Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்

Published:Updated:

அபிஷேக், ஒசூர்.

 நான் 125 சிசி பைக் வாங்க வேண்டும். யமஹா SZ, ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் ஆகிய இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்?

யமஹா SZ பைக்கின் ஸ்டைலைவிட ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் மிகவும் ஸ்போர்ட்டியாக

##~##
இருக்கும். கிட்டத்தட்ட சின்ன பைக்குகளில், ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற தோற்றம் கொண்டது சிபிஎஃப்  ஸ்டன்னர். பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை யமஹா SZ பைக் 153 சிசி இன்ஜின் கொண்டது. சிபிஎஃப் ஸ்டன்னர் 125 சிசி இன்ஜினைக் கொண்டது. நீங்கள் 125 சிசி மற்றும் 150 சிசி என இரண்டு வெவ்வேறு இன்ஜினைக் கொண்ட பைக்குகளை ஒப்பிடும் போது, குறைந்த சிசி திறன் கொண்ட பைக்கின் பர்ஃபாமென்ஸ் குறைவாகவும், மைலேஜ் அதிகமாகவும் இருக்கும். அதேசமயம், அதிக சிசி திறன் கொண்ட பைக் பர்ஃபாமென்ஸில் அதிகமாகவும், மைலேஜில் குறைவாகவும் இருக்கும். பவரைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் கிட்டத்தட்ட 1 bhp சக்திதான் வித்தியாசம் என்றாலும், பர்ஃபாமென்ஸில் ஸ்டன்னரை வீழ்த்திவிடுகிறது யமஹா SZ . 0-60 கி.மீ வேகத்தைக் கடக்க 6.73 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது சிபிஎஃப் ஸ்டன்னர். ஆனால், இதே வேகத்தை 5.9  விநாடிகளில் கடக்கிறது யமஹா SZ . மைலேஜைப் பொறுத்தவரை SZ லிட்டருக்கு 47.9 கி.மீ-யும், சிபிஎஃப் ஸ்டன்னர் 55.6 கி.மீ-யும் தருகிறது. பர்ஃபாமென்ஸ் வேண்டுமென்றால், யமஹா SZ  பைக்கை வாங்கலாம். ஸ்டைலும், மைலேஜும் அதிகம் கிடைக்க வேண்டுமென்றால், ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் பைக்கை வாங்கலாம்!

 பாலசுப்ரமணியம், இ-மெயில்.

ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும். என்னுடைய பட்ஜெட்

மோட்டார் கிளினிக்

80,000 முதல் 2 லட்சம் வரை! எந்த பைக் வாங்கலாம்?

2 லட்ச ரூபாய் வரை நீங்கள் பட்ஜெட் வைத்திருந்தாலும், இந்த செக்மென்ட்டில் ஸ்போர்ட்ஸ்

மோட்டார் கிளினிக்

பைக்குகள் மிகவும் குறைவு. ஹீரோ ஹோண்டா கரீஸ்மாவை ஸ்போர்ட்ஸ் பைக் என்று சொல்வதைவிட சிறந்த ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் என்றுதான் சொல்ல வேண்டும். இதன் வேகம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. யமஹா ஆர்-15 சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக். ஆனால், இதன் பர்ஃபாமென்ஸைவிட நின்ஜா-250, பர்ஃபாமென்ஸில் தூள் கிளப்பும். ஆனால், இதன் விலை 3 லட்சம் ரூபாய். நீங்கள் ஏப்ரல் மாதம் வரை காத்திருப்பீர்கள் என்றால், ஹோண்டா சிபிஆர் 250-ஆர் பைக்கை வாங்கலாம். இதன் விலை 2 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

 ஜான்சன், சென்னை - 78.

மாருதி ஸ்விஃப்ட் வாங்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். ஆனால், பெட்ரோல் வாங்குவதா அல்லது டீசல் கார் வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது. மோட்டார் விகடனின் ஆலோசனை தேவை.

நீங்கள் காரை நகருக்குள்தான் அதிகம் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், பெட்ரோல் காரை வாங்குவதுதான் சிறந்தது. அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும், மைலேஜ் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் மட்டுமே டீசல் வாங்கலாம். டீசல் ஸ்விஃப்ட்டின் விலை பெட்ரோல் ஸ்விஃப்ட்டின் விலையைவிட கிட்டத்தட்ட

மோட்டார் கிளினிக்

80 ஆயிரம் அதிகம். ஆனால், இப்போது பெட்ரோலின் விலைக்கும், டீசலின் விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் ஸ்விஃப்ட் டீசலை நீண்ட காலம் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் மட்டுமே, கூடுதலாக

மோட்டார் கிளினிக்

80 ஆயிரம் கொடுப்பதில் பலன் இருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் பெட்ரோல் ஸ்விஃப்ட்டையே வாங்கலாம்!

இக்னீஷியஸ், கோவை.

நான் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் பைக் வைத்திருக்கிறேன். இந்த பைக்கின் டயர்கள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. அதனால், பிரேக் பிடிக்கும்போது ஸ்கிட் ஆகிறது. டயர் மாற்றலாம் என முடிவெடுத்திருக்கிறேன். என்ன சைஸ் மாற்றலாம்?

ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் பைக்கின் டயர்கள் நல்ல கிரிப்பையே தருகின்றன. இந்த பைக்கின் பவருக்கும், வடிவமைப்பிற்கும் ஏற்றபடியான டயர்களையே ஹோண்டா பொருத்தியிருக்கிறது. அதனால், நீங்கள் டயரை மாற்றாமல் இருப்பதே நல்லது. டயரை மாற்றினால் பைக்கின் மைலேஜ் குறையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!

கவிதா ராமதாஸ், சோழிங்கநல்லூர்.

நான் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கினேன். ஆக்டிவாவின் பர்ஃபாமென்ஸ் மற்றும் ரைடு குவாலிட்டி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நண்பர்கள் பயமுறுத்தியது போல இதன் வெயிட் அதிகமாக இல்லை. ஆனால், செல்ஃப் ஸ்டார்ட் அடிக்கடி வேலை செய்யாமல் மக்கர் செய்கிறது. செல்ஃப் ஸ்டார்ட்டைச் சரி செய்வது எப்படி?

மோட்டார் கிளினிக்

இதை சின்னப் பிரச்னையாகக் கருதி விட்டுவிடாதீர்கள். உடனடியாக சர்வீஸ் சென்டருக்குச் சென்று பேட்டரியின் நிலை, ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு மின்சாரம் ஒழுங்காகப் போகிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள். மேலும், நீங்கள் செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்தும்போது, ஒருமுறை பட்டனைத் தட்டியவுடன் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், தொடர்ந்து பட்டனை அழுத்தாதீர்கள். குறைந்தது 15-20 விநாடி இடைவெளியாவது தேவை. உடனுக்குடன் பட்டனைத் தட்டும்போது பேட்டரியின் ஆயுட்காலம் குறையும். அதேபோல், காலை வேளைகளில் கிக் ஸ்டார்ட் செய்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதே நல்லது. இதனால் பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கும். அதேபோல், ஸ்கூட்டரை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்துவிட்டு எடுக்கும்போது, கிக் ஸ்டார்ட் செய்தே ஸ்கூட்டரை ஓட்டுங்கள். இன்ஜின் இயங்க இயங்கத்தான் பேட்டரி சார்ஜ் ஆகும்!

  அழகேசன், திருப்பூர்.

நான் டாடா ஆரியா கார் வாங்கலாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், இந்த காரின் விலை

மோட்டார் கிளினிக்

15-18 லட்சம் என்பதால், குழப்பமாக இருக்கிறது. விரைவில் டாடா, விலை குறைவான வேறு எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறதா?

விரைவில் விலை குறைவான ஆரியா வேரியன்ட்டை டாடா அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது உண்மையே! இது 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். இதில் ஜிபிஎஸ் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், மழை வருவதை உணர்ந்து வேலை செய்யும் வைப்பர் போன்ற வசதிகள் எதுவும் இருக்காது. இதன் விலை எப்படியும் தற்போதைய 4ஙீ4 மாடலைவிட 2 லட்ச ரூபாய் குறைவாக அதாவது

மோட்டார் கிளினிக்

13 லட்சம் இருக்கும்!

 முகமது ரஃபீக், சென்னை.

டீசல் ஹேட்ச்பேக் கார் வாங்கலாம் எனத் திட்டமிட்டு இருக்கிறேன். ஃபோர்டு ஃபிகோ, ஃபியட் கிராண்டே புன்ட்டோ, மாருதி ரிட்ஸ் மூன்றில் எந்த டீசல் காரை வாங்கலாம்? நான் வசிக்கும் ஏரியாவில் மேடு - பள்ளங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல், டிக்கியிலும் பொருட்கள் வைக்க அதிக இடவசதி இருக்க வேண்டும்.

இந்த மூன்று கார்களில் பர்ஃபாமென்ஸ், இடவசதி, மைலேஜ் என அனைத்திலும் சிறந்த கார் ஃபோர்டு ஃபிகோதான். ஆனால், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஃபியட் கிராண்டே புன்ட்டோவைவிட குறைவு. மாருதி ரிட்ஸ் காரின் டிக்கியில் இடவசதி மிகவும் குறைவு. அதனால் மூன்று கார்களில் உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் கார், ஃபியட் கிராண்டே புன்ட்டோதான். இடவசதி, மைலேஜ், போதுமான பர்ஃபாமென்ஸைக் கொண்டிருப்பதோடு ஸ்டைல், பில்டு குவாலிட்டி, ஓட்டுதல் மற்றும் கையாளுமையிலும் சிறந்த காராக இருக்கிறது ஃபியட் கிராண்டே புன்ட்டோ!

 யோகேஸ்வரன், மதுரை.

மஹிந்திரா லோகன் கார் வாங்கலாம் என்பது என் சாய்ஸ். ஆனால், என் நண்பர்கள் லோகன் தயாரிப்பு விரைவில் நிறுத்தப்பட இருப்பதாகவும், இது ஒரு தோல்வியடைந்த மாடல் என்றும் சொல்கிறார்கள். லோகனை வாங்கலாமா, வேண்டாமா என்பது குழப்பமாகவே இருக்கிறது.

லோகன் சிறந்த கார் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. ஆனால், அதிக விலையும், ஸ்டைலும்தான் இந்த காரின் விற்பனைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தன. இப்போது இந்த காரின் தயாரிப்பு உரிமையை, ரெனோ நிறுவனத்திடம் இருந்து மஹிந்திரா வாங்கிவிட்டது. விரைவில் புதிய லோகனை சில மாற்றங்களோடு வெளியிட இருக்கிறது. இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதுடன், லோகன் இன்ஜின் அதிக மைலேஜ் தரும் என்பதால், நீங்கள் தாராளமாக மஹிந்திரா லோகனை வாங்கலாம். ஆனால், புதிய லோகன் கார் வரும் வரை பொறுத்திருங்கள். ஜனவரி-மார்ச் மாதத்துக்குள் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடும்!