“யமஹாவின் தீவிர ரசிகன் நான். கிளாடியேட்டர், FZ என யமஹாவின் ஹிட் ஹாட் மாடல்கள் அனைத்தையும் ஓட்டி அனுபவித்து இருக்கிறேன். அதன் பிறகு, வெகு நாட்களாக ஒரு ஷ்டைலிஷ் வாகனத்துக்காகக் காத்திருந்தேன். அப்போது வெளியான ‘ஃபஸினோ’வின் லுக்கைப் பார்த்ததும், ‘இதுதான் நம் அடுத்த வாகனம்’ என டிக் அடித்துவிட்டேன்..

ஏன் ஃபஸினோ?

நானும் என் மனைவியும் பயன்படுத்த ஒரு டூவீலர் வாங்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எற்பட்டதும், மார்க்கெட்டில் உள்ள எல்லா ஸ்கூட்டர்களையும் ஆராய ஆரம்பித்தேன். நான் ஒரு வாகனப் பிரியன் என்பதால், எனக்கு வரப்போகும் ஸ்கூட்டரைப் பற்றி ஒரு சில கனவுகள் இருந்தன. அதோடு இயைந்துபோகும் ஸ்கூட்டரைத் தேடியபோது, ஆக்டிவா தென்பட்டது. அது பக்காவாக இருந்தாலும், சாலையில் தடுக்கி விழும் இடமெல்லாம் ஆக்டிவா இருப்பதால், அதில் ஈர்ப்பு ஏற்படவில்லை. மற்ற ஸ்கூட்டர்களும் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதுபோல இல்லை. வெஸ்பா ஸ்டைலில் களமிறங்கிய ஃபஸினோவைப் பார்த்ததும், மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் யமஹா பிராண்ட் என்றதும் கூடுதல் மகிழ்ச்சி. விற்பனைக்கு வரும்வரை காத்திருந்து, புக் செய்துவிட்டேன். சென்னையில் முதல் பத்து ஸ்கூட்டர்களில் ஃபஸினோவை புக் செய்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் கொஞ்சூண்டு பெருமை எனக்கு!

ஷோரூம் அனுபவம்?

குரோம்பேட்டை ‘பைக்கர்ஸ்’ ஷோரூமுக்கு ஃபஸினோவை வாங்க வேண்டும் என்று பணத்துடன் சென்றேன். ஆனால், ஸ்கூட்டருக்கு ஆர்.டி.ஒ அனுமதி வாங்க இரண்டு மாதங்கள் ஆகும் எனச் சொன்னதால், பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தேன். களத்துக்கு வந்ததும் முழுத் தொகையும் செலுத்தியதும், உடனே டெலிவரி செய்துவிட்டார்கள். சர்வீஸ் உபசரிப்புக்கும் கட்டாயம் லைக்ஸ் கொடுக்கலாம்.

எப்படி இருக்கிறது ஃபஸினோ?

ஸ்கூட்டர் வாங்கிய புதிதில் அலுவலக நண்பர்கள், உறவினர்கள், நண்பர்கள் தொடங்கி பெட்ரோல் பங்க் ஊழியர்கள்கூட ஃபஸினோவைப் பற்றி விசாரிப்பார்கள். எனக்குப் பெருமையாக இருக்கும்.
நவம்பர் மழையில், சாலையில் சைலன்ஸர் மூழ்கும் அளவு தண்ணீரில் சிக்கிக்கொண்டேன். ஸ்கூட்டர் காலி என நினைத்துக்கொண்டுதான் கஷ்டப்பட்டு முறுக்கி ஒரு மேம்பாலம் வரை எடுத்து வந்தேன். மேலே ஏறியதும் ஸ்கூட்டரைச் சாய்த்து தண்ணீரை வடித்துவிட்டு... பயந்து பயந்து ஸ்டார்ட் செய்தேன். ஆச்சரியம்! ஒரே ஸ்டார்ட்டில் உயிர்பெற்று வழக்கம்போல ஓடத் தொடங்கியது. யமஹாவுக்கு நிகர் யமஹாதான்.

பிடித்தது?

கையை வைத்தால் வழுக்கிவிடும் ஏரோடைனமிக் டிஸைன்; திரும்பிப் பார்க்க வைக்கும் ஸ்டைல்; ரெட்ரோ லுக்கில் இருக்கும் ஸ்பீடோ மீட்டர் என எல்லாமே அசத்தல். 21 லிட்டர் இடவசதி கொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் வைக்கலாம். 113 சிசி இன்ஜின் என்பதால் சரியான பிக்-அப்பும், லைட் வெயிட் என்பதால் சிறந்த கையாளுமையும் கிடைக்கிறது. டிராஃபிக்கில் எளிதாக வளைத்து நெளிந்து ஓட்டலாம். ஹெட்லைட்டில் வரும் முக்கோண வடிவ டிஸைன், செம ரிச் லுக்.

பிடிக்காதது?

முன்பக்க சஸ்பென்ஷன் போதுமானதாக இல்லை. ஓட்டுபோது கைகளில் அதிக அதிர்வுகள் தெரிகிறது. நான் வாங்கும்போது, ஃபஸினோவில் ட்யூப்லெஸ் டயர் இல்லை. ஆனால், இப்போது ட்யூப்லெஸ் டயர்! நார்மல் பேட்டரிக்குப் பதிலாக மெயின்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். ஜுபிட்டர், ஸ்ட்ரீக் போல பெட்ரோல் டேங்க்கின் மூடி வெளியே இல்லாதது பெரிய மைனஸ். ஸ்டோரேஜ் பாக்ஸ் பெரிதாக இருந்தாலும் உள்ளே யுஎஸ்பி சார்ஜர், லைட் வசதிகள் இல்லை.

என் தீர்ப்பு?

எல்லா வயதினருக்கும், ஸ்டைல் மற்றும் பெர்ஃபாமென்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கும் ஏற்ற அழகுக் குட்டிச் செல்லம்!