Published:Updated:

மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?
மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

தமிழ்,

பிரீமியம் ஸ்டோரி
மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

பைக் புக் செய்யும்போது ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், சொகுசு இவை எல்லாவற்றையும் தாண்டி டீலரிடம் நாம் முதலில் கேட்கும் கேள்வி: ‘‘மைலேஜ் எவ்வளவு சார் கொடுக்கும்?’’

அதற்குப் பிறகு சேல்ஸ்மேன்கள் சொல்வது - ‘ஆச்சரியம்... ஆனால் பொய்’ ரகமாகத்தான் இருக்கும். ‘‘லிட்டருக்கு 102.3 கி.மீ; 96.7 கி.மீ; 78.6 கி.மீ’’ என்று பண்பலை வானொலியின் ஃப்ரிக்வொன்ஸி நம்பர்களைப்போல் அவர்கள் எடுத்துவிடுவதை நம்பி பைக் புக் செய்தபிறகு, ‘‘அவ்வளவு வரமாட்டேங்குதே’’ என்று திரும்பப் போய் கேட்டால்... ‘‘டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப மைலேஜ் வேறுபடும் சார்!” என்று வெயில் நேரத்தில் ‘கூல்’ ஆக பதில் சொல்வார்கள் ரெப்கள்.

உண்மையில் மைலேஜ் விஷயத்தில் என்னதான் நடக்கிறது? கம்பெனி க்ளெய்ம் செய்யும் மைலேஜ் உண்மையா?

மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

மைலேஜ் விஷயத்தில், பைக் நிறுவனங்கள் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’யைப் பயன்படுத்துவதற்குக் காரணம் - அது டெஸ்ட் செய்யப்படும் விதம் அப்படி. நீங்கள் நினைப்பதுபோல், ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பியோ, ரிஸர்வ் to ரிஸர்வ் என்றோ, ஃபுல் டேங்க் நிரப்பியோ சாலைகளில் பைக்கை ஓடவிட்டு மைலேஜ் டெஸ்ட் செய்வதில்லை. இதற்கு ‘டைனோ டெஸ்டிங்’ என்று பெயர். அதாவது, பைக்கை குதிரைக்கு லாடம் கட்டுவதுபோல் ஒரு ட்ரெட்மில் போன்ற ஒரு மெஷினில் அட்டாச் செய்து கட்டிவிடுவார்கள். ட்ரெட்மில்லின் பின்பக்கம் சுழலும் வகையில் உள்ள ஒரு ரோலர் போன்றதொரு அமைப்பில், பைக்கின் பின் பக்க டயர் உட்காருமாறு பொருத்தி விடுவார்கள். பைக்கின் முன் பகுதி, ரப்பர் கயிறு வைத்து அசையாதவாறு கட்டப்பட்டு விடும்.

இப்போது பைக் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு பின்சக்கரம் சுழல... இந்தச் சுழற்சிக்கு ஏற்ற வகையில் ரோலர் சுற்ற ஆரம்பிக்கும்.

இத்தோடு முடிந்து விடுவதில்லை. இப்போது இன்ஜினை 45 - 50 கி.மீ (எக்கனாமி மோடு) வேகத்தில் இயங்க வைத்து, அதில் கிடைக்கக் கூடிய கி.மீ ரீடிங்கை வைத்துத்தான் மைலேஜ் டெஸ்ட்  செய்வார்கள்.

மைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது?

கவனிக்க: இந்த டெஸ்ட்டில் பைக்கில் அமர்ந்து யாரும் ஓட்டப் போவது இல்லை; ஆடு, மாடு குறுக்கே போகப் போவது இல்லை; க்ளட்ச் அப்ளை கிடையாது; யாரும் பிரேக் பிடிக்கப் போவது இல்லை... பைக்கின் எந்தப் பகுதியும் மேடு-பள்ளங்களில் குலுங்கப் போவது இல்லை; இதனால் பைக்கின் ஏரோடைனமிக் பொசிஷனும் மாறப் போவது இல்லை; மொத்தத்தில் எதுவுமே மேனுவல் இல்லை; எல்லாமே மெக்கானிசம்தான்.

இது காருக்கும் பொருந்தும் மக்களே! கூட்டிக் கழிச்சுப் பாருங்க... கணக்கு தப்பா வந்தா சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு