பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

கார் மீது மனிதனுக்கு உள்ள ஈர்ப்புக்கு அதன் வேகம், சாகசம், கம்பீரம் ஆகியவற்றை எல்லாம் தாண்டி வசீகரிப்பது, அதைச் செலுத்தும் விஞ்ஞானம். அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு சிநேகிதமான எலெக்ட்ரிக் கார்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், ஹைபிரிட் கார் தொழில்நுட்பத்தில் காட்டி வரும் முன்னேற்றம், வியப்பானது. சிலிக்கான் வேலியைச் சேர்ந்த எலான் மஸ்க் என்பவரின் தலைமையிலான இந்த நிறுவனத்தின் கார்களை, ஃப்ளிப்கார்ட்டில் மொபைல் போன் வாங்குவது மாதிரி, உலகெங்கும் வாங்குகிறார்கள். மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்த நிறுவனம்தான் பேட்டரி சப்ளை செய்திருக்கிறது.

உலகம் முழுதும் பரவிவரும் ஹைபிரிட் தாக்கம், நம் நாட்டிலும் தடம் பதிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு சிநேகிதமாக இருக்கும் ஹைபிரிட் கார்களுக்குச் சாதகமான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டிலேயே இடம்பெற்றன. சிலிக்கான் வேலியில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. எலெக்ட்ரிக் கார்களுக்கும் நம் நாட்டுக்கும் எப்போதுமே ஆழமான தொடர்பு உண்டு. இப்போது மஹிந்திரா ரேவாவாக வலம் வரும் பழைய ரேவா கார்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது மஹிந்திராவின் நிர்வாகத்தின் கீழ் ரேவாவின் செயல்பாடு கூடியிருக்கிறது.

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது மனிதகுலத்துக்கு விஞ்ஞானம் அளிக்கும் மாபெரும் கொடை. ஹைபிரிட் கார்கள் என்பது காலத்தின் கட்டாயம். வழக்கமான காரில் கிடைக்கக்கூடிய ஒரு சில வசதிகள், ஆரம்பத்தில் ஹைபிரிட் கார்களில் கிடைக்காமல் இருக்கலாம். இருந்தாலும் ஹைபிரிட் ஜெயிக்கும்; ஜெயிக்க வேண்டும்.

அன்புடன்,
ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு