Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் நியூஸ்

உலகின் அதிவேக எஸ்யுவி பென்ட்லி பென்டாய்கா!

புகழ்பெற்ற கார் தயாரிப்பாளரான பென்ட்லி, EXP-9F கான்செப்ட்டில் உருவான தனது முதல் எஸ்யுவியான பென்டாய்காவை, தனித்தன்மை மிக்க எஸ்யுவியாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் விலை 3.85 கோடி (டெல்லி எக்ஸ் ஷோரும்). ஆடி Q7 மற்றும் போர்ஷே கெய்ன் ஆகிய எஸ்யுவிகள் தயாராகும் ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் MLB-EVO பிளாட்ஃபார்மில், ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படும் 2.4 டன் எடைகொண்ட பென்டாய்காவை, ஆஃப் ரோடு எஸ்யுவிகளின் உச்சம் எனலாம்.

ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களைத் தரும் டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் கிரில், க்ரோம் ஸ்விட்ச்சுகள், 22 வகையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய 4/5 இருக்கைகளில் செய்யப்பட்டுள்ள டைமண்ட் வேலைப்பாடுகள், வாய்ஸ் கமாண்ட் உடனான 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 20 ஸ்பீக்கர்கள், 60 ஜிபி மெமரி கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட், பின்பக்கப் பயணிகளுக்கான இரட்டை 10.2 இன்ச் டேப்லெட்கள் ஆகியவை காரின் லக்ஸூரியைப் பறைசாற்றுகின்றன.

மெக்கானிக்கல் பாகங்களைப் பொறுத்தவரை, லாக்கிங் டிஃப்ரன்ஷியல் போன்று செயல்படக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் ரோல் பார் ஆகியவை இதன் அடையாளம். எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், 608bhp மற்றும் 90kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 6.0 லிட்டர் W12 ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு, பென்டாய்காவின் தனிச் சிறப்பு.
அதனால், 0 - 100 கி.மீ வேகத்தை 4.1 விநாடிகளில் எட்ட முடிவதுடன், அதிகபட்ச வேகமாக மணிக்கு 301 கி.மீ வரை செல்கிறது பென்டாய்கா. இந்தியாவுக்கு எனப் பிரத்யேகமாக 20 பென்டாய்கா எஸ்யுவிகளை ஒதுக்கியிருந்த பென்ட்லி நிறுவனம், அவை அனைத்தையும் இங்கு விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது!

பாதுகாப்பில் 4 ஸ்டார் வாங்கியது பெலினோ!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் தயாரான பெலினோ ஹேட்ச்பேக்கை க்ராஷ் டெஸ்ட் செய்த Euro NCAP அமைப்பு, ஸ்டாண்டர்டு மாடலுக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கும், கூடுதல் பாதுகாப்புச் சாதனங்கள் (Radar Brake Support, Autonomous Emergency Braking System) பொருத்தப்பட்ட மாடலுக்கு 4 ஸ்டார் ரேட்டிங்கையும் வழங்கியுள்ளது. இது தவிர, Adult Occupant Safety-ல் 85%, Child Safety-ல் 73%, Pedestrian Safety-ல் 65% மதிப்பெண்களையும் அது வழங்கியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெலினோவின் அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப் பைகள், ABS, EBD, Seatbelt Pretensioner With Reminder ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெலினோவில் 6 காற்றுப் பைகள் இடம்பெற்றுள்ளன. 2014-ம் ஆண்டில் Euro NCAP அமைப்பு பரிசோதித்த ஸ்விஃப்ட், ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றது. ஆனால், ஸ்விஃப்ட்டைவிட எடை குறைவான பெலினோ, புதிய STECT (Suzuki Total Effective Control Technology) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட எடை குறைவான, உறுதியான ஸ்டீலால் காரின் பாடியை மாருதி சுஸூகி வடிவமைத்திருப்பதே அதிக ரேட்டிங் பெற்றதற்குக் காரணம்.

ஃபோர்டுக்கு வந்த சோதனை!

மோட்டார் நியூஸ்

ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது டீலர்களுக்கு உடனடியாகப் பின்பற்றவேண்டிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்களில் இருக்கும் காற்றுப் பை கன்ட்ரோல் சிஸ்டத்தின் சாஃப்ட்வேரில் சில பிரச்னைகள் இருப்பதால், அதனைச் சரிசெய்யும் பொருட்டு, அவற்றின் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவரிகளை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. காற்றுப் பை, சீட் பெல்ட், ஃப்யூல் கட் ஆஃப் ஆகிய பாதுகாப்புச் சாதனங்கள் அனைத்தும் Restraint ControlModule (RCM) கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இதன் சாஃப்ட்வேரில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையால், இவை விபத்து நேரத்தில் இயங்காமல் போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே, 2015-ம் ஆண்டு இவை அறிமுகமான நாள் துவங்கி, ஏப்ரல் 12, 2016 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 42,300 ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் கார்களில் இருக்கும் இந்தக் குறையை இலவசமாகச் சரிசெய்து தர ஃபோர்டு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, இந்த இரு கார்களின் விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் ஃபோர்டுக்கு மேலும் ஒரு சோதனை!

ரெனோ - நிஸான்  புதுத் திட்டம்!

மோட்டார் நியூஸ்

க்விட் தயாரிக்கப்படும் CMF-A பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டு, புதிய க்ராஸ்ஓவர், காம்பேக்ட் செடான், எலெக்ட்ரிக் கார் எனப் பல மாடல்களைத் தயாரிக்க உள்ளதாக, ரெனோ - நிஸான் கூட்டணியின் தலைவர் கார்லோஸ் கோன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கார்களை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளிலும் விற்பனை செய்ய அது திட்டமிட்டுள்ளது.

வென்ட்டோவால்  ரேபிட் காருக்குச் சிக்கல்!

மோட்டார் நியூஸ்

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட 3,877 வென்ட்டோ கார்களை ரீ-கால் செய்துள்ளது ஃபோக்ஸ்வாகன். மேலும், இதன் விற்பனையையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ARAI (Automotive Research Association of India) அமைப்பு, வென்ட்டோவை Conformity of Production (COP) டெஸ்ட்டுக்காகப் பரிசோதித்தபோது, அந்த கார்கள் வெளியிடும் கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததே காரணம். ஆனால், அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் - DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வென்ட்டோ மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டீசல் போலோ ஆகிய கார்களில் இந்தப் பிரச்னை இல்லை என்பதால், அவற்றின் விற்பனை தொடரும் என ஃபோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதே மாசு அளவுகளில் இருந்த பிரச்னையால் ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ஆடி நிறுவனங்கள் EA189 சீரிஸ் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு விற்பனை செய்த 3.24 லட்சம் கார்களை ரீ-கால் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. வென்ட்டோவில் இருக்கும் அதே இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக்கொண்ட ஸ்கோடா ரேபிட்டின் விற்பனையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு