>>அ. லெனின்ஷா 

ஸ்லோ... ஸ்டடி... வின்!

''பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!'' - ரஜினி டயலாக் மாதிரிதான் ரேஸ் விளையாட்டும்! ஸ்கிட் அடிப்பது, பேக் வீலைத் தூக்குவது, வளைத்து நெளிந்து முந்திச் செல்வது என ரேஸ் விளையாட்டில் கிக்கும் அதிகம்; ரிஸ்க்கும் அதிகம்! ரேஸின் போது விபத்து ஏற்பட்டாலும் கவலைப்படாமல், தூசைத் தட்டிவிட்டுக் கொண்டு எழுந்திருக்கும் ரேஸ் வீரர்களுக்கு ஆலோசனை சொல்கிறார் எலும்பு முறிவு நிபுணர் இளங்கோவன்.

''ரேஸின்போது ஏற்படக் கூடிய காயங்களை, ‘High Velocity Injury’என்று சொல்லுவோம். கார் ரேஸின்போது, முதலில் ஸ்டீயரிங் தாக்கி நெஞ்சு எலும்பு, வயிறு, நுரையீரல் போன்ற பகுதிகளில் பாதிப்புள்ளாகும். காரில் இருந்து வெளியே வந்து விழும்போது கை, கால் முறிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஆனால், கார் ரேஸைக் காட்டிலும் பைக் ரேஸில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!'' என்றவர், அதற்கான சிகிச்சை முறைகளையும் விளக்கினார்.

ஸ்லோ... ஸ்டடி... வின்!
 ##~##

''ரேஸ் டிராக்கில் அடிபட்டவர்களுக்கான சிகிச்சை ஒரு சங்கிலித் தொடர் மாதிரி நடக்கும். காயம்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதை 'கோல்டன் ஹவர்’ என்று சொல்வோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயம்பட்டவரின் கையை இழுப்பது, காலைத் தூக்குவது என்று எக்குத்தப்பாக செயல்படாமல், படுத்த நிலையிலேயே தூக்க வேண்டும். காயம்பட்டவர்களைத் தூக்குகிறவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். ரேஸ் டிராக்குக்கு என்றே பிரத்யேகமான ஸ்ட்ரெச்சர், ஆம்புலன்ஸ் உண்டு. இந்த ஸ்ட்ரெச்சரில் தலை, கை, காலுக்கென்று

ஸ்லோ... ஸ்டடி... வின்!

தடுப்புகள் இருக்கும். இதனால் மேற்கொண்டு எந்தக் காயங்களும், பாதிப்புகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கை, காலில் காயங்கள் ஏற்பட்டால், மறுபடியும் ரேஸில் கலந்து கொள்ளலாம். ஆனால், முதுகும், மூளையும்தான் ஜாக்கிரதையான பகுதி. முதுகுத் தண்டில் அடிபட்டால், படுத்த படுக்கையாகிவிடக்கூட நேரிடலாம்! நம் மூளையானது 'செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயிட்’ என்கிற திரவத்துக்குள் இரண்டு அல்லது மூன்று மில்லி மீட்டர் அளவுக்கு மெல்லியதாக மிதந்த நிலையில் இருக்கும். தலையில் ஏற்படும் அதிர்வைத் தாங்கிக் கொள்ள இந்த அசைவு தேவைப்படுகிறது. அதையும் மீறி ஹெல்மெட் உடைந்து அடிபடும்போது, சில சமயம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் நசுங்கி ரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ரத்தம் வெளிவராமல் மூளைக்குள்ளேயே உறைந்து மூளையை அழுத்தும். இந்த ரத்தக் கசிவுதான் உயிரிழப்புக்குக் காரணம். உடனடியாகச் சரி செய்து விட்டால், உயிரைக் காப்பாற்றிவிட முடியும்!'' என்றார் அக்கறையுடன்.

ஹெல்மெட், சேஃப்டி ஜாக்கெட், கிளவுஸ், பூட்ஸ், முதுகுத் தண்டுக்கான பேக் ப்ரொடக்டர் என ரேஸுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் அணிந்தாலும், சில காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது. இது பற்றி ரேஸ் வீரர்கள் சிலரிடம் கேட்டோம்.

ஸ்லோ... ஸ்டடி... வின்!
ஸ்லோ... ஸ்டடி... வின்!

பைக் ரேஸர் சுதாகர் கேசவன், ''எட்டு வருஷமா ரேஸ்ல இருக்கேன். எத்தனை முறை அடிபட்டாலும், மீண்டும் மீண்டும் ரேஸ் ஓட்டத்தான் மனசு ஏங்கும். ரேஸ்ல அடிபட்டு கோமா ஸ்டேஜுக்குப் போய் குணமாகி, திரும்பவும் விளையாட வந்தவங்க இருக்காங்க! தரமான, விலை உயர்ந்த ரேஸ் சூட்டுகளைப் பயன்படுத்தினால், உடலில் எந்த அடியும் படாது!'' என்றார் அக்கறையோடு.  

மோட்டோ ஜீபியின் 125 சிசி ரேஸ் போட்டியில் கலந்துகொண்ட இந்திய ரேஸ் வீரர் சரத்குமாரிடம் பேசினோம். ''14-வது வயதிலேயே பைக் ரேஸுக்கு வந்துட்டேன். நான் பயன்படுத்தற ஹெல்மெட் விலை 45,000 ரூபாய். கங்காரு தோலில் செய்த கிளவுஸ், சேஃப்டி ஜாக்கெட் 65,000 ரூபாய், பேக் ப்ரொடக்டர், பூட்ஸ் எல்லாமே நல்ல தரமானதுதான். அப்படியிருந்தும், ஒருமுறை என் ஹெல்மெட் உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஐந்து மணி நேரம் மயக்க நிலையிலேயே இருந்தேன். என் முழங்கால்ல உள்ள கார்டிலேஜ் ஜவ்வும் விலகி ஆபரேசனும் நடந்தது. துரதிருஷ்டவசமாக சில சமயங்கள் இப்படியெல்லாம் நடக்கும். எல்லா விளையாட்டையும்விட, பைக் ரேஸில் ரிஸ்க் அதிகம்! முழு கவனத்துடன் ரேஸ் ஓட்டினால் வேதனையில்லாமல் சாதனைகள் படைக்கலாம்!'' என்றார்.

ஸ்லோ... ஸ்டடி... வின்!
ஸ்லோ... ஸ்டடி... வின்!

ரேஸின்போது சாதாரண ஹெல்மெட்டைப் பயன் படுத்துவது மிகவும் தவறு. ரேஸுக்கென்றே ஸ்பெஷல் ஹெல்மெட்டுகள் 5000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. இவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும்!

ஸ்லோ... ஸ்டடி... வின்!

 பைக் ரேஸ் வீரராக முடிவெடுத்து விட்டால், தைரியமாக இருக்க வேண்டும், ரேஸ் காயங்களைப் பார்த்து பயப்படக் கூடாது. ரேஸ் டிராக்குக்குள் வந்துவிட்டால், விபத்து எப்படி நடக்கும் என்றே கணிக்க முடியாது. பைக் பேலன்ஸை இழந்து விபத்து நடக்கலாம், அல்லது மற்ற வீரர்கள் வேண்டுமென்றே இடிக்கலாம் எது நடந்தாலும், தைரியமாக எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்! துணிவே துணை!

ஸ்லோ... ஸ்டடி... வின்!

பைக்கிலிருந்து கீழே விழும்போது பைக்கைப் பற்றி கவலைப்படாமல், அந்த இடத்தை விட்டு உடனடியாக விலகிவிட வேண்டும். ஏனெனில், பைக் தரையில் உரசும்போது, நெருப்பு பற்றவோ அல்லது பின்னால் வரும் பைக் மோதி காயம் ஏற்படவோ வாய்ப்புகள் அதிகம்!

ஸ்லோ... ஸ்டடி... வின்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு