Published:Updated:

பவர்ஃபுல் யுவோ டிராக்டர்!

விவசாயம்: டிராக்டர்ராகுல் சிவகுரு, படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி
 பவர்ஃபுல் யுவோ டிராக்டர்!

டிராக்டர் உற்பத்தியிலும் விற்பனையிலும் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில் ‘யுவோ’ எனும் பெயரில் புதிய வகை டிராக்டர்களை அறிமுகம் செய்தது. தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இந்த டிராக்டர்கள், 30hp முதல் 45hp வரை பவரை வெளிப்படுத்தக்கூடிய மாடல்கள்.

இது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் 15 hp - 57 hp சக்தி கொண்ட மஹிந்திராவின் மற்ற டிராக்டர்களுடன் சேர்ந்தே விற்பனையாகும் எனத் தெரிவித்துள்ளது மஹிந்திரா. 265DI(32HP), 275DI(35HP), 415DI(40HP), 475DI(42HP), 575DI(45HP) ஆகிய 5 வேரியன்ட்களில் கிடைக்கும் யுவோ மாடல்கள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் ஆரம்ப விலை 4.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய யுவோ சீரிஸ் டிராக்டர்கள் 300 கோடி ரூபாய் முதலீட்டில், முற்றிலும் புதிய ஃப்ளாட்ஃபார்மில் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘டிராக்டர்களில் முதன்முறையாக, கார் போன்ற சைடு ஷிஃப்ட் மெக்கானிஸம் கொண்ட 12F+3R கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நிலத்தைத் தயார்படுத்துவது, அறுவடை செய்வது போன்ற 30 வகையான விவசாயப் பணிகளுக்கு யுவோ மாடல் டிராக்டரைப் பயன்படுத்த முடியும்’ என்கிறது மஹிந்திரா.

 பவர்ஃபுல் யுவோ டிராக்டர்!

நம் நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 7,000 வாடிக்கையாளர்களிடம் பேசி, புதிய டிராக்டரில் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, யுவோ டிராக்டரின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளை சென்னையில் இருக்கும் மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் செய்துள்ளது மஹிந்திரா. யுவோ டிராக்டர்கள், 400 மணி நேர சர்வீஸ் இடைவெளியைக் கொண்டிருப்பதால், அடிக்கடி சர்வீஸ் சென்டருக்குச் செல்லத் தேவை இல்லை. கூலிங் சிஸ்டம் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இன்ஜின் விரைவில் சூடாகாமல் பவர் மற்றும் டார்க்கை சீராக வெளிப்படுத்தும் என்கிறது மஹிந்திரா.

‘‘கன்ட்ரோல் வால்வுகளைக் கொண்ட பவர்ஃபுல்லான ஹைட்ராலிக் சிஸ்டம் யுவோவில் இருப்பதால், விவசாயப் பணிகளைத் தவிர குப்பைகள் அகற்றுதல், ஆழமான பள்ளங்கள் தோண்டுவது, 1.5 டன் வரை பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளையும் இதில் சுலபமாகச் செய்ய முடியும். வசதியான ஓட்டுநர் இருக்கை, கைக்கு எட்டும் தூரத்தில் லீவர்கள் மற்றும் பெடல்கள் என டிராக்டரை இயக்குபவரின் சொகுசுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறது மஹிந்திரா நிறுவனம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு