Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

சுப்புரத்தினம், ஆவடி.

 நான் மாதந்தோறும் 1000 கி.மீ வரை பயணம் செய்வேன். எனக்கு சின்ன டீசல் கார்தான் வாங்க வேண்டும். செவர்லே பீட் டீசல் வாங்கலாமா?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நகரப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த டீசல் கார், செவர்லே பீட். மைலேஜ் அதிகம் என்பதோடு, பர்ஃபாமென்ஸிலும் நிறைவாக இருக்கிறது பீட் டீசல். ஆனால், சென்னையில் பீட் டீசல் மாடலின் குறைந்தபட்ச வேரியன்ட்டின் விலை 5.10 லட்சம். இது, தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் காரின் விலையாகும். நகரப் பயன்பாட்டுக்கு 5.10 லட்ச ரூபாய் விலை கொடுத்து சின்ன டீசல் காரை வாங்கினால், காரின் பயன்பாடு அதிகம் இருக்க வேண்டும். இல்லையென்றால், டீசல் காரை வாங்குவது பயனுள்ளதாக இருக்காது!

அருண், சென்னை.

நான் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ காரை கடந்த ஆகஸ்ட்

 ##~##
மாதம் வாங்கினேன். முதல் சர்வீஸுக்கு காரைக் கொண்டு சென்றபோது, சர்வீஸ் மேனேஜர், 'காரின் அடியில் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யக் கூடாது’ என்றார். காரணம் கேட்டபோது, 'வென்ட்டோவின் அன்டர் பாடியில் சென்ஸார்கள் இருப்பதால், தண்ணீரால் பாதிப்படையும்’ என்றார். இது உண்மையா?

ஆமாம். சர்வீஸ் மேனஜர் சொல்வது சரிதான். ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் சென்ஸார்களின் ஆயுள் குறையும் என்பதால், வென்ட்டோ காரின் அடிப் பகுதியை வாட்டர் வாஷ் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறது. கார் நிறுவனம் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்!

சிவகுமார், கோவை.

புதிதாக கார் வாங்க இருக்கிறேன். ஒரே இன்ஜின்தான் இரண்டு கார்களிலும் இருப்பதால், ஹோண்டா ஜாஸ் வாங்குவதா அல்லது ஹோண்டா பிரியோ வாங்குவதா எனக் குழப்பமாக இருக்கிறது....

ஹோண்டா ஜாஸ் காரின் குறைந்தபட்ச மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 6.52 லட்சம். இதே ஹோண்டா பிரியோ காரின் விலை குறைந்த மாடலின் விலை 4.67 லட்சம். இந்த பிரியோ மாடலில் ஏபிஎஸ், காற்றுப் பை, ஈபிடி உள்ளிட்ட வசதிகள் இல்லை. வசதிகள் அதிகம் கொண்ட பிரியோவின் அதிகபட்ச மாடலின் விலை 6.01 லட்சம். அதிக இடவசதி, அதிக வசதிகள் வேண்டும் என்றால், ஹோண்டா ஜாஸ் காரை வாங்குவதே நல்லது!

விக்னேஷ், மதுரை.

டிவிஎஸ் வீகோ, சுஸ¨கி ஆக்ஸஸ் 125 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களில் எது அதிக மைலேஜ், குறைந்த மெயின்டனன்ஸ் செலவு கொண்ட ஸ்கூட்டர்?

மெயின்டனன்ஸ் செலவு களைப் பொறுத்தவரை இரண்டு ஸ்கூட்டர்களும் அதிகம் செலவு வைக்காது. சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸுகளுக்கு நீங்கள் செலவிடும் தொகை, இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், மைலேஜைப் பொறுத்தவரை சுஸ¨கி ஆக்ஸஸ் லிட்டருக்கு 37 கி.மீ மட்டுமே மைலேஜ் தருகிறது. ஆனால், டிவிஎஸ் வீகோ லிட்டருக்கு 44.6 கி.மீ மைலேஜ் தருகிறது.

விக்டர், தூத்துக்குடி.

எனக்கு கையாள்வதற்கு சுலபமான, சிறந்த ரைடிங் பொசிஷன் கொண்ட ஸ்டைலான பைக் வாங்க வேண்டும். என்ன பைக் வாங்கலாம்?

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

யமஹா ஃபேஸர் அல்லது யமஹா FZ-16 பைக் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யலாம். டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுங்கள்.

சலாவுதீன், அரக்கோணம்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கலாமென முடிவெடுத்துஇருந்தேன். ஆனால், கடந்த இதழ் மோட்டார் விகடனில் 100 சிசி விலையில் பஜாஜ் பாக்ஸர் 150 சிசி பைக் விற்பனைக்கு வந்திருப்பதாகப் படித்தேன். ஹீரோ ஸ்ப்ளெண்டர் வாங்கலாமா அல்லது பஜாஜ் பாக்ஸர் 150 வாங்கலாமா?

விலையைப் பொறுத்தவரை ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கை விடவும் பஜாஜ் பாக்ஸர் ஆயிரம் ரூபாய் விலை குறைவு. ஆனால், 150 சிசி பைக்தான் என்றாலும், பஜாஜ் பாக்ஸரை பர்ஃபாமென்ஸில் சிறந்த பைக் என்று சொல்ல முடியாது. பட்ஜெட் பைக்காக நீங்கள் எதிர்பார்க்கும்போது, மைலேஜும் அதிகம் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால், ஹீரோ ஸ்ப்ளெண்டருடன் ஒப்பிடும்போது, லிட்டருக்கு கிட்டத்தட்ட 10 கி.மீ மைலேஜ் குறைவாகத் தருகிறது பஜாஜ் பாக்ஸர். ஸ்டைலிலும் பாக்ஸர் கவரவில்லை என்பதால், நீங்கள் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கை வாங்குவதே நல்ல சாய்ஸாக இருக்கும்!

அபிமன்னன், தாம்பரம்.

கார் ரேஸ் வீரனாக வேண்டும் என்பது என் மகனின் கனவு. அவன் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். அடிக்கடி கோ-கார்ட் மைதானங்களில் கார் ஓட்டி வருகிறான். அவனை ரேஸ் வீரனாக்க நான் என்ன செய்ய வேண்டும்? யார் பயிற்சி தருவார்கள்?

உங்கள் மகன் ரேஸ் வீரனாகப் பயிற்சி பெற இது சரியான வயது இல்லை என்றாலும், 'டூ லேட்’ இல்லை. இந்தியாவில் ரேஸைப் பொறுத்தவரை சென்னைதான் தலைநகரம். மோட்டோ ரெவ், ராம்ஸ் ரேஸிங், மீக்கோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல ரேஸ் அணிகள் சென்னையில் உள்ளன. இவர்களை அணுகினால் ரேஸ் பயிற்சி கிடைக்கும். மோட்டோ ரெவ் இந்தியா-9884801234, ராம்ஸ் ரேஸிங்- 9841021729, மீக்கோ மோட்டார் ஸ்போர்ட்ஸ்- 9551281111. இந்த எண்களில் பேசுங்கள்!

பாலகுருநாதன், புதுவை.

ஹோண்டாவை விட்டுப் பிரிந்துவிட்ட ஹீரோ நிறுவனம், 250 சிசி மோட்டார் சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். அந்த மோட்டார் சைக்கிள் எப்போது விற்பனைக்கு வரும்?

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் 250 சிசி பைக் அடுத்த ஆண்டு மே - ஜூன் மாதவாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.