Published:Updated:

"ஸ்டைல்தான் கெத்து!"

ரீடர்ஸ் ரெவ்யூ: பெனெல்லி TNT 25ஞா.சுதாகர் , படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

பிரீமியம் ஸ்டோரி
"ஸ்டைல்தான்  கெத்து!"

ன்னுடைய முதல் பைக், டிவிஎஸ் விக்டர். பிறகு அப்பாச்சி 180, அவென்ஜர் 220 ஆகிய இரண்டும் வாங்கினேன். இவை வாங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், கொஞ்சம் பவர்ஃபுல் பைக் வாங்கலாம் எனத் தீர்மானித்தேன். கேடிஎம் டியூக், ராயல் என்ஃபீல்டு புல்லட், ஹோண்டா CBR ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது என் எண்ணம்.

"ஸ்டைல்தான்  கெத்து!"

ஏன் பெனெல்லி TNT25?

முதன்முறையாக பவர்ஃபுல் பைக் வாங்குகிறேன் என்பதால், மார்க்கெட்டில் வேறு ஏதாவது பைக் வரவிருக்கிறதா எனப் பார்த்தேன். அப்போதுதான், பெனெல்லி TNT25 பற்றி டெஸ்ட் ரிப்போர்ட் மோட்டார் விகடன் ஆகஸ்ட் இதழில் வந்திருந்தது. அதைப் படித்தபோது, நிச்சயம் இது நமக்குச் சரியான பைக்காக இருக்கும் எனத் தோன்றியது. பைக் வெளிவரும் வரை காத்திருக்க முடிவு செய்தேன்.

ஷோரூம் அனுபவம்

முதலில் பைக்கைப் பார்ப்பதற்காக, சென்னை DSK பெனெல்லியில் ஷோரூம் விசிட் அடித்தேன். தனித்துவமான இதன் ஸ்டைல், பார்த்தவுடன் என்னைக் கவர்ந்துவிட்டது. ஷோரூமில் இதன் சிறப்புகள் பற்றித் தெளிவாக விளக்கினார்கள். அடுத்த நாள் புக் செய்துவிட்டேன். டெலிவரி முதல் சர்வீஸ் வரை எனக்கு முழுத் திருப்தி.

"ஸ்டைல்தான்  கெத்து!"

எப்படி இருக்கிறது பெனெல்லி ?

எந்தச் சாலையில் சென்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் தனித்துவமாக இருக்கிறது. இந்த ஸ்டைல்தான் பெனெல்லியின் கெத்து. 250 சிசி இன்ஜின் என்பதால், ஆரம்பம் முதல் டாப் எண்ட் வரை பவர் டெலிவரி பக்கா. பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன் ஹேண்டில்பாரில் அதிர்வுகள் தெரிகிறது. ஆரம்ப வேகங்களில் இருக்கும் இந்தப் பிரச்னை, 40 கி.மீ வேகத்தைத் தாண்டினால் கிடையாது. பைக் டெலிவரி எடுத்ததும் ஊட்டி வரை டிரைவ் சென்று வந்தேன். மலைப் பாதையில் ஏறும்போது பவர் டெலிவரி சீராக இருந்தது.

கொஞ்சம் வெயிட்டான பைக்போலத் தெரிந்தாலும், கையாள மிக எளிதாக இருக்கிறது. டர்னிங் ரேடியஸ் குறைவுதான். பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ் இரவில்கூட ஆஃப் ரோடிங் செய்யத் தூண்டுகிறது. மோனோஷாக் சஸ்பென்ஷன் அருமை. மெட்ஸெல்லர் டயர்கள் செம கிரிப். அதனால், வளைவுகளில் தைரியமாகத் திருப்ப முடிகிறது. முன்பக்க பிரேக் லீவரை நமக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஸ்டைல். 17 லிட்டர் ஃபியூல் டேங்க், நீண்ட தூரப் பயணங்களுக்கு வசதி.

பொதுவாக, பெர்ஃபாமென்ஸ் பைக்குகள் சிங்கிள் ரைடருக்குத்தான் ஏற்றபடி இருக்கும். ஆனால், இதில் இருக்கும் ஸ்பிளிட் சீட், பில்லியன் ரைடருக்கும் சொகுசாக இருப்பது சிறப்பு. ரெவ் செய்யும்போது வித்தியாசமாக இருக்கும் எக்ஸாஸ்ட் சத்தம் இதன் ஸ்பெஷல். நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 30 கி.மீ வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம். 5-வது கியரில் 40 கி.மீ வேகத்தில் சென்றால்கூட இன்ஜின் திணறுவது இல்லை.

என் தீர்ப்பு

பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்டில் முதன்முதலில் நுழைபவர்களுக்கும், டூரர் பைக்கை விரும்புபவர்களுக்கும் சரியான சாய்ஸ், பெனெல்லி TNT 25. இதன் போட்டி பைக்குகளோடு ஒப்பிட்டால், இதுதான் முன்னால் நிற்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு