Published:Updated:

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!
பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

தமிழ்

பிரீமியம் ஸ்டோரி

பொண்ணுங்க, மாப்பிள்ளையைக்கூட சீக்கிரம் செலக்ட் பண்ணிடுவாங்க; ஆனா, ஸ்கூட்டர் வாங்குற விஷயத்துல அவ்ளோ சீக்கிரம் திருப்திப்பட மாட்டாங்க. ‘அந்த ஸ்கூட்டர் வாங்கியிருக்கலாமோ... இதைவிட அதுல மைலேஜ் நல்லா வரும்போல இருக்கே?’ என கன்னாபின்னா டயலமாவுல சிக்கித் தவிக்கிற பெண்களின் நலன் கருதி, மார்க்கெட்டில் டாப் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்டும் அதன் ப்ளஸ் - மைனஸ் விஷயங்களும் இதோ... (விலைகள் எல்லாமே சென்னை ஆன் ரோடு)

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட, சாஃப்ட் சஸ்பென்ஸன் கொண்ட அருமையான ஸ்கூட்டர். ஒல்லியான பெண்கள் ஈஸியாக ஹேண்டில் செய்யலாம். இந்தியாவில் இருக்கும் ஸ்கூட்டர்களிலேயே கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவான ஸ்கூட்டர், ரே-தான். எனவே, ஸ்பீடு பிரேக்கர்களில்... பீ கேர்ஃபுல்.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

ஆக்டிவா 110 மெட்டல் பாடி என்பதால், ஃபைபர் மெட்டீரியல் கொண்ட ஆக்டிவா-i ஸ்கூட்டரைவிட எடை கொஞ்சம் அதிகம். ஸ்கூட்டர்கள் அனைத்தும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுக்கு மாறிக் கொண்டிருக்க, ஆக்டிவா 110-ல் மட்டும் பழைய ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் என்பது நெருடல். இதனால், ஓட்டுதல் தரத்தில் ஆக்டிவா  - ஆக்டிவ் ஆக இல்லை. ஆனால், ஹோண்டாவின் காம்பி பிரேக்ஸ், மிகப் பெரிய நம்பிக்கை தருகிறது. எப்பொழுதுமே விற்பனையில் நம்பர்-ஒன் ஆக்டிவாதான். இதனால், ஸ்பேர்ஸ் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

பாஸ் லைட், யுஎஸ்பி செல்போன் சார்ஜ் போர்ட், சீட்டுக்கு அடியில் அதிக இடவசதி என்று வசதிகள் அதிகம். மேட்ஃபினிஷிங் ஸ்டைலிங், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், விலை அதிகம் என்பதோடு, கலர் ஆப்ஷனும் குறைவு.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

பெண்கள் ஈஸியாக பெட்ரோல் நிரப்புவதற்கு வழி செய்தது டிவிஎஸ்தான். வீகோவில் அந்த வசதி செம பிக்-அப் ஆனது. அந்த வகையில், பெண்கள் வயிற்றில் பால் வார்த்த பெருமை ஜூபிட்டருக்கும் உண்டு. மல்ட்டி ஃபோகஸ் ரெஃப்ளக்டருடன் கூடிய ஹாலோஜன் ஹெட்லைட், செம பவர்ஃபுல். பவர் மற்றும் எக்கோ மோடுகள் பயனுள்ளதாக இருக்கிறது. 110 விநாடிகள் ஐடிலிங்கில் இருந்தால், பெட்ரோல் வேஸ்ட் ஆகிறது என்று பவர் மோடு எச்சரிக்கும் விதமாக ஒளிரும்.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

ஸ்கூட்டரில் முதன் முதலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனைக் கொண்டுவந்த பெருமை, ஆக்ஸஸுக்குத்தான் உண்டு. ஸ்கூட்டர்களிலேயே அகலமான சீட் என்பதால், (30 இன்ச்) கணவன்-மனைவி-குழந்தை கொண்ட ஒரு குடும்பத்துக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக்ஸஸ். டிஸ்க் பிரேக் இருப்பதால், கல்லூரிப் பெண்களும் கெத்து காட்டலாம். ஆனால், பெட்ரோல் நிரப்ப, பழைய ஸ்டைலில் ஸ்கூட்டரை விட்டுக் கீழே இறங்க வேண்டியிருக்கிறது.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

வீகோ மற்றும் ஜூபிட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்பதால், பவர் ஓகே! ஆட்டோ சோக் சிஸ்டம் இருப்பதால் - ஸ்ட்ரீக், டீன்ஸ் போன்றவற்றில் இருப்பதுபோன்ற ஸ்டார்ட்டிங் ட்ரபுள் நிச்சயமாக ஜெஸ்ட்டில் கிடையாது. ஸ்கூட்டர்களிலேயே குறைவான எடை ஜெஸ்ட்தான். ஒல்லி பெல்லி பொண்ணுங்களுக்கு ஜெஸ்ட் பெஸ்ட் ஸ்கூட்டர்.

பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்!

மோட்டார் விகடன் தீர்ப்பு :

வசதிகள்தான் கஸ்ட்டோவின் நிஜ கெத்து. கார் சாவி போலவே இருக்கும் ஃப்ளிப் கீ-யில் ஃபைண்ட் மீ அலார்ம் இருப்பதால், கூட்டமான பார்க்கிங்கில் ஸ்கூட்டரைக் கண்டுபிடிப்பது ரொம்ப ஈஸி. ஸ்கூட்டர்களிலேயே முதன்முறையாக சீட் அட்ஜஸ்ட்மென்ட் கொண்டது கஸ்ட்டோதான். சீட்டும் நீளமாக இருப்பதால், (29 இன்ச்) ஒரு குடும்ப ஸ்கூட்டராகவும் விளங்குகிறது. உயரமானவர்கள், உயரம் குறைவானவர்கள் என்று யார் வேண்டுமானாலும் கஸ்ட்டோவை ஓட்டலாம். ஆனால், சர்வீஸ் நெட்வொர்க் குறைவு என்பது கஸ்ட்டோவுக்கு மிகப் பெரிய பலவீனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு