Published:Updated:

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

பெட்ரோல் யுத்தம்! ஒப்பீடு: ஆஸ்பயர் Vs அமேஸ் Vs ஏமியோ தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

சாதாரண செக்மென்ட்டிலா களமிறங்கியிருக்கிறது ஃபோக்ஸ்வாகனின் ஏமியோ? இந்திய ஆட்டோமொபைல் சந்தையையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில், ஏமியோவின் என்ட்ரி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஏமியோவில் இப்போதைக்கு டீசல் இல்லை என்பதால், போட்டி கார்களான ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் ஆகிய பெட்ரோல் கார்களோடு ஒப்பிட்டால் மட்டுமே... ஏமியோவின் பலம், பலவீனம் தெரியும்!

டிஸைன்

ஒரு சாதாரண  ஹேட்ச்பேக்கை, நான்கு மீட்டர் செடானாக மாற்றுங்கள் என்றால், அசால்ட்டாக மாற்றிவிட முடியுமா? எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் கார் அளவுகோல்களில் கச்சிதமாக இருக்க வேண்டும். அதேசமயம், காருக்குள் இடவசதியும் குறையக் கூடாது என டெக்னிக்கல், மெக்கானிக்கல் சவால்கள் அதிகம்.

போலோ, ஒரிஜினலாக ஹேட்ச்பேக்குக்கு மட்டுமே என வடிவமைக்கப்பட்ட கார். கஷ்டப்பட்டுத்தான் இதை ஏமியோ காம்பேக்ட் செடானாக மாற்றியிருக்கிறார்கள்.

சி-பில்லரை இன்னும் கொஞ்சம் இழுத்து, காரை எவ்வளவு நீளம் கொண்டுவர முடியுமோ, அவ்வளவு நீளம் கொண்டு வந்துவிட்டார்கள். அப்படியும் டிக்கி டிஸைனால், காரின் ஒட்டுமொத்தத் தோற்றம் கொஞ்சம் காமெடிதான். ஆனாலும், இதன் ஐரோப்பிய டிஸைன் தீம் சிலருக்குப் பிடிக்கவே செய்கிறது.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

ஆஸ்பயருக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஏனென்றால், ஃபிகோ ஹேட்ச்பேக்கும், ஆஸ்பயர் காம்பேக்ட் செடானும் ஒரே நேரத்தில்தான் உருவாகின. எனவே, துவக்கத்திலேயே காரின் டிஸைன் சிறப்பாக அமைந்துவிட்டது. பூட் கொஞ்சம் உயரமாக இருந்தாலும், காரின் ஒட்டுமொத்தத் தோற்றம் கனக்கச்சிதமாக இருக்கிறது. புதிய கிரில், நீளமான ஹெட்லைட்ஸ் போன்றவை, இந்த குட்டி காருக்கும் கட்டுமஸ்தான தோற்ற உணர்வைத் தருகின்றன.

இந்த செக்மென்ட்டிலேயே அமேஸ் காரின் டிஸைன்தான் எல்லா கோணங்களிலும் சரியாக இருக்கிறது. பிரியோ இயற்கையாகவே சின்ன காராக இருந்துவிட்டதால், டிஸைனர்களுக்கு அதை காம்பேக்ட் செடானாக மாற்றுவதில் அதிக சுதந்திரம் இருந்தது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் மாடலும் பார்க்க முன்பைவிட ஃப்ரெஷ்ஷாக உள்ளது. ஆனால், ஏமியோ, ஆஸ்பயரில் உள்ள ஒரு கிளாமர் அப்பீல் அமேஸில் இல்லைதான்!

உள்ளே

‘காம்பேக்ட்’ என்றாலும் செடான் கார்கள் என்பதால், பக்கா ஃபேமிலி கார்களாகத்தான் இவை பார்க்கப்படும். ஃபேமிலி கார்கள் என்றாலே... உள்ளே இடவசதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதுதான் விதி. அந்த வகையில் பார்த்தாலும், ஏமியோவுக்குத்தான் சிக்கல். ஏற்கெனவே போலோவில் இடவசதி குறைவு என்பதால், ஏமியோவில் இடவசதிக்கு ரொம்பவே மெனெக்கெட்டிருக்கிறார்கள். ஆனாலும், பின்பக்கத்தில் கால்களுக்கு இடவசதி ஓரளவுக்குத்தான் இருக்கிறது. ரியர் ஏ.சி வென்ட் ப்ளஸ் பாயின்ட் என்றாலும், நடுவில் உட்காருபவரின் நிலை சிக்கல்தான். ஆனால், இருக்கை சொகுசாகவே இருக்கிறது. இங்கே பின்னிருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் இல்லாத ஒரே கார் இதுதான்.

ஆஸ்பயர் பார்க்கத்தான் சின்ன கார். ஆனால், உள்ளே ஹெட்ரூமும், லெக்ரூமும் தாராளமாகவே உள்ளன. அகலம் குறைவான கார் என்பதால், பின்னிருக்கையில் மூன்று பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். தொடைகளுக்கான சப்போர்ட் குறைவே! குஷனும் இறுக்கமாக உள்ளது.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

இடவசதியில் அமேஸ்தான் இன்னும் ‘அமேஸிங்.’ மிட்சைஸ் செடான் கார் அளவுக்கு உள்ளே இடம் இருக்கிறது. ஆர்ம் ரெஸ்ட் இருந்தாலும், மூன்று பேர் வசதியாக இருக்கலாம். இருக்கைகளும் மிக சொகுசாக உள்ளன.

பூட் இடவசதியிலும் ஏமியோ பின் தங்கியிருக்கிறது. 330 லிட்டர்தான் என்றாலும், இந்த காரில் மட்டுமே பின்னிருக்கையை ஃப்ளிப்-டவுன் முறையில் மடித்துக்கொள்ள முடியும். ஆஸ்பயரில் 359 லிட்டர் இடவசதி இருக்க, அமேஸில் 400 லிட்டர் இடவசதி கிடைக்கிறது.

வசதிகள்

இந்த செக்மென்ட்டில் ஏமியோவின் உள்பக்க டிஸைன்தான் சிறப்பாக இருக்கிறது. பாகங்களின் தரமும், அவை ஒருங்கிணைக்கப்பட்ட விதமும் பக்கா கிளாஸ். டேஷ்போர்டு டிஸைன் பழக்கமானதுதான் என்றாலும், தரத்தில் சூப்பர்.

அமேஸ் காரின் உள்பக்கமும் நன்றாக இருக்கிறதுதான். ஆனால், ஃபோக்ஸ்வாகன் அளவுக்குச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படவில்லை. ஜாஸ் காரின் டேஷ்போர்டு இதில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளதால், மைனஸ் மார்க்குகளில் இருந்து தப்பிக்கிறது அமேஸ்.

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் டேஷ்போர்டுதான் பார்க்க ரொம்பவே ஸ்டைலிஷ். ஆனால், ஏராளமான பட்டன்கள் கண்களை உறுத்துகின்றன. க்ரோம் ஏ.சி கன்ட்ரோல்கள், ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல் போன்றவை பிரீமியம் டச் அளித்தாலும், சின்ன டயல்கள், சுமாரான கதவுக் கைப்பிடிகள் கடுப்பேற்றுகின்றன.

அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ளூடூத், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. ஆஸ்பயரிலோ SYNC இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமான்ட்ஸ், ஸ்மார்ட்போன் ஆப்ஸ், எமெர்ஜென்சி அசிஸ்டன்ஸ் சிஸ்டம், கீ பூட் ஓப்பன், 6 காற்றுப் பைகள் (டைட்டானியம்+) போன்ற வசதிகளை அளிக்கின்றன. மற்ற இரண்டு கார்களிலும் 2 காற்றுப் பைகளும், ஏபிஎஸ்ஸும் மட்டும்தான்.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?
இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

ஆனால், அதிக வசதிகளை அளிப்பது ஏமியோதான். டச் ஸ்கிரீனுடன் MirrorLink சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்ஸாருடன் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல், ஒன்-டச் பவர் விண்டோஸ், ஆட்டோ வைப்பர்ஸ், ஆட்டோ-டிம்மிங் ரியர் வியூ மிரர்கள், ரியர் ஏ.சி வென்ட் எனக் கலக்குகிறது ஏமியோ.

இன்ஜின்

இந்த மூன்று கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்கள் உள்ளன. முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ஏமியோவில் மட்டும் 3 சிலிண்டர் இன்ஜின்; மற்ற இரண்டிலும் 4 சிலிண்டர்.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

ஏமியோ அதிக எடை கொண்டிருக்கும் நிலையில், குறைந்த சக்தியையே கொண்டிருக்கிறது.  இதன் 75bhp இன்ஜின் தரும் பெர்ஃபாமென்ஸ், ஓட்டுவதற்கும் சிறப்பாக இல்லை. ரிஃபைன்மென்ட்டும் குறைவுதான். 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால் அதன் சத்தமும், அதிர்வுகளும் அதிகம். 

ஆஸ்பயரின் 88bhp 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் குறைந்த ஆர்பிஎம்-ல் கொஞ்சம் வீக்காக இருந்தாலும், மிட் ரேஞ்ச் ஸ்ட்ராங்காக இருக்கிறது. சரியான கியரில் இயக்கினால், பவர் டெலிவரி சூப்பராக இருக்கிறது.

அமேஸ் இன்ஜின்தான் இங்கு இருப்பதிலேயே செம ஸ்போர்ட்டி. மிட் ரேஞ்ச் கொஞ்சம் வீக் என்பதால், அவ்வப்போது டவுன் ஷிஃப்ட் செய்து விரட்ட வேண்டியிருக்கும். ஆனாலும், அதிக ஆர்பிஎம்-ல் பட்டையைக் கிளப்புவது இந்த ஹோண்டா இன்ஜின்தான்.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

இந்த மூன்று கார்களுமே ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் மோசமாக இல்லை. மற்ற இரண்டைவிடவும் ஏமியோ சாஃப்ட்டாக செட் செய்யப்பட்டுள்ளதால், பாடி ரோல் இருக்கிறது. ஆனால், குறைந்த வேகங்களிலும் ஓட்டுதல் தரம் மிக அருமை. ஸ்டீயரிங் கச்சிதமாக இருந்தாலும், ஃபீட்பேக் குறைவுதான்.

அமேஸ் காரின் ஸ்டீயரிங் க்விக்காகவும் ஷார்ப்பாகவும் உள்ளது. சஸ்பென்ஷன் செட்-அப் கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும், சொகுசான ஓட்டுதல் தரம் உள்ளது. ரொம்பவும் வேகமாக விரட்டாமல் ஓட்டினால், ஜாலியாக இருக்கிறது.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

வளைவுகளில் ஜாலியாக ஓட்டுவதற்கு பெஸ்ட், ஃபோர்டு ஆஸ்பயர்தான். ஓட்டுதல் தரமும், கையாளுமையும் சரியாக பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது. குறைந்த வேகங்களில் ஏமியோவைப் போல் சொகுசாக இருந்தாலும், அதிக வேகங்களில் நல்ல ஸ்டெபிலிட்டி கிடைக்கிறது.

இன்ஜின்... வசதிகள்... ரைடிங்... ஏமியோ ஜெயிக்குமா?

டவசதிதான் முக்கியம் என்றால், ஹோண்டா அமேஸ்தான் பெஸ்ட் சாய்ஸ். இருக்கைகளும் சொகுசாக இருப்பது பெரிய ப்ளஸ் பாயின்ட்.  இந்த மூன்று கார்களிலும் சிறந்த இன்ஜின்,  ஸ்போர்ட்டியான டிரைவிங் இந்த காரில்தான். அப்படியிருந்தாலும், ஃபேஸ்லிஃப்ட் நம்மைத் திருப்திப்படுத்தவில்லை. கேபின் டிஸைன் சாதாரணமாகவே உள்ளது. வசதிகளும் குறைவு; விலையும் அதிகம்.

ஃபோக்ஸ்வாகன் ஏமியோவின் விலை, பெரிய ப்ளஸ் பாயின்ட். மற்ற இரண்டு கார்களைவிட 30,000 முதல் 50,000 வரை குறைவு. வசதிகளும் அதிகம். கேபின் மிக உயர்தரமாக இருக்கிறது. ஆனால், இன்ஜின் சுமார் ரகம். ஃபேமிலி காராகப் பயன்படுத்தலாம் என்றால், பின்னிருக்கை இடவசதியும், பூட் இடவசதியும் மிகக் குறைவு. டீசல் மாடல், தீபாவளி சமயத்தில்தான் வருமாம்.

ஃபோர்டு ஆஸ்பயரிலும் குறைகள் இல்லாமல் இல்லை. கேபின் தரம் சுமார்தான். குறைந்த ஆர்பிஎம்-ல் இன்ஜின் டல். ஆனால், சிறந்த ஓட்டுதல் தரம், நல்ல கையாளுமை, இடவசதிகொண்ட கேபின், அதிக பூட் இடவசதி என நல்ல பேக்கேஜாக உள்ளது. ஏமியோ அளவுக்கு வசதிகள் இல்லையென்றாலும், தேவையானவை இருக்கின்றன. இந்த மூன்று கார்களிலும் காஸ்ட்லி இதுதான். ஆனால், 8.16 லட்சம் ரூபாய்க்கு டைட்டானியம் வேரியன்ட்டே திருப்தி அளிக்கிறது. ஆஸ்பயர்தான் நல்ல சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு