது இந்தச் சந்தை. வளரும் சந்தையைக் கணக்கில் கொண்டும், வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துகொண்டும் முழு வேகத்துடன் இதில் இறங்கியுளோம். எங்கள் டயர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தொடர்ந்து அப்பல்லோ நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை விரும்புவார்கள்!’’ என்றார்.

அப்பல்லோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் கன்வர் பேசும்போது, “இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையில் டயர்களைத் தயாரிக்க, சென்னையில் உள்ள எங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்துள்ளது. இந்தியாவின் வெவ்வேறுவிதமான சாலைத் தன்மைகளுக்கு ஏற்ப நாங்கள் டயர்களை உருவாக்கியுள்ளோம். ஈரமான சாலை, உலர்ந்த சாலை, ஆஃப் ரோடிங், கார்னரிங் கிரிப், மைலேஜ், பாதுகாப்பு என எல்லா அம்சங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு, ஒவ்வொருவரின் பயன்பாட்டுக்கு ஏற்ற டயரை வாடிக்கையாளரே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடிகிற வகையில் டயர்களைத் தயாரிக்கிறோம்!’’ என்றார்.

ஆஃப்டர் மார்க்கெட்டில் மோதிக்கொண்டிருக்கும் எம்.ஆர்.எஃப், டிவிஎஸ், சியட், கான்டினென்ட்டல், மிஷ்லின், டன்லப் போன்ற நிறுவனங்களுக்கு, டஃப் கொடுக்க அப்பல்லோ ரெடி!

பைக் - பின்பக்க டயர்

ப்ளாக் பேட்டர்ன் (ஆன் - ஆஃப் ரோடு டயர்) - ஆக்டீ க்ரிப் R1 / R2

டைரக்ஷனல் பேட்டர்ன் (ஹைவே டயர்) - ஆக்டீ ஸிப் R3

பைக் - முன்பக்க டயர்

ஸ்ட்ரைட் ரிப் பேட்டர்ன் - ஆக்டீ ஸ்டீர் F1

டைரக்ஷனல் பேட்டர்ன் - ஆக்டீ ஸிப் F2 / F3

ஸ்கூட்டர் டயர் - முன் - பின் பக்கம்

டைரக்ஷனல் பேட்டர்ன் - ஆக்டீ ஸிப் S1 / S2

ப்ளாக் பேட்டர்ன் - ஆக்டீ க்ரிப் S3 / S4 (பின்பக்கம் மட்டும்)