Published:Updated:

ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!
ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

ஆக்டிவா இன்ஜின்... மினி பைக் டிஸைன்...ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா நவிதொகுப்பு / ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

நவி...

பெயரிலேயே புதுமை இருக்கிறது. அது மட்டுமல்ல... வாகனமும் புதுமைதான். இந்தியாவில் இருக்கும்  ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் நவி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் டிஸைன், பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையிலேயே இருக்கும்.

ஆனால், அந்த எண்ணத்தை முழுவதுமாகப் பொய்யாக்கும் விதத்தில் இருக்கிறது, ஸ்கூட்டரில் இருந்து பிறந்திருக்கும் நவியின் தோற்றம். வெளிநாடுகளில் விற்பனையாகும் ஹோண்டாவின் ‘Grom125’ எனும் மினி பைக்கை அடிப்படையாகக்கொண்டு, மோட்டார் சைக்கிள் - ஸ்கூட்டர் க்ராஸ்ஓவராக வெளிவந்திருக்கும் நவியின் விலை, 45 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும் என்பதால், Grom125 பைக்கில் காணப்படும் பல விஷயங்கள் நவியில் இல்லை. ஆனால், டிஸைனில் தனக்கெனப் புதிய பாதையை வகுத்திருக்கும் நவி, எப்படி இருக்கிறது?

ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!
ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

ஆக்டிவா போன்ற தன்னுடைய மற்ற தயாரிப்புகளில் இருக்கும் பாகங்களைப் பயன்படுத்தி, அற்புதம் படைத்துவிட்டது ஹோண்டா. புதிய அண்டர்போன் சேஸியில், ஆக்டிவாவில் இருக்கும் அதே 109.2சிசி இன்ஜின்தான் நவியிலும் இடம் பெற்றுள்ளது. பெரிய ஹெட்லைட், முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க், உயரமான க்ரோம் ஹேண்டில்பார், ஷார்ப்பான 3.8 லிட்டர் பெட்ரோல் டேங்க், நீளமான இருக்கை, பின்பக்க டிஸைன், டெயில் லைட் ஆகியவை பைக்குகளில் காணப்படுவதுபோல இருந்தாலும், நவியின் நீள, அகல, உயர அளவுகள் ஆக்டிவாவைப் போலவே இருப்பது ஆச்சரியம். ஆனால், கிரவுண்ட் கிளியரன்ஸ், வீல்பேஸ், முன்பக்க வீல் சைஸ் (12 இன்ச்) ஆகியவை ஆக்டிவாவைவிட அதிகமாக இருக்கின்றன. அப்படியிருந்தும்கூட நவியின் எடை (101 கிலோ), ஆக்டிவாவைவிட (108 கிலோ) 7 கிலோ குறைவாக இருக்கிறது! பெட்ரோல் டேங்க்கின் மேல்பகுதியுடன் இணைந்த மூடி, ஹார்னெட் பைக் டிஸைனை நினைவுப்படுத்தினாதாலும், பிளாஸ்டிக் தரம் மிகவும் சுமார். பெயின்ட் தரமும், சுவிட்சுகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பழைய டிஸைனில் இருக்கும் ஸ்பீடோ மீட்டரில் ஃப்யூல் கேஜ் இல்லாதது அதிர்ச்சி. வாகனத்தை லாக் செய்ய வேண்டுமென்றால், பழைய பைக்குகளைப்போல ஹேண்டில்பாருக்குக் கீழே இருக்கும் துவாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது வசதியாக இல்லை. தவிர, ஒரு ஸ்கூட்டருக்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸை, நவியில் எதிர்பார்க்கக் கூடாது.

ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரான ஆக்டிவாவில் இருக்கும் அதே ஸ்மூத்தான 109.2சிசி இன்ஜின், நவியில் பொருத்தப்பட்டுள்ளது. இது 8bhp@7,000rpm பவரையும், 0.9kgm@5,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இன்ஜினின் செயல்திறனை, பின்பக்க சக்கரங்களுக்கு CVT கியர்பாக்ஸ் கடத்துகிறது. எனவே, நவியின் பெர்ஃபாமென்ஸ் ஆக்டிவாவைப் போல இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால், ஆக்டிவாவுடன் ஒப்பிடும்போது, இன்ஜின் ட்யூன் செய்யப்பட்ட விதத்தில் சற்று வேறுபாடு இருப்பதுடன், 7 கிலோ எடை வித்தியாசம் சேர்ந்து, நவியின் ஓட்டுதல் அனுபவத்தைச் சிறப்பானதாக மாற்றுகின்றன. இதில் இருக்கும் ரெஸ்பான்ஸிவ்வான இன்ஜின், நெரிசலான நகரச் சாலைகளில் சுலபமாகப் பயணிப்பதற்கும், நெடுஞ்சாலையில் 70 கி.மீ வேகத்தில் சீராகச் செல்வதற்கும் துணை நிற்கிறது. ஆனால், ஆக்டிவாவைவிட (82 கி.மீ) நவியின் அதிகபட்ச வேகம் (81 கி.மீ) குறைவுதான்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

நவியின் ரைடிங் பொசிஷன், ஆக்டிவாவைப்போலவே இருக்கிறது. ஆனால், சீட்டிங் பொசிஷன், பைக்கில் இருப்பதுபோல இருக்கிறது. பெட்ரோல் டேங்க்கின் சப்போர்ட் காரணமாக, கால்களை பெட்ரோல் டேங்க்கை அணைத்தபடி வைத்துக்கொள்ள முடிகிறது. அதனாலேயே கால்கள், தானாக கியர் லீவர் மற்றும் பிரேக் லீவரைத் தேடுகின்றன. கைகளால் இயக்கக்கூடிய பிரேக்குகள் ஸ்கூட்டரை நினைவுபடுத்தினாலும், நவியை ஓட்டத் துவங்கிய பிறகு, ஒரு பைக்கை ஓட்டுவதுபோன்ற உணர்வே ஏற்பட்டது. முன்பக்க 12 இன்ச் - பின்பக்க 10 இன்ச் வீல்கள் மற்றும் 1,286 மிமீ வீல்பேஸ் ஆகியவை ஸ்டெபிலிட்டிக்கு உத்தரவாதம் தருகின்றன. சஸ்பென்ஷன் செயல்படும் விதம் திருப்தியளிக்கிறது. ஆனால், வேகமாகச் சென்று, பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலையாக இருக்குமா என்பது தெரியவில்லை. குறைவான எடை காரணமாக, நெடுஞ்சாலையில் நவி எதிர்க்காற்றால் தடுமாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம். 3.8 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைப் பயன்படுத்தி, அதிக தூரம் தொடர்ச்சியாகச் செல்ல முடியாது என்பது மைனஸ்.

ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்!

முதல் தீர்ப்பு

எந்த செக்மென்ட்டிலும் நவியைச் சேர்க்க முடியாது. மிகக் குறைவான ஸ்டோரேஸ் ஸ்பேஸ், ஒட்டுமொத்தத் தரம் ஆகியவை மைனஸாகத் தெரிந்தாலும், சாலையில் செல்லும்போது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் லுக், அனைவருக்கும்  கட்டுபடியாகக்கூடிய விலை (47,899 ரூபாய், சென்னை ஆன் ரோடு), ஓட்டுதல் அனுபவம் போன்ற ப்ளஸ்கள், அந்தக் குறைகளைச் சரிசெய்துவிடுகின்றன. வித்தியாசமான இந்த வாகனத்தின் வெற்றி - தோல்வி மக்கள் கையில்தான் இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு