Published:Updated:

சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!
சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!

ஃபர்ஸ்ட் ரைடு: டுகாட்டி 959 பனிகாலே தொகுப்பு: ஞா.சுதாகர்

பிரீமியம் ஸ்டோரி
சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!

மார்க்கெட்டில் டுகாட்டியின் புதிய என்ட்ரி லெவல் பைக்காகக் களமிறங்குகிறது டுகாட்டி 959 பனிகாலே. சிட்டி ரைடுக்கும் சரி; ரேஸ் டிராக்கில் ஓட்டவும் ரெடி என்கிறது டுகாட்டி. அது உண்மைதானா?

ஸ்டைல்

இதன் அழகான அலுமினியம் சேஸிஸ் மற்றும் அகலமான விண்ட் ஷீல்டு இரண்டும் செம ஸ்டைலிஷ். இதன் சைடில் இருக்கும் டபுள் பேரல் எக்ஸாஸ்டர்கள் யுனிக்காக இருந்தாலும், அதுவே பனிகாலே 899 பைக்கைவிடவும் 8 கிலோ எடையைக் கூட்டிவிடுகிறது. 17 லிட்டர் ஃபியூல் டேங்க் ஓகே!

சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!

இன்ஜின்

இன்ஜின் திறனை மேம்படுத்தவும், ஃபியூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை சிறப்பாகக் கையாளவும், ஹைஃப்ளோ ஏர்ஃபில்டரும் சிலிண்டருக்கு 2 இன்ஜெக்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. 955 சிசி லிக்விட் கூல்டு எல்-ட்வின் இன்ஜின் 157bhp சக்தியை அளிக்கிறது. இதில் மொத்தம் மூன்று ரைடிங் மோட்கள் இருக்கின்றன. சாலையில் ஓட்டுவதற்கு ஸ்போர்ட் மோட் செட் செய்தால், 2 வீல்களிலும் ABS பிரேக் செயல்படுகிறது. ரேஸ் மோடில் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ப, முன்பக்க வீலில் மட்டும் ABS செயல்படுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் அளிக்கும் நம்பிக்கையில் 200 கிலோ பைக்கை வளைவுகளில் கூட பயமின்றி விரட்ட முடிகிறது. இன்ஜின் பவர் மிட் ரேஞ்ச் முதல் டாப் எண்ட் வரையிலும் சீராக வெளிப்படுகிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

முன்பக்கம் ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க்ஸ், பின் பக்கம் sachs மோனோஷாக் சஸ்பென்ஷன் இருப்பதால், ஸ்மூத்னஸ் கியாரண்டி. ஆனால், இவற்றை எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பது குறை. பனிகாலே 1299-ல் இருக்கும் இனர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், கார்னரிங் ABS, பிரம்போ M50 மோனோப்ளாக் காலிபர்கள் எதுவும் இதில் இல்லை. ஆனால், அதற்கும் இதற்கும் 20 லட்ச ரூபாய் வித்தியாசம் என்பதால் தாங்கிக் கொள்ளலாம். அதேசமயம் கிளட்ச், பிரேக், ஃபுட் ரெஸ்ட் என எதையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது 959-ன் தரம். பைரல்லி டியாப்லோ டயர்கள், கார்னரிங்கில் நம்பிக்கையுடன் திரும்ப தேவையான க்ரிப் அளிக்கிறது.

சிட்டிக்கும் ஓகே... ரேஸுக்கும் ஓகே!

டுகாட்டி பனிகாலே 959 சிறப்பாகவே இருக்கிறது. சாலையில் ஓட்டுவதற்கும், டிராக்கில் ஓட்டுவதற்கும் ஏற்றபடி பைக்கை வடிவமைத்துள்ளது டுகாட்டி. குறிப்பாக சஸ்பென்ஷன், சீட் பொசிஷன் என ட்ரைவ் கம்ஃபர்ட் இருப்பதால், சிட்டி டிரைவுக்கு ஓகே. 14 லட்சத்துக்கு ஏற்ற பவர், பாதுகாப்பான வடிவமைப்பு - இரண்டும் இருப்பதால், இந்தியர்களுக்கு ஏற்ற ஸ்போர்ட்ஸ் பைக்காக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு