>>வேல்ஸ்  >> கே.ராஜசேகரன்

ஹாலிவுட் படங்களின் ஹீரோக்கள், சினிமாவிலும் நிஜத்திலும் ஓட்டும் கார், 'பிஎம்டபிள்யூ 650i கன்வெர்ட்டபிள்.’ இதை முழுசாக மூன்று நாள் பெங்களூரு சாலை, ஈசிஆர், புதிதாகப் போடப்பட்டு இருக்கும் புதுவை - திண்டிவனம் சாலை என விதவிதமான ரூட்டில் ஓட்டி டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதை பெங்களூரு சாலையில் இருக்கும் ஒரு மோட்டலில் நிறுத்தியபோது, கார் கண்காட்சி போலக் கூட்டம் கூடிவிட்டது. ஈசிஆர் போன போது... 'சார், ப்ளீஸ் இந்த காரோடு ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்...’ என்று நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். புதுச்சேரியிலிருந்து நாம் சென்னையை நோக்கிக் கிளம்பியபோது, அரசியல் கட்சித் தலைவர்களை வழியனுப்புவது மாதிரி மாநிலத்தின் எல்லை வரை நம்மைத் தொடர்ந்து வந்த ஒரு பைக் படை வழியனுப்பி வைத்தது. முதலியார்பேட்டை படகுக் குழாமில் காரின் மீது வேயப்பட்டிருந்த கூரையைத் திறந்தும் மூடியும் நமது புகைப்படக்காரர் போட்டோ எடுத்தபோது, அங்கே இருந்த இளம் பெண்கள் அத்தனை பேரும், ''காரின் கூரை எங்கே போனது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கூரையை கார் உள்வாங்கிக் கொள்கிறதே?’ என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருக்கும் கராத்தே வீரன் போல, கச்சிதமாகவும் உறுதியாகவும் மட்டுமல்ல... பார்ப்பதற்கும் 'கவர்ச்சி வில்லன்’ மாதிரி காட்சியளிக்கிறது பிஎம்டபிள்யூ 650i. இது 250 கி.மீ வேகத்தை எந்தவித பிரயத்தனமும் இல்லாமல் எட்ட இதன் 4.4 லிட்டர், V8 இன்ஜின் வாரிக் கொடுப்பதோ 407 bhp சக்தி. இது 0-100 கி.மீ வேகத்தை ஜஸ்ட் 5.2 விநாடிகளில், அதாவது வில்லில் இருந்து விடுபட்ட அம்பின் வேகத்தில் கடந்து விடுகிறது. ஆட்டோமேட்டிக் காரான இதை டிரைவ் மோடில் போட்டு விட்டால், இதை ஓட்டுவது ஹோண்டா ஆக்டிவா அளவுக்கு சிம்பிளாகி விடுகிறது. 'வேகத்துக்கு ஏற்ப கியரை மாற்றி மாற்றி நாம் ஓட்டுகின்ற சுகத்துக்கு ஈடு இணையாகுமா?’ என்று கேட்டால், இதை மேனுவல் மோடிலும் வைத்து ஓட்டலாம். ஸ்டீயரிங்கிலேயே இருக்கும் பேடில் ஷிஃப்ட் பட்டன்களைத் தட்டி கியரைக் கூட்டவோ குறைக்கவோ முடிகிறது. ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மோடில் வைத்து ஓட்டினால்... த்ரில்லிங்குக்குப் பஞ்சமே இல்லை. இதேபோல, சஸ்பென்ஷனிலும் நார்மல், ஸ்போர்ட்ஸ் என நாம் தேர்வு செய்ய இரண்டு விதமான செட்டிங்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதன் ட்வின் டர்போ இன்ஜின் வாரிக் கொடுக்கும் சக்தி வேகமாக வெளிப்படும்போது, எத்தனை நீண்ட சாலைகளாக இருந்தாலும் அதை சிறிதாக மாற்றி விடுகிறது. பாதுகாப்பு தொடர்பாக இருக்கும் அத்தனை சாதனங்களும் இதில் இருப்பதால், எந்த வேகத்திலும் இதை தைரியமாக ஓட்ட முடிகிறது.

காருக்கு வெளியே தெரியும் அதே கம்பீரம், காருக்குள்ளும் வியாபித்திருக்கிறது. சீட் கவர் துவங்கி சென்டர் கன்ஸோலின் ஒரு பகுதி, ஸ்டீயரிங் வீல் என்று உயர் ரக லெதர் பளிச்சிடுகிறது. காரின் சீட் உண்மையில் மசாஜ் சீட் (ஆம், பட்டனை அழுத்தினால் சீட்டே நம்மை மசாஜ் செய்கிறது) என்பதோடு, சீட்டின் ஜல்லடைத் துவாரங்கள் வழியாக ஏ.ஸி கசிந்து வந்து நமக்கு இதமூட்டுகிறது. வாய்ஸ் கமாண்ட், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹை-ஃபை மியூசிக் சிஸ்டம் என இல்லாத வசதிகளே இதில் இல்லை. 7 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீனில் டயர்களில் காற்றழுத்தம் சரியாக இருக்கிறதா என்று துவங்கி இன்ஜின் ஆயில், பிரேக் பேட் என சகல விஷயங்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செக் செய்து கொள்ள முடிகிறது.

இதில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அத்தனை வசதிகளும் டிரைவருக்கும் அவருக்குப் பக்கத்தில் இருப்பவருக்கும் மட்டும்தான். இரண்டாவது வரிசையில் இருக்கும் சீட்டுக்குப் போய் உட்கார வேண்டும் என்றால், முன்னால் இருக்கும் சீட்டுகளை மடக்கினால்தான் முடியும். சீட்டுகளை முன்நோக்கி மடக்கி விட்டு, காரில் ஏறுவது அத்தனை சுலபமில்லை. சிரமப்பட்டு பின்னிருக்கைகளில் போய் உட்கார்ந்து விட்டாலும், அங்கே நீண்ட நேரம் உட்கார முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கே இடநெருக்கடி. சுமார் 2000 கிலோ எடை கொண்ட இந்த காரில் பர்ஃபாமென்ஸுக்கே முன்னுரிமை என்பதால், மைலேஜ் லிட்டருக்கு வெறும் 5 கி.மீதான்!

சரியாக மூன்று நாள் முடிந்ததும் காரை பிஎம்டபிள்யூக்காரர்கள் கொண்டு சென்று விட்டார்கள். நீண்ட நாள் பழகிய நண்பனைப் பிரிந்த மாதிரி சோகம் மனசை அப்பிக் கொண்டது!

ஜீவா

நாம் ஈசிஆரில் டெஸ்ட் டிரைவ் செய்து கொண்டிருந்தபோது, மாயாஜாலில் ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஜீவாவைச் சந்தித்தோம். தப்பு தப்பு... ஜீவா இந்த காரைச் சந்தித்தார். ''ஐ... சூப்பரா இருக்கே! ஒரு ரவுண்ட் போய் பார்க்கலாம்!'' என்றவர், ஸ்டீயரிங்கைப் பிடித்தார். முழுக்க முழுக்க வெளிநாட்டுச் சாலைகளையே கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கார் என்பதால், கிரவுண்ட் கிளியரன்ஸ் நம்மூரில் தயாராகும் கார்களின் அளவுக்கு இல்லை. அதனால், ஸ்பீடு பிரேக்கர்களை நின்று நிதானித்துக் கடந்தவர், ஒரே மிதியில் 120 கி.மீ வேகத்தைக் கடந்தார். ''இதுக்கு மேலே போறது இந்த ரோட்டில் சேஃப் இல்லை பாஸ்!'' என்று சொன்னவர், காரை நேராக தன் வீட்டுக்கு ஓட்டினார். தன் மனைவி மற்றும் குழந்தையும் ஏற்றிக் கொண்டு ரவுண்ட் அடித்து விட்டு வந்தவர், ''பாஸ¨ சான்ஸே இல்லை. இது ஃப்ளைட் மாதிரி போவுது!'' என்று சிலாகித்தார்.

>>நா.கதிர்வேலன்