பெரிய கார் என்ற அர்த்தத்தில்

என்று விளம்பரம் செய்யப்படும் புத்தம் புதிய நிஸானில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று வருவதுதான் கிரேட் எஸ்கேப்புக்கான திட்டம்.

வசீகரமான காரின் முன் பக்கமும், காருடன் இயல்பான அழகுடன் இணைந்திருக்கும் டிக்கியும், 'இது பெரிய கார்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில், காரின் உள்பக்கம் படு விசாலமாகவும் தாராளமாகவும் இருக்கிறது. டேஷ் போர்டு, மைக்ராவில் இருப்பதுதான் அப்படியே இடம் பெயர்ந்து வந்திருப்பது போலத் தோன்றினாலும், சில தனித்துவங்கள் சன்னியில் இடம் பிடித்திருக்கின்றன. பின் பக்க இருக்கைகள் மிக வசதியாகவும் மிக மிக தாராளமாகவும் இருக்கிறது. தொல்லையில்லாத 'ஸ்டார்ட் / ஸ்டாப்’ பட்டன் மைக்ராவைத் தொடர்ந்து இதிலும் இருக்கிறது. டிரைவர் சீட் அட்ஜஸ்ட் இருப்பதால், நம் வசதிக்கு ஏற்ப சீட்டின் உயரத்தை அமைத்துக் கொள்ளலாம். 'மைக்ராவின் டிக்கி வைத்த காராக நிஸான் சன்னி இருக்கும்’ என்று ஜோசியம் சொன்னவர்கள் ஏமாறும் அளவுக்கு காரின் வெளித்தோற்றத்தில் கிட்டத்தட்ட நிஸான் டீனா போலவே இருக்கிறது இந்த சன்னி.

நவராத்திரி விடுமுறையை ஒட்டி, சாலையில் சடுகுடு ஆட்டம் குறைவாக இருந்த அதிகாலையில் காரை ஸ்டார்ட் செய்தோம். பெரிய கார்தான் என்றாலும் நகருக்குள் எந்தப் பதற்றமும் இல்லாமல் ஓட்ட முடிவது ஆச்சரியம். அண்ணா சாலையில் இருந்து கோயம்பேடு வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் தொட்டு, திருச்சி நெடுஞ்சாலையைப் பிடித்தோம்.

செங்கல்பட்டு வரை சாலையில் வாகனங்களின் ஆதிக்கம் இருந்ததால், நிதானமாக ஓட்டிச் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு, போக்குவரத்து குறையவும், சன்னியின் சாதக - பாதகங்களைச் சோதிக்க ஆரம்பித்தோம்.

ஆரம்ப வேகத்தில் சீறினாலும், மூன்றாவது நான்காவது கியரில் பவர் சற்று சுணங்குவது தெரிகிறது. டாப் கியருக்கு எகிறியதும் இன்ஜின் பவர் சீராக வெளிப்பட ஆரம்பிக்கிறது. 100 கி.மீ வேகத்தை எட்டுவதே தெரியவில்லை. ஆக்ஸிலரேட்டரை அழுத்தி அதிகபட்ச வேகத்தை எட்ட நினைத்தோம். 140 கி.மீ வேகத்தை எட்டியதும் கார் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை எட்டியது சன்னி. ஆனால், 120 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்து ஓட்டுவதற்குத்தான் சன்னி மிகவும் வசதியாக இருக்கிறது. ஓவர்டேக் செய்வது; பிரேக் பிடிப்பது போன்ற விஷயங்கள் செய்ய இந்த வேகம் கட்டுப்பாடாக இருக்கிறது. இந்த காரின் இன்னொடு பலம் பிரேக்தான். ஏபிஎஸ் பிரேக்ஸ் இருந்தாலும், பிரேக் பெடலில் கால் வைத்ததுமே நம்பிக்கை கொள்ள வைக்கிறது சன்னி.

திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, வழியாக மதுரையை எட்டியபோது மதியம் ஆகியிருந்தது. மதுரை ரிங் ரோட்டில் நுழைந்து கன்னியாகுமரி நால்வழிச் சாலையை எட்டுவதற்குள் 'போதும் போதும்’ என்றாகி விடுகிறது. குறுகலான சாலையில், ஏராளமான வாகனப் போக்குவரத்தும், இந்தச் சாலையில் இருந்து எப்போது மீள்வோம் என எண்ண வைக்கிறது மதுரை ரிங் ரோடு!

திருமங்கலம் அருகே நால்வழிச் சாலையில் ஏறி, கன்னியாகுமரி நோக்கித் திரும்பினோம். விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி என முக்கிய நகரங்களை 'பை பாஸ்’ சாலையில் பறந்து கடந்தோம். வள்ளியூர் தொட்டதும் காற்றாலைகளின் சாம்ராஜ்யம் ஆரம்பமாகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராட்சஸக் காற்றாடிகளின் வெள்ளை வண்ண இறக்கைகள் சுழல்வது ஏதோ வேறொரு உலகத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. நால்வழிச் சாலையில் இருந்து சட்டென்று விலகி கன்னியாகுமரி செல்லும் சாலையில் திரும்பினோம்.

கன்னியாகுமரி நகருக்குள் நுழைந்து முன்னேறியதும் சரேலென கடல் நோக்கிக் கீழிறங்குகிறது சாலை. நகரின் மத்தியில் நின்றால் மூன்று திசையிலும் கடல் தெரியும் அதிசயம் இந்த ஊருக்கு மட்டுமே சொந்தம்! நவராத்திரி விடுமுறை என்பதால், வெளியூர்ப் பயணிகளால் கூட்டம் நிரம்பி வழிந்தது. எந்தப் பக்கம் பார்த்தாலும் சாலையில் மக்கள் கூட்டம்தான். சூரிய அஸ்தமனத்துக்குள் கன்னியாகுமரி சென்று விட்டதால், கடற்கரைச் சாலையில் அலைமோதிய கூட்டத்தில் மிதந்து சென்ற நிஸான் சன்னியை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தது, டிவி விளம்பரத்தின் வெற்றியைக் காரணமாகக் கூறலாம்.

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கண்டத்தில் சூரியன் உதயமாவதையும் அஸ்தமிப்பதையும் காணக்கூடிய வாய்ப்பை இங்கு வரும் யாரும் தவறவிட மாட்டார்கள். சுற்றுலாப் பயணிகளை அதிகாலையிலேயே எழுப்பி, சூரிய உதயம் காணத் தயார் செய்துவிடுகிறார்கள் விடுதியாளர்கள். காலை ஏழு மணிவரை உதயம் காணும் கூட்டம் குறைந்த பிறகு ஆரம்பமாகிறது மீன் வியாபாரம். படகுகள் வர வர, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குறுகலான தெரு திமிலோகப்படுகிறது. கூறு கட்டுவது அல்லது தனி மீனாக ஏலம் விடுகிறார்கள். எடை போடுவது என்பது அறவே இல்லை! இருநூறில் ஆரம்பித்த ஏலம் ஆயிரம் வரைகூட செல்கிறது. கிட்டத்தட்ட பத்து மணி வரை இந்த வியாபாரம் நீள்கிறது. இந்தத் தெருவை ஒட்டி இருக்கும் படகுத் துறைக்குச் செல்ல டிக்கெட் எடுக்கும் கூட்டம் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு நிற்பதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

கடலுக்குள் பூத்து நிற்கும் பாறைகளின் மேல் சுவாமி விவேகானந்தர் மண்டபமும், வானுயரத் தனித்து நிற்கும் திருவள்ளுவர் சிலையும் கரையில் இருந்து காண்பவர்களைப் பிரமிக்கச் செய்பவை. கரையில் நிற்கும் தேவி பகவதியின் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள். இது மட்டுமல்லாமல், விவேகானந்தா கேந்திரம் ஒன்றும் நகருக்குள் நுழைவதற்கு முன்பு இடப்பக்கம் இருக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ள இந்த வளாகத்தில் பள்ளி, கல்லூரி, விடுதி என ஒரு குட்டி நகரமே செயல்படுகிறது. மேலும், மயில்களுக்கான சரணாலயமும் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் காணுவது கொள்ளை அழகு!

கன்னியாகுமரிக்கு அருகிலேயே வட்டக்கோட்டை என்ற வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மதில் சுவர் உள்ளது. அதேபோல், நாகர்கோவில் செல்லும் வழியில் உள்ள சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதுடன் இந்தக் கோயிலில் உள்ள பதினெட்டு அடி உயரம் கொண்ட அனுமார் சிலை புகழ் பெற்றது. கடற்கரையோரம் அமைந்துள்ள கீழ்மணக்குடி - மேல்மணக்குடி ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் பாலம் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அழிந்து போனது. அதில் இப்போது தற்காலிக பாலம் அமைத்திருக்கிறார்கள். அழிந்த பாலத்தைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் அந்த ஊருக்கு விசிட் அடிக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் பலமுறை நமது காரை ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ ஒன்று, அடிக்கடி கடந்தும் தயங்கித் தயங்கி தவழ்ந்தும் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. இந்த அனுபவம் சென்னையில் தொடங்கி வழி நெடுக ஆங்காங்கே நமக்கு ஏற்பட்ட அனுபவம்தான் என்றாலும், நம்மைக் கடந்த வென்ட்டோவைக் கைகாட்டி நிறுத்தி, ''காரைப் பார்க்க வேண்டுமா?'' எனக் கேட்டதும், சட்டென உற்சாகமாகி இறங்கி வந்தார் அந்த கார் உரிமையாளர்.

மதுரையைச் சேர்ந்தவரான பழனிக்குமார் ஒரு கார் பிரியர். சமீபத்தில் எடுத்த ஃபோக்ஸ்வாகன்

வென்ட்டோவும் ஸ்கார்ப்பியோவும் வைத்திருக்கிறார். கட்டுமானப் பணி கான்ட்ராக்டரான இவருக்கு, கட்டுமானப் பணி வாகனங்களும் நிறைய இருக்கின்றன. தற்போது, கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். 'மோட்டார் விகடன்’ என்றதும் உற்சாகமானவராக, ''உங்களை இப்படிச் சந்திப்பேன் என நினைக்கவில்லை'' என்றவரிடம், ''காரை ஓட்டிப் பாருங்கள்'' என்றோம். காரை ஒருமுறை வலம் வந்தவர் டிசைன் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பினார். கடற்கரைச் சாலையில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தவரிடம், ''கார் எப்படி இருக்கிறது?'' என்றதும், ''கார் மிகவும் பிடித்திருக்கிறது. விமானம் ரன்வேயில் கிளம்புவது போல ஆரம்ப வேகத்தில் சீறிச் செல்கிறது. இவ்வளவு இடவசதியுடன் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கம்பீரமான தோற்றமும், இடவசதியும் இந்த காருக்கு பெரிய ப்ளஸ். விலை மட்டும் பத்து லட்சத்துக்குள் இருந்தால் விற்பனையில் தூள் கிளப்பும் இந்த நிஸான் சன்னி!'' என்றார்.

கன்னியாகுமரியில் முக்கிய இடங்கள் அனைத்தையும் தவறாமல் சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்தநாள் அதிகாலை சென்னை நோக்கிப் புறப்பட்டு மீண்டும் சென்னை வந்து சேர்ந்தோம். மொத்தம் 1450 கி.மீ வரை நிஸான் சன்னி காரை ஓட்டிப் பார்த்தபோது ஒன்று புரிந்தது. அதாவது, நீண்ட தூரப் பயணங்களுக்கு குடும்பத்துடன் பயணிக்க மிகச் சிறப்பாகவும், அலுப்பு ஏற்படுத்தாத விதத்திலும் இருக்கிறது நிஸான் சன்னி!