பிரீமியம் ஸ்டோரி
SPY PHOTO  - ரகசிய கேமரா

ஹூண்டாய் டூஸான்

க்ரெட்டாவின் வெற்றி, ஹூண்டாயின் கவனத்தை எஸ்யுவி-களின் பக்கம் திருப்பியுள்ளது. க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ கார்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடத்தை (18 - 25 லட்சம் விலை) நிரப்பும் வகையில், டூஸான் எஸ்யுவியைக் களமிறக்குகிறது ஹூண்டாய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், டூஸான் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள புதிய 1.4 லிட்டர்  T-GDI டர்போ பெட்ரோல் இன்ஜின் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது TL என்ற புனைப் பெயருடன், இந்த காரின் டெஸ்ட்டிங் துவங்கிவிட்டது. சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த காரின் ஸ்பை படங்களை எடுத்துள்ளார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் பத்ரி.

SPY PHOTO  - ரகசிய கேமரா

ஹூண்டாய் டூஸான் காரைப் படம் எடுத்து அனுப்பிய சென்னை வாசகர் பத்ரி, ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

செவர்லே பீட்

SPY PHOTO  - ரகசிய கேமரா

தற்போது விற்பனையில் இருக்கும் பீட்டின் பிளாட்ஃபார்மை முற்றிலுமாக மேம்படுத்தி, தான் தயாரிக்க உள்ள ESSENTIA காம்பேக்ட் செடான் மற்றும் பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் கான்செப்ட்டையும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது செவர்லே. இப்போது பீட் ஆக்டிவ் கிராஸ்ஓவர் கான்செப்ட்டின் டெஸ்ட்டிங் துவங்கிவிட்டது. பெங்களூருவில் வொயிட்ஃபீல்டு அருகே டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த காரின் ஸ்பை படங்களை எடுத்துள்ளார், பெங்களூரைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகர் நாகேந்திரன்.

செவர்லே பீட் ஆக்டிவ் காரைப் படம் எடுத்து அனுப்பிய பெங்களூர் வாசகர் நாகேந்திரன், ஜெர்கின் பரிசாகப் பெறுகிறார்.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.

email: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு