Published:Updated:

“ஹில்ஸ் டிரைவ் ஈஸி!”

ரீடர்ஸ் ரெவ்யூ : மஹிந்திரா KUV 100 (P) ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

ண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு கார் வாங்கும் எண்ணமே இல்லை. சான்ட்ரோ வைத்திருந்தேன். அந்த காரில் அதிகபட்சம் ஐந்து பேர்தான் செல்ல முடியும். எங்கள் குடும்பத்தில் ஏழு பேர். ஒரே நேரத்தில் அனைவரும் செல்ல வேண்டும் என்றால், சான்ட்ரோ போன்ற கார்கள் செட் ஆகாது. எனவே, திடீரென முடிவெடுத்துதான் மஹிந்திராவின் KUV100 காரை புக் செய்தேன்.

ஏன்  KUV100 ?

என் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும்; அதேசமயம், 7 சீட்டர் காராகவும் இருக்க வேண்டும். டட்ஸன் கோ ப்ளஸ் மற்றும் மஹிந்திராவின் KUV100 ஆகிய இரண்டு கார்களையும் பார்த்தேன். இரண்டில் என்னைக் கவர்ந்தது KUV100. டட்ஸன் கோ ப்ளஸ் 7 பேர் அமரும் வகையில் இருந்தாலும், அத்தனை இட வசதியோடு இல்லை. நிறைய வசதியுடன் குறைவான விலையில் இருந்ததால், KUV100 காரைத் தேர்வு செய்தேன்.

  “ஹில்ஸ் டிரைவ் ஈஸி!”

ஷோரூம் அனுபவம்

முதலில் நான் காரைப் பற்றி விசாரிக்கச் சென்றபோது, பிரவுச்சரை மட்டும் கொடுத்தார்கள். மறுமுறை சென்றபோது, நன்றாகவே விளக்கினார்கள். ஜனவரி மாதத்தில் காரை புக் செய்தேன். கார் டெலிவரிக்கு 2, 3 மாதங்கள் ஆகும் என்றார்கள். ஆனால், வீட்டில் உள்ள நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே கார் வேண்டும் என்று கேட்டேன். 25 நாட்களிலேயே அதாவது பிப்ரவரி 16-ம் தேதியே காரை டெலிவரி செய்தார்கள்.

  “ஹில்ஸ் டிரைவ் ஈஸி!”

எப்படி இருக்கிறது  KUV100 ?

இந்த காரை எடுத்தபோது, நான் கொஞ்சம் பயந்தேன். நான் ஓட்டிக் கொண்டிருந்தது சின்ன கார். இது கொஞ்சம் பார்க்க பிரம்மாண்டமாக இருந்தது. அதே மாதிரி கியர்லீவர், டேஷ்போர்டிலேயே இருந்ததும் எனக்குக் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. ஆனால், கார் ஓட்டும்போது இது பெரிய குறையாகத் தெரியவில்லை. சிட்டியிலும், ஹைவேஸிலும் ரொம்ப வசதியாகவே இருக்கிறது. குறிப்பாக, ஹில்ஸ் டிரைவிங் செய்ய மிக எளிதாக இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸும் சூப்பர். சிட்டிக்குள் 14.5 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 16.5 கி.மீ-யும் மைலேஜ் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜினில் சத்தமே இல்லை. எனவே, ஃபன் டு டிரைவ் கிடைக்கிறது.

ப்ளஸ்

ப்ளஸ் என்று பார்த்தால், காரின் லுக். கிட்டத்தட்ட ஸ்கார்ப்பியோவின் அகலம். முன் பக்கம் பார்த்தால், நல்ல உயரமான லுக். ஒட்டுமொத்தமாக ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.
அடுத்து இடவசதி. கியர் லீவர் மற்றும் ஹேண்ட் பிரேக் டேஷ்போர்டில் இருப்பதால், தாராளமாக ஆறு பேர் வரை உட்காரலாம். ஆறு பேர் இல்லாத போது, முன் பக்க நடு சீட்டை மடக்கி ஆர்ம் ரெஸ்ட் ஆகவும் பயன்படுத்தலாம். இம்மாதிரி நேரங்களில் கை வலிக்காமல் நீண்ட தூரப்  பயணம் மேற்கொள்ள முடிகிறது.

  “ஹில்ஸ் டிரைவ் ஈஸி!”

ஜாய் ஸ்டிக் மாதிரி டேஷ்போர்டிலேயே இருக்கும் கியர் லீவர், எனக்குப் பிடித்திருக்கிறது. மேலும், இது ஸ்டீயரிங் பக்கமே இருப்பதால், மிகவும் எளிமையாக கியரைக் கையாள முடிகிறது. இன்ஜின் ஸ்மூத்னெஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம்கூட சத்தம் இல்லை. மைலேஜும் ப்ளஸ்தான்.

16.5 கிமீ வரை எனக்கு மைலேஜ் கிடைக்கிறது.

மைனஸ்

காரின் சைடு லுக்தான் எனக்கு சுமாராகத் தெரிகிறது. முன் பக்கம் பிரம்மாண்டமாக இருக்கிறது; ஆனால், பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது இது சின்ன கார் என்பது தெரிந்து விடுகிறது. அதேபோல், வீல் சைஸும் 14 இன்ச் ரொம்ப சிறிதாகத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பெரிய டயர் கொடுத்திருக்கலாம். அடுத்து டிக்கியின் இடவசதி 243 லிட்டர் என்பது குறைவு. நிறைய பொருட்களை வைப்பது சிரமம்தான். கார்களில் டபுள் டின் ஆடியோ சிஸ்டத்தைப் பொருத்த முடியாது என்பதும் மைனஸ்.

  “ஹில்ஸ் டிரைவ் ஈஸி!”

என் தீர்ப்பு

குறைந்த விலையில் நல்ல இடவசதியுடன் ஆறு பேர் அமரும் வகையில், பெர்ஃபாமென்ஸிலும் அசத்தும் சிறந்த காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால், நிச்சயம் அது மஹிந்திராவின் KUV100 கார்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு