Published:Updated:

ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!
ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!

அறிமுகங்கள் / ஹோண்டா கார்ஸ்ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!
ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!

ஹோண்டாவின் கவனம், தற்போது இந்தியாவில் மாஸ் மார்க்கெட் கார்களைக் களமிறக்குவதில்தான் உள்ளது. அக்கார்டு, சிவிக், CR-V என பிரீமியம் கார்கள், ஹோண்டாவின் ஷோரூமை ஆக்ரமித்திருந்த காலம் வரலாறாகிவிட்டது. இவற்றில் CR-V மட்டுமே தற்போது தாக்குப்பிடித்து நிற்கும் நிலையில், வரலாறு திரும்புகிறது. ஆம், தனது பிரீமியம் கார் தயாரிப்பாளர் என்ற பிம்பத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, இந்த ஆண்டுக்குள் அக்கார்டு ஹைபிரிட் காரை, உத்தேசமாக 40 லட்ச ரூபாய்க்கு விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ஹோண்டா.

ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!

ஹோண்டா சிட்டிக்கும் அக்கார்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பும்விதமாக, சிவிக் செடான் காரை 2017-ம் ஆண்டுக்குள் ஹோண்டா இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. 8-வது தலைமுறை சிவிக், இங்கு 2006 - 2013 வரை விற்பனை செய்யப்பட்டது. அட்டகாசமான டிஸைன் மற்றும் கேபினைக்கொண்டிருந்த இந்த கார், எக்ஸிக்யூட்டிவ் செடான் பிரிவில் முன்னணியில் இருந்தது. இடையே அந்த செக்மென்ட் சந்தித்த சுணக்கத்தால், சிவிக்கின் விற்பனையை நிறுத்தியது ஹோண்டா. 9-வது தலைமுறை உலகெங்கிலும் நற்பெயரைச் சம்பாதிக்காததால், அந்த காரை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா ஆர்வம் காட்டவில்லை. 10-வது தலைமுறை சிவிக், தான் இழந்த இடத்தைப் பிடிக்கும் உறுதியுடன் களம் காண உள்ளது. அதற்கு காரின் கூபே மற்றும் நாட்ச்பேக் கலந்த மாடர்ன் டிஸைனே சாட்சி. சிவிக்கின் கட்டுமானத்துக்காக Ultra High Strength Steel பயன்படுத்தப்பட்டுள்ளதால், காருடைய சேஸியின் திடத்தன்மை, பழைய காரைவிட 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, 143bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 175bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 120bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் என வெரைட்டிக்குப் பஞ்சம் இல்லை. விலை, எப்படியும் 16 லட்சத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.

ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்!

10 - 15 லட்ச ரூபாயில்  BR-V இருக்கிறது. 25 - 30 லட்ச ரூபாயில்  CR-V இருக்கிறது. எனவே 20 - 25 லட்ச ரூபாய்க்கான காராக, HR-V காரை அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. ஜாஸ் மற்றும் சிட்டி தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும்  HR-V காரின் விலை, 17 லட்சத்தைத் தாண்டும். ஆசிய சந்தைகளில் பல்வேறு ஆப்ஷன்களுடன் இந்த கார் கிடைக்கிறது. அவை இங்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றாலும், விலை அதிகம். காரின் நீளம் அதிகம் இல்லையென்றாலும், கேபின் இடவசதி ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு ஹேண்டாவின் ‘Men Maximum, Machine Minimum’ என்ற கோட்பாடுக்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டுள்ளதே காரணம். இங்கு இது விற்பனைக்கு வரும்போது, 120bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்தியாவில் ஹோண்டாவின் ஓரே டீசல் இன்ஜினான 1.5 லிட்டர் எர்த் ட்ரீம்ஸ் இன்ஜினுக்கும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1.6 லிட்டர் டீசல் இன்ஜினுக்கும் அதிக ஒற்றுமைகள் இருந்தாலும், இன்ஜினின் விலை மற்றும் இங்குள்ள எரிபொருள் தரத்தைக் காரணம் காட்டி, இந்த இன்ஜினைக் கொண்டு வர ஹோண்டா கடந்த காலங்களில் விரும்பவில்லை. இதனாலேயே நல்ல கார் என்றாலும், டீசல் இன்ஜின் இல்லாத CR-Vயின் விற்பனை மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே, இந்தியாவிலேயே இந்த இன்ஜினை அசெம்பிள் செய்து, நம் நாட்டுக்கு ஏற்றபடி பிரத்யேகமாக ட்யூன் செய்து, தனது புதிய கார்களில் ஹோண்டா பொருத்தும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு