நான் திருச்சியில் சிவில் இன்ஜினீயராக இருக்கிறேன். பலரையும் போல, எனக்கும் சின்ன வயதில் இருந்தே கார் என்றால் ரொம்பப் பிடிக்கும். முதன்முதலாக நான் வாங்கிய கார் டாடா இண்டிகா. அதன் பிறகு, டாடா இண்டிகா விஸ்டா வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன். குடும்பத்தோடு காரில் அடிக்கடி பயணம் செய்வேன். பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர். அதனால், கொஞ்சம் பெரிய கார் வாங்கலாம் என முடிவு செய்தேன்.

ஏன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா?

புதிதாக நான் வாங்கும் கார் - என் தொழிலுக்கும், என் குடும்பத்துக்கும், என் பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதனால், எனக்கான கார் எது என்பதைத் தேட ஆரம்பித்தேன். முதலில் டாடா போல்ட் காரைத்தான் பார்த்தேன். அதில் என் குடும்பத்தினருக்குத் திருப்தி இல்லை. காரணம், நாம் ஏற்கெனவே வைத்திருந்த விஸ்டாவைப் போல இருந்தது என்பதுதான். மேலும், பெரிய காராக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்கள். அதனால், மஹிந்திரா ஸைலோவைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தாலும், என் பட்ஜெட்டுக்குள் அது வரவில்லை. மஹிந்திரா நுவோஸ்போர்ட் பார்த்தேன். எல்லாமே எனக்கு ஏற்ற வகையில்தான் இருந்தன. அதுவும், என் பட்ஜெட்டைக் கொஞ்சம் தாண்டி இருந்தது. மிகத் தற்செயலாகத்தான் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவைப் பார்த்தேன். அதன் டிஸைன் மிகவும் பிடித்துப் போக, காரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் என ஷோரூம் சென்றேன்.

ஷோரூம் அனுபவம்

திருச்சி பி.எல்.ஏ (PLA) மோட்டார்ஸ் சென்று கார் பற்றி விசாரித்தேன். பிரெஸ்ஸாவின் வடிவமைப்பும், பிரீமியம் லுக்கும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஷோரூமில் இருந்த சேல்ஸ் மேனேஜர், பிரெஸ்ஸாவின் தனித்துவம் மற்றும் செயல்பாடுகள் பற்றி நன்கு விளக்கினார். டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தபோது, ஓட்டுதல் தரம் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும், ஸ்விஃப்ட் காரில் இருக்கும் இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது என்பதால், நல்ல மைலேஜ் கிடைக்கும் என்று சொன்னார்கள். வீட்டில் பிரெஸ்ஸாவைப் பற்றிச் சொன்னதும், அவர்களும் வந்து காரைப் பார்த்தார்கள். பெரிய கார் போலத் தோற்றம் இருந்ததும், உயரமாக அமர்ந்திருப்பது போன்ற இருக்கை அமைப்பும் அவர்களுக்கும் பிடித்துப் போனது. விலையும் என் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருந்தது என்பதால், நமக்கு ஏற்ற கார் இதுதான் என முடிவு செய்து பிரெஸ்ஸா LDI(O) மாடலை உடனே புக் செய்துவிட்டேன்.

எப்படி இருக்கிறது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா?

காரை டெலிவரி எடுத்ததும் குடும்பத்துடன் தேவாலயம் சென்றுவந்தோம். காரில் ஐந்து பேர் வரை உட்கார தாராளமான இடவசதி இருக்கிறது. உயரமான சீட்டிங் பொசிஷன் என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிட்டிக்குள் ஓட்டுவதற்கு ஸ்மூத்தாகவும், இன்ஜின் பவர்ஃபுல்லாக இருப்பதுடன் எந்தவிதமான அதிர்வுகளும் இல்லை. இதன் 328 லிட்டர் பூட் ஸ்பேஸ், பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கிறது. என் நண்பர்கள் பிரெஸ்ஸாவை ரைட் சாய்ஸ் என்று சொன்னது மட்டுமின்றி, இந்த காரை அவர்களும் வாங்க விருப்பப்படுகின்றனர்.

இதுவரை 1,050 கி.மீதான் ஓட்டியிருக்கிறேன் என்பதால், மைலேஜை இன்னும் சரியாகக் கணக்கிடவில்லை. 1,000 கி.மீ ஓட்டியதும் சர்வீஸுக்கு அழைத்தார்கள். 5,000 கி.மீ-க்கு ஒருமுறைதான் ஆயில் மாற்ற வேண்டும் என்பதால், வெறும் 100 ரூபாய் மட்டும் சர்வீஸ் பில் வந்தது.

பிடித்தது

மாருதியின் பெரிய ப்ளஸ் அதன் வடிவமைப்பு, டிஸைன் மற்றும் ரைடு குவாலிட்டி. காரை சுலபமாக ஹேண்டில் செய்ய முடிகிறது. ஸ்டீயரிங் கன்ட்ரோல் பக்காவாக இருக்கிறது. டயர் க்ரிப்பும் நன்றாக இருக்கிறது. இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் செம ஸ்மூத். ஏபிஎஸ் பிரேக் இருப்பதால், பாதுகாப்பாக உணர முடிகிறது. சஸ்பென்ஷன்கள் மேடு பள்ளங்களிலும் ஸ்மூத்தாகச் செல்ல உதவுகின்றன. மியூஸிக் சிஸ்டம் செம ஸ்மார்ட். ஐந்து பேர் கொண்ட குடும்பம் தாராளமாகப் பயணம் செய்யும் அளவுக்கு அதன் இடவசதியும் பூட் ஸ்பேஸும் பக்கா. நிறைய வசதிகளை பட்ஜெட் கார் செக்மென்ட்டில் கொண்டுவந்திருப்பது பெரிய ப்ளஸ்.

பிடிக்காதது

எல்லா கதவுகளையும் லாக் செய்யும் சென்ட்ரல் லாக் லீவர் பொசிஷன் வாட்டமாக இல்லை. டச் ஸ்கிரீன் சிஸ்டம் நான் வாங்கிய வேரியன்ட்டில் இல்லை. எல்லா வேரியன்ட்டுக்கும் இதைக் கொடுத்திருக்கலாம். அதேபோல், பார்க்கிங் சென்ஸார் மற்றும் வாய்ஸ் கமாண்ட் வசதிகளையும் அளித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

என் தீர்ப்பு

குடும்பத்தோடு பயணிக்க செம ஃப்ரெஷ்ஷான ஸ்டைலில், பக்கா பட்ஜெட் கார் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா.