Published:Updated:

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!
கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

கலை: புகைப்படம் தமிழ், படங்கள்: வில்லியம்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

“இனிமே என்னை கான்டாக்ட் பண்ணணும்னா, ‘டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட்... பிச்சு டாட் காம்’க்கு வாங்க!’’ என்று வடிவேலு காமெடியாகச் சொல்வாரே... அதுபோல, விளையாட்டாகத்தான் தன்னுடன் படித்தவர்களிடம் சவால் விட்டார் வில்லியம்ஸ். இப்போது நிஜமாகவே www.williamsphotography.in என்ற இணையதளத்துக்குச் சென்றால், கண்களில் ஒற்றிக்கொள்ளும் அளவுக்கு அழகுப் புகைப்படங்கள். அனைத்தும் கார்/பைக் என்று ஆட்டோமொபைல் பிரியர்களை, கன்னாபின்னா லைக்ஸ் போட வைக்கும் ஸ்டில்கள். ஆடி, ஹூண்டாய், ஃபோர்டு, மாருதி, ஜாகுவார், மிட்சுபிஷி, பஜாஜ், ஹீரோ என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கார்/பைக் நிறுவனங்களுக்கும் ஆஸ்தான போட்டோகிராபர்களில் வில்லியம்ஸும் ஒருவர். தான் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றில் மாஸ் + க்ளாஸ் ரக ஸ்டில்களுக்குப் பின்னால் உள்ள சீன்களை ஒன்லைனாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னையைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஜோஸ்வா.

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

மிட்சுபிஷி நிறுவனம், பஜேரோவை அறிமுகப்படுத்தியபோது, ‘கேம்பெய்ன் செய்ய வேண்டும்; ஃபோட்டோ சும்மா ரஃப் அண்ட் டஃப் ஆக இருக்க வேண்டும்’ என்று என்னிடம் கேட்டது. போட்டோஷாப் இல்லை என்றால், இப்போது பல போட்டோகிராஃபர்கள் இல்லை. நானும் அப்படித்தான். போட்டோஷாப் உதவி இருந்தாலும், தண்ணீர், ஆஃப் ரோடு எஃபெக்ட்டுக்காக 6 மணி நேரம் செலவழித்து எக்கச்சக்கப் படங்கள் எடுத்தேன். இதுதான் செலெக்ட் ஆன படம்.

ஞ்சள் நிற சிடியாவை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஆட்டோமொபைல் துறையில் நான் எடுத்த முதல் கார் - முதல் படம் இதுதான். 2007-ல் நேஷனல் லெவல் அட்வெர்டைஸிங் கேம்பெய்னுக்காக இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேங்க்ஸ் சிடியா!

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!
கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

கிராண்ட் i10 கேட்டலாக் ஷாட்டுக்காக இதை எடுத்தேன். முன்/பின் பக்க டைமென்ஷன்கள் ஒரே போட்டோவில் தெரிய வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டு எடுத்த படம்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்பதுபோல், போட்டோகிராஃபர்களுக்கு லைட்டிங்தான் லட்டு! இந்த லைட்டிங்கில்தான் பென்ஸ் GLA ரிச்சாகத் தெரியும் என்பதற்காக, 3 மணி நேரம் காத்திருந்து எடுத்தேன்.

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்பதுபோல், போட்டோகிராஃபர்களுக்கு லைட்டிங்தான் லட்டு! இந்த லைட்டிங்கில்தான் பென்ஸ் GLA ரிச்சாகத் தெரியும் என்பதற்காக, 3 மணி நேரம் காத்திருந்து எடுத்தேன்.

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

போட்டோஷாப் உதவி இல்லாமல் ஒரே ஷாட்டில் ஓகே வாங்கி, ஹூண்டாயிடம் எனக்கு பாராட்டுகளையும் வாங்கிக் கொடுத்த படம் இது. மகாபலிபுரம் ரெஸார்ட் ஒன்றில், க்ரெட்டா காரின் புரொஜெக்டர் லைட்டையே லைட்டிங்காகவும், வெளிநாட்டுப் பெண் ஒருவரை மாடலாகவும் வைத்து எடுத்த இதை, ‘ச்சோ க்யூட்’ என்று பாராட்டினர் ஹூண்டாய் அதிகாரிகள்.

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

தோ துபாய் கடற்கரைனு நினைச்சுடாதீங்க மக்களே... நம்ம திருவான்மியூர் பீச்தான். கடற்கரையில் 2வீல் டிரைவ் காரை ஓட்டுவது ரொம்ப ரிஸ்க். வீல் மண்ணில் புதையாமல்... டயர் தடங்கள் தெரியாமல்... எக்கோ ஸ்போர்ட் கண்ணைக் கட்ட வெச்சிருச்சு பாஸ்!

கதை திரைக்கதை இயக்கம் படம் வில்லியம்ஸ்!

ஜாகுவார் என்றால் சும்மாவா? சாதாரண கார்களுக்கே எக்கச்சக்க ஆங்கிள் வைத்து ரிகர்ஸல் பார்ப்போம். இந்த XJ-வுக்கு  முதலில் கோ-ப்ரோ, அப்புறம் பைலட் கார் என்று 3 மணி நேர ஆங்கிளுக்குப் பிறகுதான் ஜாகுவார் வழிக்கு வந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு