Published:Updated:

யமஹா சல்யூட்டோ RX - அறிமுகம்

ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
யமஹா சல்யூட்டோ RX - அறிமுகம்

ந்தியாவில் தனது விலை குறைவான பைக்காக, சல்யூட்டோ RX பைக்கை, ` 55,500 ரூபாய்க்கு (உத்தேசமாக) விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது யமஹா.

க்ரக்ஸ், YBR பைக்குகளுக்கு மாற்றாக இதனை பொசிஷன் செய்துள்ள யமஹா, இந்தியச் சாலைகளையும், பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ் ஆகியவற்றை சமவிகிதத்தில் விரும்பும் இளைஞர்களையும் மனதில் வைத்து, இந்த பைக்கைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதில் 7,000ஆர்பிஎம்-ல் 7.5bhp பவரையும், 4,500ஆர்பிஎம்-ல் 0.9kgm டார்க்கையும், அராய் கணக்குப்படி 82kmpl மைலேஜையும் வெளிப்படுத்தக்கூடிய 110சிசி ப்ளூகோர் (BS-IV) இன்ஜின் இருக்கிறது.

யமஹா சல்யூட்டோ RX - அறிமுகம்

இன்ஜின், ஃப்ரேம், அலாய் வீல்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள எடைக் குறைப்பு நடவடிக்கைகளால்,  சல்யூட்டோ  RX பைக்கின் எடை வெறும் 98 கிலோதான். எனவே, 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட இந்த பைக்கில் இன்ஜின் பவர் குறைவாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், பைக்கின் குறைவான எடை அந்தக் குறைபாட்டை ஈடுகட்டும் என நம்பலாம்.

இந்த செக்மென்ட்டிலேயே (110சிசி) குறைவான எடை, 2 மேட் ஃபினிஷ் கலர் ஆப்ஷன்கள், BS-IV இன்ஜின், நல்ல மைலேஜ் என பல ப்ளஸ்களைக்கொண்ட சல்யூட்டோ RX பைக், கம்யூட்டர்களுக்கு நல்ல சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு