பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம் !

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வாகன் செய்திருக்கும் பரிசோதனை வெற்றி பெற்றால், இந்த செக்மென்ட்டில் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல விஷயங்கள் நிகழக்கூடும். நான்கு மீட்டருக்கும் குறைவான காம்பேக்ட் செடான் மார்க்கெட் என்பது, இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை. அந்த காம்பேக்ட் ஏரியாவில், ஏமியோ எனும் காரை புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கிறது போக்ஸ்வாகன்.

இந்தியாவுக்காக ஃபோக்ஸ்வாகன் பிரத்யேகமாக டிஸைன் செய்த முதல் கார், ஏமியோ. இந்த செக்மென்ட்டில் ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் போட்டி கார்களான ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் ஆகிய கார்களைவிட, ஏமியோவின் விலையைக் குறைவாகவே நிர்ணயம் செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். சமீபகாலமாக, இந்த நிறுவனம் சர்வதேச அளவில் பல சிக்கல்களில் இருந்தாலும், அதன் ஆடுகளம் என்பது அடிப்படையில் பிரீமியம் செக்மென்ட்தான். இருந்தபோதும், ஏமியோவுக்காக அது இறங்கிவந்து புதிய ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறது. பெட்ரோல் மாடலை அடுத்து, தீபாவளி சமயத்தில் ஏமியோ டீசல் காரையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்த ஆட்டம் சூடுபிடித்தால், வாடிக்கையாளர்களுக்குப் பல சந்தோஷ ஆச்சரியங்கள் கிடைக்கும்.

போக்குவரத்து சிக்னலில் எந்தப் புதிய காரைப் பார்த்தாலும், ஜன்னல் கண்ணாடியை இறக்கி பக்கத்து காரில் பயணிப்பவர்கள் கேட்கும் முதல் கேள்வி... ‘எவ்வளவு மைலேஜ் கொடுக்குது சார்?’ என்பதுதான். ஸ்டைலான வெளித்தோற்றம், தாராளமான இடவசதி, உற்சாகம் தரும் பெர்ஃபாமென்ஸ், கையைக் கடிக்காத விலை என்று ஒரு காரை வாங்க நாம் பல அளவுகோல்களை வைத்திருந்தாலும், இவை அனைத்தையும் தாண்டி முக்கியமாகப் பார்க்கப்படுவது மைலேஜ். அதனால்தான் புதிதாக அறிமுகமான கார், பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார் என்று பேதம் இல்லாமல், இந்தியாவின் டாப் 10 மைலேஜ் கார்கள் எவை என்பதை வரிசைப்படுத்தியிருக்கிறோம். எரிபொருள் விலை ஏறுமுகத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில், நிச்சயம் இது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அன்புடன்

ஆசிரியர்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு