Published:Updated:

பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...
பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

உள்ளே என்ன நடக்கிறது? என்ன செய்ய வேண்டும்?பெட்ரோல் ஃபில்லிங் / டிப்ஸ்தமிழ்

பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

எப்போதாவது

தெரியாமல் நடக்கும் விஷயம்தான். ஆனால், நடக்கக் கூடாத விஷயம் - ‘ஃப்யூல் ஸ்வாப்’ (Fuel Swap)- அதாவது, டீசல் காரில் பெட்ரோலையும், பெட்ரோல் காரில் டீசலையும் மாற்றிப் போடுவது. நூறில் ஐந்து பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

பெரும்பாலும், பெட்ரோல் கார்களில் டீசல் நிரப்ப வாய்ப்பு இல்லை. ஏனென்றால், டீசல் கன் நாஸில், பெட்ரோல் டேங்க்கின் வாய்ப் பகுதியில் நுழையாது; இது அளவில் கொஞ்சம் பெரியது. எனவே, உள்ளே நுழைக்கும்போதே பம்ப் ஊழியர் உங்களை எச்சரிக்கலாம். அதையும் மீறி ஏதோ ஒரு ஞாபகத்தில் எரிபொருளை மாற்றி நிரப்பிய பிறகு, மெடுல்லா ஆப்லெங்கேட்டாவில் அடிபட்டது மாதிரி, ‘என்னாச்சு?’ என்று விஜய் சேதுபதி போலப் புலம்புவதைத் தவிர்க்க சில ஐடியாக்கள்!

முதலில், பெட்ரோல் இன்ஜினுக்கும் டீசல் இன்ஜினுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துவிடலாம். பெட்ரோல் இன்ஜினில் ஸ்பார்க் ப்ளக் இருக்கும். இது ஏற்படுத்தும் தீப்பொறியால் பெட்ரோலும் காற்றும் கலந்த கலவை எரியூட்டப் படுகிறது. இதுவே, டீசல் இன்ஜினில் ஸ்பார்க் ப்ளக் இருக்காது. சிலிண்டரில் இருக்கும் காற்று அழுத்தப்படுவதால் ஏற்படும் வெப்பத்தின்போது, டீசல் இன்ஜெக்டர் எரிபொருளை ஸ்ப்ரே செய்வதன் மூலம் எரிதல் நடைபெறுகிறது. டீசல் - பெட்ரோல் ஆகிய  இரண்டுமே எரிபொருள்கள்தான் என்றாலும், ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு - கார்த்திக் மாதிரி இரண்டும் வெவ்வேறு கேரக்டர்கள் கொண்டவை. டீசல், பெட்ரோலைவிட அடர்த்தியான, தடிமனான திரவம். அதிக அழுத்தத்தின் மூலம் மட்டுமே டீசல் எரியும். இது பெட்ரோலைப்போல ஆவியாகும் தன்மை கொண்டது இல்லை.

பெட்ரோல் இன்ஜின் கொண்ட காரில் டீசலை நிரப்பும்போது, அவை உள்ளே மூழ்கி மிச்சமிருக்கும் பெட்ரோலுடன் கலந்தாலும், இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்காது. அதனால், ஃப்யூல் இன்ஜெக்டர்கள் குழப்பத்துடன் எரிபொருளை இன்ஜினுக்கு அனுப்பும். நீங்கள் காரை ஸ்டார்ட் செய்யும்போது ஸ்பார்க் ப்ளக்குகள், டீசலை எரிக்க முடியாமல் மூச்சு வாங்கும். பிறகு, இன்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாமல் திணறும். அப்புறம் ரொம்ப சிம்பிள்... இன்ஜினுக்குப் பெரிதாக வேலை வைத்து, பர்ஸ் காலியாகும்.

பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

இதுவே, டீசல் இன்ஜின் கொண்ட காரில் பெட்ரோலை நிரப்புவது, அடிக்கடி நிகழக்கூடிய விஷயம். ஏனென்றால், டீசல் காரின் ஃப்யூல் டேங்க் அளவில் பெரிதாக இருக்கும். எனவே, பெட்ரோல் கன் நாஸிலை எளிதாக உள்வாங்கிவிடும். இப்போதுள்ள CRDi இன்ஜின்கள் அதிக அழுத்தத்துடன் இயங்கக் கூடியவை. டீசலைவிட தடாலென எளிதில் தீப்பிடிக்கும் தன்மைகொண்ட பெட்ரோலும் சேரும்போது, அதிக அழுத்தத்தால் இன்ஜின் பிஸ்டன்களில் பாதிப்பு ஏற்படுவது உறுதி. மேலும் டீசல், எரிபொருளாக மட்டுமல்லாமல், சிறந்த லூப்ரிகன்ட் ஆகவும் செயல்படும் தன்மை கொண்டது. தடிமனான டீசலுடன் புதிதாக இறங்கிய ஒல்லியான பெட்ரோல் இணையும்போது, அது லூப்ரிகன்ட் தன்மையை இழக்கிறது. இது இன்ஜினின் உராய்வுத்தன்மையை அதிகரித்து, இன்ஜின் மொத்தமாக செயலிழக்க வழி செய்துவிடும். அப்புறம் கதம் கதம்!

என்ன செய்ய வேண்டும்?

தெரியாமல் எரிபொருள் மாற்றி நிரப்பி விட்டால், காரை உடனடியாக ஸ்டார்ட் செய்யாதீர்கள். இன்றைய மாடர்ன் கார்களில், நீங்கள் ஸ்டார்ட் செய்த அடுத்த விநாடி, எரிபொருள் இன்ஜினின் இண்டு இடுக்குகளில் சர்க்குலேட் ஆகிவிடும். ‘ஐயோ, பணம் போச்சே’னு நினைக்காமல், காரை TOW பண்ணி, மொத்த எரிபொருளையும் டிரெய்ன் செய்து எடுத்துவிடுவதுதான் உங்கள் காரைக் காப்பாற்ற ஒரே வழி! அதையும் மீறி, ‘அப்படியே சர்வீஸ் சென்டர்ல கொண்டு போய் விட்டுடலாம்’ என்று நினைத்து காரை எடுக்க முயற்சிக்காதீர்கள். சர்வீஸ் சென்டர் வரை கார் நிச்சயம் போகாது.
எல்லாம் சரி; நடந்தது எதுவுமே தெரியாமல் நீங்கள் காரை ஓட்டிவிட்டால்... ஃப்யூல் பம்ப், டீசல் இன்ஜெக்டர்கள், இன்ஜின் ஹெட், ஃபில்டர்கள், பிஸ்டன்கள் ரீப்ளேஸ்மென்ட் போன்ற பெரும் செலவுகள் காத்திருக்கின்றன. எனவே, வருமுன் காப்பது நல்லது.

எரிபொருள் நிரப்பும்போது...

பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...

•  பெட்ரோல் பங்க்கில் நுழையும்போது, டீசல்/பெட்ரோல் லேனில் சரியாக காரைச் செலுத்துங்கள்.

• சிலர் பெட்ரோல்/டீசல் இரண்டு கார்களுமே பயன்படுத்துவார்கள். அவர்கள் காரின் ஃப்யூல் டேங்க்கில் பெ/டீ ஸ்டிக்கர் ஒட்டி விட்டால், பெட்ரோல் பம்ப் ஊழியருக்கும் ஈஸி, நமக்கும் ஈஸி. இங்கு, ஸ்டிக்கர் நல்லது!

• எரிபொருள் நிரப்பும்போது, எப்போதுமே காரை ஐடிலிங்கில் வைக்காதீர்கள். இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, எரிபொருள் நிரப்புவது பேராபத்தைத் தவிர்க்கும்.

• எரிபொருள் நிரப்பும்போது புனல் பயன்படுத்தாதீர்கள். இதன் மூலம் பெட்ரோல் காரில் டீசல் நிரப்புவதைத் தடுக்க முடியும்.

• செல்போன் ரிங் அடித்தால், மறந்தும்கூட எடுத்துவிடாதீர்கள். செல்போன் ரேடியேஷன்கள், சடாரெனத் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை.

• எரிபொருள் நிரப்பும்போது, குழந்தைகளை அருகே விடாதீர்கள்.

• எப்போதுமே ஒரே பங்க்கில் ஃப்யூல் நிரப்புங்கள்.

• ஜீரோ செக் செய்யத் தவறாதீர்கள். சில ஊழியர்கள் கவனிக்காததுபோல், தொகையைக் குறைவாக செட் செய்துவிடுவார்கள். ‘‘ஸாரி சார்.. 1,000 சொன்னீங்களா? நான் 300னு நினைச்சேன்?’’ என்று திரும்ப ஜீரோ செட் செய்யாமல், அதிலிருந்து 700-க்கு செட் செய்வார்கள். உங்களுக்கு 300 ரூபாய் நாமம்! இந்த மோசடி, பைக்குகளுக்கும் பொருந்தும் மக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு