Published:Updated:

இன்ஜினுக்கு லைக் போடலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்வி அகுஸ்டா புரூட்டேல் 1090 தொகுப்பு / ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
இன்ஜினுக்கு லைக் போடலாம்!

லகிலேயே கவர்ச்சியான பைக்குகளைத் தயாரிப்பதில், இத்தாலியின் எம்வி அகுஸ்டா நிறுவனம் கில்லாடி. அகுஸ்டாவின் மிகப் பிரபலமான ஃபுல் ஃபேரிங் F4 பைக், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும், கைனடிக் குரூப்புடன் இருக்கும் ஒப்பந்தத்தின் விளைவாக, Brutale 1090 பைக் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிஸைன்

நேக்கட் பைக்குகள்தான் இப்போது டிரெண்ட். ஏறக்குறைய எல்லா பைக் நிறுவனங்களுமே தன் கையிருப்பில் ஒரு நேக்கட் பைக்காவது வைத்திருக்கின்றன. ஆனால், உலகளவில் விற்பனைக்கு வந்து ஏழு ஆண்டுகளான பைக், இந்தியச் சாலைகளில் எப்படி இருக்கும்? ஏழு ஆண்டுகளில் டிஸைன் மட்டும் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.

ஆனாலும், பைக்கின் நுணுக்கமான டிஸைன் அம்சங்களை, நாம் டெஸ்ட் செய்த பைக்கின் கறுப்பு வண்ணம் மறைத்துவிட்டது. பளீரென்ற வண்ணத்துடன் இருந்திருந்தால், இன்னும் தூக்கலாக இருந்திருக்கும். முன்பக்கம் இருக்கும் ஓவல் ஹெட்லாம்ப் அழகாக இருந்தாலும், ஷார்ப்பான டிஸைனுடன் இல்லை. பைக் டேங்க்கில் இருக்கும் ஷார்ப்பான கோடுகளும், உயரமாக அமைக்கப்பட்டிருக்கும் டெயில் பகுதியும் அவ்வளவு ‘கூல்’ இல்லை.

இன்ஜினுக்கு லைக் போடலாம்!

ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அமைக்கப்-பட்டிருக்கும் ‘கிரீடம்’ போன்ற வைஸர் அழகு. அதிலேயே டே டைம்-ரன்னிங் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. வெளியில் தெரியும்படி அமைக்கப்பட்டிருக்கும் பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேமும், சிங்கிள் சைடட் ஸ்விங்-ஆர்மும் செம ஸ்டைல் பிட்ஸ். டபுள் பேரல் எக்ஸாஸ்ட், பைக்குக்கு ரொம்பவே டெக்னிக்கல் லுக்கைக் கொடுக்கிறது.

இன்ஜின்

Brutale 1090 பைக்கை அதன் இன்ஜினுக்காகவே காதலிக்கலாம். 1,078 சிசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் - 10,300 ஆர்பிஎம்-ல் 144bhp சக்தியையும், 11.42 kgm டார்க்கை 8,100 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், 9.17 kgm டார்க் வெறும் 4,000 ஆர்பிஎம்-ல் கிடைக்கிறது. இதனால், குறைந்த வேகங்களில் இந்த பைக்கை ஓட்டுவது சவாலான விஷயம் இல்லை. ஆனால், ஆக்ஸிலரேட்டரை சுதந்திரமாகத் திருகினால், முன் வீல் காற்றில் எகிறுகிறது. மணிக்கு 150 கி.மீ வேகத்தில் எளிதாக க்ரூஸ் செய்ய முடிகிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

பவர் டெலிவரி சீராக இல்லாததால், இந்த பைக்கை வளைவு-நெளிவுகள் நிறைந்த சாலைகளில் ஓட்டும்போது, கவனம் தேவை. பைக்கின் எடை (Dry Weight) 183 கிலோதான். ஆனால், டக் டக்கென்று பைக்கை வளைத்து ஓட்டினால், எடை மிகுந்த பைக்கை ஓட்டுவதுபோல்தான் உணர முடிகிறது.

நகர டிராஃபிக்கில், ஓட்டுதல் தரம் சிறப்பாக இருப்பதை உணர முடிகிறது. முன்பக்கம் உள்ள Marzocchi ஃபோர்க்குகளை முழுதாக அட்ஜஸ்ட் செய்ய முடியும். பின்பக்கம் இருக்கும் Sachs மோனோஷாக் சஸ்பென்ஷனையும் அட்ஜஸ்ட் செய்ய முடியும். இதனால், மோசமான சாலைகளில் முதுகு டேமேஜ் ஆகாமல் ஓட்டலாம். பைரலி Diablo Rosso II டயர்கள் நல்ல கிரிப் அளிக்கின்றன.
 
முன் பக்கம் உள்ள 310 மிமீ, ப்ரெம்போ பிரேக்குகள் கச்சிதமாக இயங்குகின்றன. ஆனால், கிளட்ச்தான் டைட்டாக இருக்கிறது. சிட்டி டிராஃபிக்கில் தொடர்ந்து ஓட்டினால், கை வலிக்கப்போவது நிச்சயம்.

இன்ஜினுக்கு லைக் போடலாம்!

பைக்கின் ரைடிங் பொசிஷன் சிறப்பாகவே உள்ளது. ஓட்டுபவர் எந்த உயரத்தில் இருந்தாலும், பைக்கில் எளிதாக அமர முடிவது ஸ்பெஷல்தான். ஆனால், இருக்கை கொஞ்சம் வழுக்கலாக இருக்கிறது. லேசாக பிரேக் தட்டினாலோ, ஆக்ஸிலரேட்டரை முறுக்கினாலோ டேங்க்கில் உடல் இடிக்கிறது.

தொழில்நுட்பம்

8-Way டிராக்‌ஷன் கன்ட்ரோல், இரண்டு ரைடிங் மோடுகள், ஏபிஎஸ் என டெக்னிக்கல் சமாசாரங்கள் பைக்கில் நிரம்பியுள்ளன. ஆனால், டிராக்‌ஷன் கன்ட்ரோல் செட்டிங்கை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கொடுத்திருப்பதால், பைக்கை ஓட்டும்போது அட்ஜஸ்ட் செய்வது கம்பசூத்திரம்தான். அதேபோல், ரைடிங் மோடுகளை ‘மோடு’ பட்டன் மூலம் அட்ஜஸ்ட் செய்வதும் கடுப்பாக இருக்கிறது. இது மிகவும் பழைய கால எலெக்ட்ரானிக் சிஸ்டம் போன்ற உணர்வைத் தருகிறது!

இன்ஜினுக்கு லைக் போடலாம்!
இன்ஜினுக்கு லைக் போடலாம்!

எம்வி அகுஸ்டா என்றால், பைக் உலகில் மரியாதை. அருமையான இன்ஜின் என்றாலும், பைக்கை ரொம்பவே விரட்டாமல் ஓட்டினால் நன்றாக இருக்கிறது. வளைத்துத் திருப்பி ஓட்ட சிரமமாக இருப்பதும் கொஞ்சம் உறுத்தல். விலை வேறு 19.3 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் புனே). மனசைக் கேட்கவா, அறிவைக் கேட்கவா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு