Published:Updated:

பக்கா பட்ஜெட் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / டட்ஸன் ரெடி-கோபி.ஆரோக்கியவேல்

பக்கா பட்ஜெட் கார்!

டட்ஸன் அறிமுகப்படுத்திய கோ, கோ-ப்ளஸ் ஆகிய இரண்டு கார்களுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், ரெடி-கோ காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

புத்தம் புதிய ரெடி-கோ காரை கொல்கத்தாவின் நகர்ப்புறச் சாலைகளில் ஓட்டிப் பார்த்தேன்.  அதிக கார்கள் விற்பனையாகும் காம்பேக்ட் செக்மென்ட்டில் மாருதி ஆல்ட்டோவுடனும், (அதன் உடன் பிறவா அண்ணனான) ரெனோ க்விட் காருடனும் போட்டி போடுவதற்காவே ரெடி-கோ உருவாக்கப்பட்டிருக்கிறது.

டிஸைன்

ரெடி-கோ காரின் வெளிப்புற டிஸைன், சாலையில் செல்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. ரெனோ க்விட் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் தயாராகும்
ரெடி-கோ காரில் இருப்பதும், க்விட் காரில் இருப்பதும் ஒரே இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் சஸ்பென்ஷன்தான். இருந்தாலும், நீள, அகல, உயரங்களில் மாறுதல் இருப்பதால், க்விட்டைவிட தாராளமான கேபின் ஸ்பேஸ் கொண்ட காராக மட்டுமல்ல, உயரமான காராகவும் இருக்கிறது ரெடி-கோ. அதனால், டால் பாய் என்று அழைக்கப்பட்ட ஹூண்டாய் சான்ட்ரோவின் இடத்தை டட்ஸன் குறி வைப்பது புரிகிறது (சான்ட்ரோ மீண்டும் வருகிறதாமே!) என்றாலும், இதை டால் பாய் என்று குறிப்பிடாமல் ‘அர்பன் கிராஸ்’ என்று இன்னும் சிறந்த அடைமொழியை டட்ஸன் இதற்குக் கொடுத்திருக்கிறது. ஆனால், அதிலும் ஒரு வகையில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. காரணம், இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 185 மிமீ. இது, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி எஸ்-க்ராஸ் ஆகியவற்றைவிட அதிகம்.

பக்கா பட்ஜெட் கார்!

** பூட் ஸ்பேஸ் 

222 லிட்டர் என்பது போதுமானதுதான். ஆனால், டிக்கி உயரமாக இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்க சிரமப்பட வேண்டியுள்ளது.

** கியர் ஸ்மூத்தாக இல்லை.

உயரமான கார் என்பதால், வளைவுகளில் வேகமாகத் திரும்பும்போது, லேசாக பாடி ரோல் இருக்கிறது.

உள்ளே

இதன் கேபின், டூயல் டோன் கொண்டதாக இருப்பதால், மற்ற டட்ஸன் கார்களைப்போல இது டல் அடிக்கவில்லை. உயரமான சீட்டுகளும் அகலமான பெரிய கண்ணாடிகளும் காரை தாராளமான இடம் கொண்ட காராகக் காட்டுகின்றன. டட்ஸனின் மற்ற கார்களில் காணப்படும் அதே ஸ்பீடோ மீட்டரையும் ஏ.சி வென்ட்டுகளையும் இதிலும் பார்க்க முடிகிறது. ஆனால், காரின் பின்னிருக்கையில் இருப்பவர்களுக்காக, நடுவே புதிதாக ஒரு ஏ.சி வென்ட் வைத்திருக்கிறார்கள். க்ளோவ் பாக்ஸ் மிகவும் சிறிதாக இருக்கிறது. கேபின் தரம் ஹூண்டாய் இயான் அளவுக்கு இல்லை. ஆனால், மாருதி ஆல்ட்டோவைவிட பெட்டராக இருக்கிறது. பட்ஜெட் கார் என்பதால், இதில் சென்டர் லாக்கிங் வசதி இல்லை. வைப்பரும் ஒன்றே ஒன்றுதான். ஏபிஎஸ் இல்லை. டிரைவருக்கு காற்றுப் பை வேண்டும் என்றால், அது ஆப்ஷனல். ஆனால் ரேடியோ, CD ப்ளேயர், ஆக்ஸ், USB ஆகியவை உண்டு.

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார் என்பதால், குனியாமல் காருக்குள் நுழைந்து உட்கார முடிகிறது. குறிப்பாக, இதன் பின்னிருக்கைகள்   போட்டியாளர்களைவிட தாராளமாக இருக்கின்றன. முன்னிருக்கையில் உட்கார்ந்தால், சாலை தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இதில் சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி இல்லை. ரிவர்ஸ் எடுக்கும்போது C பில்லர் சற்றே பார்வையை மறைக்கிறது. பூட் ஸ்பேஸ் 222 லிட்டர் என்பது போதுமானதுதான். ஆனால், டிக்கி உயரமாக இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்கச் சிரமப்பட வேண்டும்.

இன்ஜின்

ரெனோ க்விட் காரில் இருக்கும் 3 சிலிண்டர்கள்கொண்ட 799 சிசி இன்ஜின்தான் இதிலும். இது, 54 bhp சக்தியையும், 7.2 kgm டார்க்கையும் அளிக்கிறது. க்விட்டைவிட 25 கிலோ எடை குறைவு. இன்ஜினையும் மைலேஜுக்காக ரீ-கேலிபரேட் செய்திருக்கிறார்கள். அதனால், ரெடி-கோ காரை ஓட்டுவதும் க்விட்டை ஓட்டுவதும் வேறு வேறு அனுபவமாக இருக்கிறது. 1,100 ஆர்பிஎம்-ஐத் தாண்டினால், ஸ்டீயரிங்கில் அதிர்வுகள் தெரிகின்றன. 4,500 ஆர்பிஎம்-க்கு மேல் ரெவ் செய்தால், சத்தம் போடுகிறது. முன்னே செல்லும் வாகனங்களை, கியரைக் குறைத்துத்தான் ஓவர்டேக் செய்ய வேண்டியிருக்கிறது.

பக்கா பட்ஜெட் கார்!

வர்ஸ் கியருக்கு, லீவரை மேல் நோக்கி உயர்த்தித்தான் மாற்ற வேண்டும். இது, சிலருக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால், கை தவறி யாரும் ரிவர்ஸ் கியர் போட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள். கியர் ஸ்மூத்தாக இல்லை. உயரமான கார் என்பதால், வளைவுகளில் வேகமாகத் திரும்பும்போது, லேசாக பாடி ரோல் இருக்கிறது. ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதால், சிட்டி டிரைவிங்குக்கு வசதியாக இருக்கிறது. இதன் டர்னிங் ரேடியஸ் 4.7 மீட்டர்தான். அதனால், இதை பார்க்கிங் செய்வது சுலபம். 

முதல் தீர்ப்பு

98 சதவிகிதம் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு உருவாகும் கார் என்பதால், இதன் விலை குறைவு. அதிக மைலேஜ் இதன் இன்னொரு பலம். தாராளமான கேபின், உயரமான வடிவமைப்பு, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ்... இவை எல்லாம் ரெடி-கோ காருக்குச் சாதகமான விஷயங்கள். விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதால், ஆங்காங்கே பல்லை இளிக்கும் பேனல்கள் இதன் பெரிய மைனஸ். ஆனாலும், பார்வைக்கு ஒரு பிரீமியம் கார் போலவே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு