Published:Updated:

கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?
கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?

விஐபி ரிப்போர்ட் : ஃபோர்டு எண்டேவர் 2.2 ATதமிழ், ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி
கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?

‘‘வெர்னா வெச்சிருக்கேன். அடுத்து நம்ம சாய்ஸ் எஸ்யுவிதான். ஃபோர்டு மேலதான் ஒரு கண்ணு இருக்கு! ஃபோர்டு எஸ்யுவி வந்தா, நான்தான் மோ.வி. டெஸ்ட் ரிப்போர்ட் தருவேன்... மறந்துடாதீங்க!’’ என்று சில வாரங்களுக்கு முன்னரே நமக்கு வாட்ஸ்-அப், ஸ்கைப், மெயில் என்று எல்லாவற்றிலும் ரிமைண்ட் செய்திருந்தார் கே.எஸ்.மணிகண்டன் - ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குநர்.

ஒரு ஞாயிறு காலையில் நமது அலுவலக வாசலில் நின்றிருந்த ஃபோர்டு எண்டேவர் 2.2 காரைப் பார்த்ததும் மணிகண்டன் நினைவு வர, நேராக அவர் அலுவலக வாசலுக்கு எண்டேவரை விரட்டினோம்.

‘‘இப்போதான் உலகநாயகன் ‘போத்தீஸ்’ விளம்பரம் ரஷ் முடிச்சிட்டு வந்தேன். இந்த விளம்பரம் வந்தவுடனே எல்லோரும் கண்டிப்பா வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடணும்ங்கிறதுதான் டார்கெட்! சாரி... டாப்பிக் மாறிட்டேனோ?’’ என்றவர், எண்டேவரைப் பார்த்ததும், ‘‘வாவ், இந்த உயரத்துக்காகவே எண்டேவருக்கு நிறைய லைக்ஸ் போடலாம்!’’ என்று வியந்தார்.

காரின் விலை, இன்ஜின், மற்ற டெக்னிக்கல் விவரங்கள், வசதிகள் போன்ற அனைத்தையும் கேட்டு உள்வாங்கிக்கொண்டவர், ‘‘ஓ... இது 4 வீல் டிரைவ் இல்லையா? ’’ என்று இன்ஜினை ஆன் செய்தார். ‘‘32 லட்ச ரூபாய் கார்னு சொல்றீங்க... பட்டன் ஸ்டார்ட் இல்லையே!’’ என்று ஆரம்பித்தவர், ECR வரை காரை விரட்டிவிட்டு வந்து, நமக்குக் கொடுத்த டெஸ்ட் ரிப்போர்ட் இனி....

டிஸைன்

‘‘காரில் ரொம்பப் பிடித்தது இதன் டிஸைன்தான். நிச்சயம் ஃபார்ச்சூனர் பின்வாங்கலாம். வெளியே ஆராய்ந்தபோது, ஃபிட் அண்டு ஃபினிஷ் சுமாராக இருந்தாலும், இதன் கட்டுமானத் தரம் வேறு எந்த காரிலும் பார்த்தது இல்லை. ஆனால், டேஷ்போர்டு மேலே உள்ள லெதர் ஃபினிஷிங்கைத் தவிர, உள்பக்க பிளாஸ்டிக் தரம் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. டே டைம் LED ரன்னிங் லைட்ஸ் செம கெத்து. உள்ளே பெரிய பங்களா போன்று பரந்து விரிந்து இருக்கிறது. அவ்வளவு இடவசதி. 3 வரிசைக்குப் பிறகும் பின்னால் 4 சூட்கேஸ் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது.

கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?

இன்ஜின்

சிட்டிக்கு இந்த 2.2 இன்ஜின் போதும் என்று நினைக்கிறேன். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நல்ல ஸ்மூத். பவர் 158bhp, ஆள் இல்லாத சாலைகளில் விரட்டி ஓட்ட வேண்டும்போல இருக்கிறது. எனக்குக் கிட்டத்தட்ட 150 கி.மீ வரை எந்த அதிர்வுகளும் தெரியவில்லை. இன்னும் விரட்டலாம் என்று நினைக்கிறேன்.

பிக்-அப் அருமை. ‘சட் சட்’ என சீறுகிறது. ஆனால், எக்கோ மோடு, பவர் மோடு இதில் இல்லை. ஒருவேளை காஸ்ட்லி காருக்கு எதற்கு எக்கானமி என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?

டிரைவிங்

கடோத்கஜன்போல இருப்பதால், சிட்டிக்குள் இதை நினைத்தபடி கையாள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. ஆனால், 8Way மெமரி சீட் இருப்பதால், ரோடு தெரியும்படி சீட் அட்ஜஸ்ட் செய்துகொண்டு காரை எடுத்தால் நல்லது. டர்னிங் ரேடியஸ் குறைவு என்பதால், சட்டென U-டர்ன் அடிக்க முடியவில்லை. மிகப் பெரிய திருப்பங்களைத் தேட வேண்டியிருக்கிறது. அதேநேரம், 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மேடு-பள்ளங்களைக்கூட ஆசையாகத் தேட வைக்கிறது. கியர்பாக்ஸை ஸ்போர்ட் மோடுக்கு மாற்றி கன்னியாகுமரி பைபாஸ் வரை விரட்ட வேண்டும்போல் இப்போதே கால்கள் பரபரக்கின்றன.

வசதிகள்

எண்டேவரிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, ரிவர்ஸ் கேமரா மற்றும் எமர்ஜென்ஸி அசிஸ்ட். இதில் ஸ்டீயரிங்குக்கு ஏற்ப கேமராவில் உள்ள சென்ஸார்களும் லேன் மாறி வளைந்து நெளிந்து வழிகாட்டுவதால், பெரிய காரை ரிவர்ஸ் எடுக்க வேண்டும் என்ற பயம் துளிகூட ஏற்படவில்லை. அப்புறம் - எமர்ஜென்ஸி அசிஸ்ட். ஆபத்து நேரத்தில் இது மிகப் பெரிய ஆபத்பாந்தவன். டிராக்ஷன் கன்ட்ரோல் இருக்கிறது; மழை நேரங்களில் ஓட்டிப் பார்த்தால்தான் தெரியும். ஆனால், ரெக்ஸ்ட்டன் காரில் பேடில் ஷிஃப்ட் வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன். இதில் அது மிஸ்ஸிங்.

கண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா?

பாதுகாப்பு

சீட் பெல்ட் வார்னிங் எனக்குப் பிடித்து இருக்கிறது. அதாவது, முன் பக்கப் பயணிக்கும் சீட் பெல்ட் வார்னிங் இருப்பதுதான் அசத்தல். பஜேரோவில் டிரைவருக்கே இந்த வார்னிங் இல்லை என்று என் நண்பர் சொன்னார். 7 காற்றுப் பைகள் இருப்பது நல்ல பாதுகாப்பு. 18 இன்ச் வீல்கள் சூப்பர் கிரிப். சிட்டியில் பிரேக்கிங் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

மைலேஜ்

மைலேஜ் இந்த காரில் எதிர்பார்க்க முடியாது பாஸ். என்னுடைய ரேஞ்ச் மீட்டரில் சிட்டிக்குள் 7.9 kmpl என்றும்; நெடுஞ்சாலையில் 9.2 kmpl என்றும் காட்டியது.

என் ஐடியா

ஃபோர்டில் இரண்டே இரண்டு எஸ்யுவிகள் தான். எக்கோஸ்போர்ட், எண்டேவர். ‘எக்கோஸ்போர்ட்’ காம்பேக்ட் சைஸ். ஃபோர்டுதான் வேண்டும் என்றால், ஒரே ஆப்ஷன் - எண்டேவர் மட்டும்தான். இதில் 2.2 லிட்டர், என் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி வருகிறது. பவர், இன்ஜின், ரைடிங் எல்லாமே எனக்குப் பிடித்திருக்கிறது. வீட்டில் கலந்துவிட்டுச் சொல்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு