Published:Updated:

ஆல்ரவுண்டர் டிகுவான்!

ஃபர்ஸ்ட் லுக் / ஃபோக்ஸ்வாகன் டிகுவான்தொகுப்பு : ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
ஆல்ரவுண்டர் டிகுவான்!

இந்தியாவின் எஸ்யுவி செக்மென்ட், ஃபோக்ஸ்வாகனுக்கு ஆகாத செக்மென்ட்டாகவே இருந்திருக்கிறது. 2017-ம் ஆண்டு மத்தியில், தன்னுடைய MQB பிளாட்ஃபார்மில் உருவான முதல் எஸ்யுவியான டிகுவான் காரை அறிமுகப்படுத்துகிறது ஃபோக்ஸ்வாகன். விலை 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்பதால், ஹூண்டாய் சான்டா ஃபீ, ஹோண்டா CR-V, வரவிருக்கும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் போன்ற கார்களுக்கு செம போட்டி இருக்கிறது!

டிஸைன்

காரின் தோற்றம் பாக்ஸ் போல இருக்கிறது. ஆனால், தொடர்ந்து காரின் டிஸைனை மனதுக்குள் அசைபோடும்போதுதான் சிறப்பம்சங்கள் வெளிப்படுகின்றன. LED ஹெட்லைட்ஸ் இதற்குச் சிறந்த உதாரணம். உற்றுநோக்கினால், எவ்வளவு நேர்த்தியான டிஸைன் என்பது புரியும். காரின் பின்பக்கம் ஜெட்டா, பஸாத் கார்களை நினைவூட்டினாலும், டெயில் லைட் பூமராங் ஸ்டைலில் உள்ளது.

உள்பக்கம்

தன்னுடைய வழக்கமான உள்பக்க டிஸைன் கொள்கையை டிகுவானில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளது ஃபோக்ஸ்வாகன். சென்டர் கன்ஸோல், டேஷ்போர்டு, ஸ்விட்ச் கியர் ஆகியவை மாடர்னாகவே இருக்கின்றன. கேபினில் உள்ள பாகங்கள் தரமாக உள்ளன. ஜெர்மனில் உள்ள காரில் டேஷ்போர்டு கறுப்பு வண்ணத்தில் இருந்தாலும், இந்தியாவில் டூயல் டோன் இன்டீரியர் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹர்மான் கார்டோன் ஆடியோ, ஹீட்டட் எலெக்ட்ரிக் முன்பக்க இருக்கைகள், இன்ஜின் ஸ்டாப்-ஸ்டார்ட், டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, மிரர் லிங்க், டிரைவ் மோடுகள், ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு ஆஃப் ரோடு மோடு செலெக்டர், 360 டிகிரி சரவுண்ட் கேமராக்கள் என்று வசதிகளுக்கு டிகுவானில் குறைவில்லை.

ஆல்ரவுண்டர் டிகுவான்!
ஆல்ரவுண்டர் டிகுவான்!

பின்னிருக்கையை முன்னே தள்ளிவிட்டால், டிக்கி இடவசதி 615 லிட்டர்களாக இருக்கிறது. அதே பின்னிருக்கையைப் பின்னே தள்ளிவிட்டால், இடவசதி சொகுசு செடான் போல இருக்கிறது. லெதரும் உயர்தரமாக இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த டிஸைன், போட்டி கார்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் டல்தான்.

இன்ஜின்

டிகுவானில் இருக்கும் முக்கியமான இன்ஜின் 2.0 லிட்டர் TDI இன்ஜின். இந்தியாவில் இது 150 bhp அல்லது 190 bhp டியூனிங்கில்  வரலாம். பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் உள்ளன. இரண்டு இன்ஜின் சாய்ஸுக்குமே 6-ஸ்பீடு மேனுவல் அல்லது  7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உண்டு. ஃப்ரன்ட் வீல் டிரைவ் அல்லது ‘4Motion’ ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் இருக்கின்றன.
டீசல் இன்ஜினை ஆன் செய்ததும் கொஞ்சம் அலட்டல், அதிர்வுகளுடன்தான் இயங்குகிறது. அதன்பிறகு, ஸ்மூத்தாக இயங்கினாலும் 3,000 ஆர்பிஎம்-க்கு மேல் மீண்டும் சத்தம் அதிகம். ஆனால், சாலைச் சத்தம் காருக்குள் அதிகம் வருவது இல்லை. குறைந்த ஆர்பிஎம்-ல் இருந்தே விரட்டினாலும், கொஞ்சம் மெதுவாக இழுக்க ஆரம்பிக்கிறது. அதன்பிறகு, ஆக்ஸிலரேஷனில் நல்ல முன்னேற்றம். 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் இருப்பதே தெரியவில்லை. அவ்வளவு க்விக்காக, ஸ்மூத்தாக இயங்குகிறது. தெரியாமல் காரை கியரில் இருந்து எடுக்கும்போது இன்ஜின் ஆஃப் ஆகி ஸ்டால் ஆகிவிட்டால், கிளட்ச்சை மிதித்தால் போதும்; ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் காரை ஆன் செய்துவிடுகிறது.

ஆல்ரவுண்டர் டிகுவான்!

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஜெட்டாவைப் போலவே நல்ல ஸ்டேபிளான சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளது டிகுவான். ஸ்டீயரிங்

ஆல்ரவுண்டர் டிகுவான்!

ரொம்பவே லைட்டாக இருப்பதாகத் தோன்றினாலும், ஸ்போர்ட் மோடில் ஓட்டினால், ஸ்டீயரிங் எடை கச்சிதமாகி விடுகிறது. எனவே, அதிக வேகங் களில்கூட, தைரியமாக லேன் மாற முடிகிறது.

2017-ம் ஆண்டு வரை இந்த காரை வாங்க முடியாது என்றாலும், புதிய நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரும் வரவிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்படியிருந்தாலும், டிகுவான் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் கார். ஃபோக்ஸ்வாகன் கார்களில் இருந்து இந்தியர்கள் எதிர்பார்க்கும் நல்ல கட்டுமானத் தரம், சொகுசான ஓட்டுதல் தரம், நிறைய வசதிகள் ஆகிய அம்சங்கள் டிகுவானில் உள்ளன. என்ன விலை... என்ன நிலையில் இருக்கும்? காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு