Published:Updated:

சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

ரீடர்ஸ் ரிப்போர்ட்: சுஸூகி ஆக்ஸஸ் 125ராகுல் சிவகுரு, படங்கள்: ஜெ.விக்னேஷ்

பிரீமியம் ஸ்டோரி
சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

சுஸூகியின் ஆக்ஸஸ் இப்போது அப்டேட் ஆகி வந்துவிட்டது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்த பிறகு, ஆக்ஸஸ்-125 ஸ்கூட்டர் வாயிலாக, 2007-ல் தனது செகண்ட் இன்னிங்ஸை இந்தியாவில் துவக்கியது சுஸூகி. டூவீலர் தயாரிப்பாளர்கள் அனைவரும் 100சிசி செக்மென்ட்டில் போட்டியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், துணிந்து 125சிசி ஸ்கூட்டரைக் களமிறக்கியதுடன், அப்போதைய ஸ்கூட்டர்களில் இல்லாத வசதிகளான டெலிஸ்கொபிக் சஸ்பென்ஷன், சென்ட்ரல் லாக்கிங் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்திய பெருமை, சுஸூகியைத்தான் சேரும். ஆக்ஸஸின் டிஸைன் டல்லாக இருந்தாலும், அது வெளிப்படுத்திய பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ் காரணமாக, பலர் இதை விரும்பி வாங்கினர். ஆக்ஸஸ் விற்பனைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது முற்றிலும் புதிய ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரைச் சரியான சமயத்தில் கொண்டுவந்திருக்கிறது. SEP தொழில்நுட்பத்துடன் புதிய 125 சிசி இன்ஜின், புதிய சேஸி, முன்பக்க டிஸ்க் பிரேக் (ஆப்ஷனல்), அலாய் வீல்(ஆப்ஷனல்), அனைத்து வயதினருக்கும் ஏற்ற புதிய டிஸைன் எனக் கூடுதல் பலங்களுடன் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டர் எப்படி இருக்கிறது?

சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

“நாங்க சொல்றோம்” என்று முன்வந்தனர் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள்.

சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

முன் பக்கம் வெஸ்பா, பின் பக்கம் ஃபஸினோ, பக்கவாட்டுத் தோற்றம் ஆக்டிவா எனப் பல ஸ்கூட்டர்களின் கலவையாக இருக்கிறது ஆக்ஸஸ் 125. ஸ்பீடோ மீட்டருக்குக் கீழே பெரிய பாக்ஸ் இல்லாவிட்டாலும், மொபைல் அல்லது தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள இடம் மற்றும் இரட்டை டிரிப் மீட்டர் கொடுத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. எனது ஸ்கூட்டியுடன் ஒப்பிடும்போது, இதன் கச்சிதமான சைஸ் எனக்குப் பிடித்திருக்கிறது. ஹோண்டா ஸ்கூட்டர்களைப் போல ஆக்ஸஸின் இன்ஜின் ஸ்மூத். அதே சமயம், ஆக்டிவாவைவிட இதைக் கையாள்வது சுலபமாக இருக்கிறது. டிஸ்க் பிரேக் சூப்பர். ஆனால், பெட்ரோல் டேங்க் மூடி சீட்டுக்கு அடியில் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கும் ஃபஸினோவின் கவர்ச்சி இதில் மிஸ்ஸிங்!

சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

டிஸைன் ஓகே ரகம்தான். நீளமான சைலன்ஸர், ஸ்கூட்டரோடு சுத்தமாகப் பொருந்தவில்லை. சீட்டுக்கு அடியில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு இடம் இருப்பது ப்ளஸ். ஆக்ஸஸின் பிக்-அப் மற்றும் இன்ஜின் ஸ்மூத்னெஸ் அட்டகாசம். எனவே, நெடுஞ்சாலையில் இந்த ஸ்கூட்டரில் ரிலாக்ஸாகப் பயணிக்கலாம். ஆனால், என்னைப்போல உயரமான நபர்களுக்கு இந்த ஸ்கூட்டர் வசதியாக இருக்குமா  என்று தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருத்தமான ஸ்கூட்டராக ஆக்ஸஸ் 125 இருக்கும் என்பது எனது கருத்து.

சுஸூகி ஆக்ஸஸ் ஓகேவா?

ஆக்ஸஸ் 125 டிஸைன் ஸ்பெஷலாக இல்லாமல், மற்ற ஸ்கூட்டர்களைப்போலவே இருக்கிறது. ஸ்பீடோ மீட்டர் சிம்பிளாக இருந்தாலும், தெளிவாக இருக்கிறது. இன்ஜின் அதிர்வுகளின்றி ஸ்மூத்தாக இயங்குவதுடன் போதுமான பெர்ஃபாமென்ஸையும் வழங்குவதால், இந்த ஸ்கூட்டரில் நீண்ட தூரம் பயணிக்கலாம். எடை அதிகமான எனது பைக்குடன் ஒப்பிடுகையில், இந்த ஸ்கூட்டரைக் கையாள்வது ஈஸியாக இருக்கிறது. டிஸ்க் பிரேக் மற்றும் அலாய் வீல் ஆப்ஷன் ஆச்சரியமளிக்கிறது. ஆக்ஸஸில் பெரிதாகக் குறை எதுவும் தெரியவில்லை என்றாலும், பார்த்த உடனே வாங்கத் தூண்டாத இதன் டிஸைன் மைனஸாக இருக்கும் என எண்ணுகிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு