Published:Updated:

360 டிகிரி பியூட்டி!

ரீடர்ஸ் ரெவ்யூ: யமஹா YZF- R3 ஞா.சுதாகர், படங்கள்: த. ஸ்ரீநிவாசன்

பிரீமியம் ஸ்டோரி
360 டிகிரி பியூட்டி!

ன் முதல் பைக், யமஹா FZ. 2007-ல் அதை வாங்கினேன். அதன் பெர்ஃபாமென்ஸ் மற்றும் தரம் மிகவும் பிடித்திருந்ததால், யமஹா மீது முழு நம்பிக்கை கொண்டேன். அந்த FZ பைக்தான் இப்போதும் என் ஃபேவரைட்.

ஏன் யமஹா YZF R3?

FZ வாங்கிய பிறகு, கொஞ்ச நாளில் பவர்ஃபுல் பைக்குக்கு அப்டேட் ஆக நினைத்தேன். முதலில் கேடிஎம் டியூக் 200, அடுத்து 390, அப்புறம் RC390 என சாய்ஸ் வைத்திருந்தேன். ஆனால், எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்தது. அப்போதுதான் யமஹா, R25 பைக்கை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தியது. அதன் ரெவ்யூக்கள் எல்லாமே பாஸிட்டிவாக இருந்ததால், R25 இந்தியாவுக்கு வரட்டும் எனக் காத்திருந்தேன். ஆனால், R25 வரவில்லை. மாறாக R3-யைக் களமிறக்கியது யமஹா. அதன் விமர்சனங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். இதுவும் பாஸிட்டிவ். ஏற்கெனவே யமஹா மீது நம்பிக்கை இருந்ததால், R3 பைக்தான் என முடிவு செய்துவிட்டேன்.

ஷோரூம் அனுபவம்

காந்திபுரம் CAG யமஹா ஷோரூமில்தான் பைக் எடுத்தேன். ஆனால், தற்போது சீஸன் மோட்டார்ஸ் யமஹா ஷோரூமில்தான் சர்வீஸ் விடப்போகிறேன். காரணம், CAG ஷோரூமில் முறையான ரெஸ்பான்ஸ் இல்லை. கடந்த ஜனவரி மாதமே பைக் புக் செய்துவிட்டேன். ஆனால், ஒரு மாதமாகியும் பைக் கிடைக்கவில்லை. அதுகூடப் பரவாயில்லை. ஆர்.சி, இன்ஷூரன்ஸில் நிறையப் பிழைகள். அது குறித்துக் கேட்டாலும் சரியான பதில் தரவில்லை. 

எப்படி இருக்கிறது யமஹா R3 ?

321 சிசி, 42bhp பவர், ட்வின் சிலிண்டர் இன்ஜின் என்பதால், பெர்ஃபாமென்ஸ் பற்றிச் சொல்லவே தேவை இல்லை. லோ ரேஞ்ச் முதல் டாப் எண்ட் வரையிலுமே பவர் டெலிவரி பக்கா. பைக்கின் சிறப்பம்சமே டிஸைன் மற்றும் ஸ்டைல்தான். சில பைக்குகள் முன்பக்கம் மட்டும் ஸ்டைலாக இருக்கும். ஆனால், இது 360 டிகிரியும் அழகு!

360 டிகிரி பியூட்டி!

கார்களில் பாடி கலர் பம்பர் இருப்பதுபோல, R3 பைக்கில் பாடி கலர் அலாய்வீல் இருப்பது செம ஐடியா. ஸ்போர்ட்டி பைக் என்பதால், சீட்டிங் பொசிஷன் குனிந்து ஓட்ட வேண்டுமோ என்று பயப்பட வேண்டியது இல்லை. சீட்டும், ஹேண்டில்பாரும் சரியாக பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட பயணம் சென்றாலும்கூட, முதுகு வலி இல்லை. நாள் முழுக்க டிரைவிங் செய்தாலும், களைப்பு தெரியாத அளவுக்கு சஸ்பென்ஷன் அருமை. எடை அதிகம்தான்(169 கிலோ) என்றாலும், கையாளும்போது தெரியவில்லை. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் துல்லியமாக இருக்கிறது. பைக்கை ஆன் செய்தாலே... ஒரு பக்க ஹெட்லைட் லோ பீமில் ஒளிர்ந்துகொண்டே இருப்பது ஸ்டைல். ஆனால், சாலையில் செல்லும்போதெல்லாம் பலரும், 'லைட் ஆஃப் பண்ணுங்க பாஸ்' என சிக்னல் கொடுக்கின்றனர். அதேசமயம், ஹெட்லைட்ஸ் பவர்ஃபுல். நெடுஞ்சாலைகளுக்கு R3 ஓகே!  டிராஃபிக்கில் இன்ச் இன்ச்சாக வாகனங்கள் நகரும் இடங்களுக்கு R3 சரியானதாக இருக்காது. காரணம், இன்ஜின் வெப்பம் கால்களைத் தாக்குகிறது.

 ப்ளஸ்

எந்தத் கோணத்தில் இருந்து பார்த்தாலும், கவரும் டிஸைன்; 321 சிசி, 42 bhp பவர் என தெறிக்கும் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்; ரெவ் செய்யும்போதெல்லாம் சூப்பர் பைக் ஃபீல் தரும் எக்ஸாஸ்ட் சத்தம்; மிகவும் சொகுசான மற்றும் கையாள்வதற்கு வசதியான சீட்டிங் பொசிஷன்; இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்; பவர்ஃபுல்லான ஹெட்லைட்ஸ் என ஏகப்பட்ட ப்ளஸ்கள் R3-ல் உண்டு.

360 டிகிரி பியூட்டி!

மைனஸ்

தவறு, டயர்களின் மீதா... இல்லை, பிரேக்குகள் மீதா என்பது தெரியவில்லை. இந்த பைக்கின் MRF டயர்களில் போதுமான க்ரிப் இல்லை. இதற்குப் பதில் Metzeler டயர்கள் கொடுத்திருக்கலாம். அதேபோல, ஏபிஎஸ் பிரேக்குகள் இல்லாததால், வேகங்களில் கவனமாக இருக்க வேண்டும். பில்லியன் ரைடருக்கு ஸ்ப்ளிட் சீட் சொகுசாக இல்லை.

என் தீர்ப்பு :

நாம் கொடுக்கும் பணத்துக்குச் சரியான, பவர்ஃபுல்லான பைக் வாங்க நினைப்பவர்கள், தாராளமாக யமஹா R3-ஐ பரிசீலிக்கலாம். என்னைப்போல, முதன்முறையாக பவர் பைக் வாங்குபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் யமஹா R3.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு