ஒவ்வோர் ஆண்டும் கர்நாடகா, கோவா மாநிலங்களில் நடத்தும் தக்ஷின் டேர் ராலி, மாருதிக்கு மிக முக்கியமான நிகழ்வு. தக்ஷின் டேர் ராலிக்கு இது எட்டாவது ஆண்டு. மொத்தம் 190 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் 110 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் 16 பேர் பெண்கள். எண்ட்யூரன்ஸ், அல்ட்டிமேட் கார், அல்ட்டிமேட் பைக் ஆகிய மூன்று பிரிவுகளில் ராலி நடைபெற்றது. கடந்த ஜூலை 31-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் துவக்கி வைக்கப்பட்ட ராலி, ஆகஸ்ட் 6-ம் தேதி கோவாவில் நிறைவடைந்தது. மொத்தம் சுமார் 2,200 தூரம் நடந்த ராலியில் சிக்கல்கள், சவால்கள், சறுக்கல்கள், சாதனைகள் என கதம்பமான கொண்டாட்ட நிகழ்வாக நிறைவடைந்தது தக்ஷின் டேர் ராலி.

முதல் நாள் காலை 5 மணிக்கு ராலி ஆரம்பம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடக முதல்வரின் மகன் இறந்துவிட்டதால், பெங்களூருவை ஒட்டி ராலி நடத்துவது சரியாக இருக்காது என, வேகமாகச் செல்லும் எக்ஸ்ட்ரீம் கார் மற்றும் பைக் பிரிவு போட்டியை ரத்து செய்துவிட்டனர். நேரம், வேகம், தூரம் ஆகியவற்றைக் கணக்கிட்டுக்கொண்டெ செல்லும் TSD எனப்படும் எண்ட்யூரன்ஸ் ராலி சாதாரண சாலையில் நடப்பது என்பதால், அது மட்டும் பெங்களூருவில் இருந்து கூர்க் வரை நடைபெற்றது. இரண்டாவது நாள் கூர்க்கில் உள்ள காபி எஸ்டேட்டுகளில்தான் போட்டி. இதற்காகவே உருவாக்கப்பட்டதுபோன்ற பாதைகள், காபி எஸ்டேட்டுகளில் காணக்கிடைத்தன. அவ்வப்போது தூறும் மழை, சேறும் சகதியுமாக சாலை, கல்லும் தண்ணீருமாகக் கிடந்த நிலத்தில் எக்ஸ்ட்ரீம் பிரிவு கார்களும் பைக்குகளும் சீறிக்கொண்டு செல்ல... காபித் தோட்டத் தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். ஈரமான மண் சாலையில், முதலில் எக்ஸ்ட்ரீம் பிரிவு கார்கள் சீறிச் செல்ல...

வளைவுகளில் க்ரிப் கிடைக்காமல் இடமும் வலமுமாகச் சுழன்றபடி சென்றன பல கார்கள். அதனால், அந்த மண் சாலை நீர் ஊற்றிப் பிசைந்ததுபோல கொழகொழவென மாறிவிட்டது. அதில்தான் பைக்குகளும் செல்ல வேண்டும். காடு, மேடு, பாலைவனம் என பறந்து பழகிய பலரும் அதில் சறுக்கி விழுந்தனர். எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில் கலந்துகொண்டே ஒரே பெண் பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா. இவருக்கு இதுதான் முதல் ராலி ரேஸ். நேஷனல் சாம்பியன்ஷிப் டிராக் ரேஸில் பைக் ஓட்டிய அனுபவம் உண்டு என்றாலும், எந்தக் குறுக்கீடுகளும் இல்லாத சீரான ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கும், சாலையே இல்லாத இடத்தில் ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எக்ஸ்ட்ரீம் பிரிவில் பைக் ஓட்டுபவர்கள் பெரும்பான்மையான நேரம் நின்றுகொண்டேதான் செல்வார்கள். காரணம், மேடு பள்ளமான இடத்தில் செல்லும்போது அப்படி நிற்பதுதான் பைக்கின் பேலன்ஸை சீராக வைக்கும். ஐஸ்வர்யாவுக்கு இந்த ராலி புதுசு என்பதால், சேற்றில் சறுக்கி விழுந்து விழுந்து எழுந்தார். ஆனாலும் பிடிவாதமாக இருந்து ராலியை பூர்த்தி செய்தார். அடுத்த நாள் அவரிடம் பேசியபோது, ‘’கூர்க்கில் மட்டும் எட்டு தடவை கீழே விழுந்தேன்’’ என்று சொன்னார்.

இரண்டாம் நாள் போட்டியில் எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில் முன்னிலை வகித்தது சுரேஷ் ரானா - பர்மேந்தர் தாகூர் ஜோடி. எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில் டிவிஎஸ் அணியைச் சேர்ந்த அப்துல் வாஹீத்தும் நட்ராஜும் முன்னிலை வகித்தனர். எண்ட்யூரன்ஸ் TSD ராலி பிரிவில் ரகு மதன் - பிரகாஷ் ஜோடியும், கணேஷ் மூர்த்தி நாகராஜன் ஜோடியும் முன்னணி பெற்றிருந்தனர்.

மூன்றாம் நாள் ஷிமோகாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள வானி விலாஸ சாகர அணை என்ற இடத்தில் உள்ள மலை மீது போட்டி. கீழே நீர்த்தேக்கம், அடர்ந்த மரங்களற்ற சரளைக் கல் மலையில், விண்ட் மில்லுக்காக அமைக்கப்பட்டிருந்த சாலையில்தான் ராலி. மூன்றாம் நாள் போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது. கற்களாக இருந்த சாலையில், கார் இன்ஜின் உச்சஸ்தாயியில் உறுமிக்கொண்டு வர... சாலையில் கிடந்த கற்கள் எல்லாம் பக்கவாட்டில் பறக்க ஆரம்பித்தன. அதுவரை சாலையோரம் வேடிக்கை பார்க்கக் கூடி நின்றவர்கள் தெறித்து ஓடி தப்பிக்கும் நிலை ஏற்பட்டது.

மலை மீது இருந்த இந்தச் சாலையில் இரண்டு ரவுண்டு முடிந்ததும் அருகே இருந்த சிறு நகரமான ஹொஸதுர்காவில் இந்த ராலிக்காக அமைக்கப்பட்டிருந்த டிராக்கில் ராலி நடந்தது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பிரியர்கள், ஆர்வமாக விளம்பரங்கள் செய்து தரிசு நிலத்தில் டர்ட் டிராக் அமைத்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் நடந்த அந்த ராலியைப் பார்க்க, பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு வண்டி கட்டிக்கொண்டு வருவதுபோல குழுமியிருந்தனர். அந்த டிராக்கில் கார்களும் பைக்குகளும் புழுதியைக் கிளப்பியபடி பாய்ந்து சுழன்று வட்டமடித்ததைக் கண்டு உற்சாகக் குரல் எழுப்பினர். மூன்றாவது நாளும் சுரேஷ் ரானா - பரிமேந்தர் தாகூர் ஜோடியே முன்னிலை வகித்தது. பைக் பிரிவில் டிவிஎஸ் அணியைச் சேர்ந்த நட்ராஜ் முன்னிலை வகித்தார்.

நான்காவது நாளும் இதே இடத்தில்தான் ராலி நடந்தது. மொத்தம் 153 கி.மீ தூரம் கொண்ட இதில் எதிர்பாராத திருப்பங்களும், கிடுகிடு பள்ளத்தாக்கும் கதிகலங்க வைத்ததாக ராலி வீரர்கள் கூறினார்கள். இரண்டு நாட்கள் இந்த இடத்தில் நடந்த ராலியில் பல கார்கள் மெக்கானிக்கல் பிரச்னையால் ராலியை நிறைவு செய்ய முடியவில்லை. குண்டும் குழியுமான சாலையில் தடதடத்துச் சென்ற சில கார்களின் பாகங்கள் தளர்ந்து கீழே விழுந்தன. எக்ஸ்ட்ரீம் பிரிவில் மூன்றாவது நாளில் முன்னிலை வகித்தவர்கள்தான் நான்காவது நாளிலும் முன்னிலை வகித்தார்கள். எண்ட்யூரன்ஸ் TSD பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்த கணேஷ் மூர்த்தி - நாகராஜன் ஜோடி முன்னணி பெற்றிருந்தனர். ஐந்தாவது நாள் ஷிமோகா அருகே ராலி முடிந்ததும் கோவாவை நோக்கி வாகனங்கள் அணிவகுத்தன. அன்றைய தினம் இறுதி நாள் என்பதால், அடுத்த நாள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தனர்.

ஐந்தாம் நாள் கோவா சென்று சேர்ந்தபோது இரவாகிவிட்டது. அடுத்தநாள் காலை 10 மணிக்குப் பரிசளிப்பு விழா. ஒட்டுமொத்தமான எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில், சுரேஷ் ரானா - பர்மேந்தர் தாகூர் ஜோடி முதல் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் இடத்தை சந்தீப் சர்மா - கரண் ஆர்யா ஜோடியும், மூன்றாம் இடத்தை ஜஸ்மோகன் ஸைனி - விக்ரம் தாகூர் ஜோடியும் வென்றனர். முதல் இடம் பிடித்தவருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கும் இருந்த நேர வித்தியாசம் வெறும் 6.06 நிமிடங்கள். மூன்றாம் இடம் பிடித்தவர்கள் 11 நிமிடங்கள் பின்தங்கியிருந்தனர்.

எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில் முதல் இடத்தை டிவிஎஸ் அணியைச் சேர்ந்த நட்ராஜ், இரண்டாம் இடத்தை கேரளாவைச் சேர்ந்த ஃபெபின் ஜோஸ், மூன்றாம் இடத்தை ஆகாஷ் ஆகியோர் பெற்றனர். எண்ட்யூரன்ஸ் TSD ராலி பிரிவில் முதல் இடத்தை தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி - நாகராஜன் ஜோடியும், இரண்டாம் இடத்தை ரகு மதன் - பிரகாஷ் ஜோடியும், மூன்றாம் இடத்தை கார்த்திக் மாருதி - சங்கர் ஆனந்த் ஜோடியும் பெற்றனர். இவர்களில் ரகு மதனைத் தவிர மற்ற அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ராலியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை TCS ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி மற்றும் ஸ்ருதி, TSD ராலியில் புல்லட் கிளாஸில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. ராலி போட்டியில் கலந்துகொள்வது இவர்களின் ஹாபியாம். “எங்கே ராலி நடந்தாலும் கிளம்பிவிடுவோம்” என்றார்கள் உற்சாகமாக.

எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில் முதல் இடம் பிடித்து வெற்றிபெற்ற சுரேஷ் ரானாவை, ராலி வெறியர் என்று சொல்லலாம். இதுவரை எட்டு முறை ‘ரைடு தி ஹிமாலயா’ ராலியில் வென்றுள்ளார். மூன்று முறை ‘டெஸர்ட் ஸ்டார்ம்’ ராலியில் வென்றுள்ளார். இவரது காரான மாருதி கிராண்ட் விட்டாராதான் எக்ஸ்ட்ரீம் ராலியில் முதல் கார். இவரது காரின் வேகம், ராலி பாதையைக் கிட்டத்தட்ட வடிவமைத்துவிடும் என்பார்கள். பின்னால் வரும் காருக்கு, இவரது கார் எந்த வழியில் போயிருக்கிறது என்பதைச் சுலபமாகக் கண்டறிய முடியும் என்பார்கள். இவர் காரைவிட்டு இறங்கிவிட்டால், ஒல்லியான தேகமும் மென்மையான குரலும் கொண்ட இவரா பேய் வேகத்தில் கார் ஓட்டினார் என்று நம்ப மாட்டார்கள். ராலி போட்டிக்கு என அவதாரம் எடுத்தவர் என்று சக ராலி வீரர்களே இவரைப் புகழ்வார்கள். அவரிடம் “உங்களின் தொடர் வெற்றியின் ரகசியம் என்ன?” என்றபோது, “ராலி ஓட்டி ஓட்டியே நான் அதற்கு ஃபிட் ஆகிவிட்டேன்” என்று சிரித்தவர், ‘‘ஒவ்வொரு முறையும் இந்தப் போட்டியில் நாம் வெல்வோமா என்கிற த்ரில்தான் என்னை இயக்குகிறது. ஒவ்வொரு முறையும் புதிய இடம், புதிய பாதை, புதிய மனிதர்கள் என கற்றுக்கொள்ள ராலி போட்டிகள் எனக்கு உதவி செய்கிறது’’ என்கிறார்.

டிராக் ரேஸில் இருந்து ராலி போட்டிக்குப் புதிதாக வந்திருக்கும் ஐஸ்வர்யாவிடம் பேசினோம். ‘‘டிராக்கில் பைக் ஓட்டி இருந்தாலும் ஆஃப் ரோடில் பைக் ஓட்டுவது சவாலான விஷயம் என்பது எனக்குத் தெரியும். ட்ராக் ரேஸில் விபத்து ஏற்பட்டால், கீழே விழுந்துவிட்டால் உதவிக்கு உடனே ஆள் வந்துவிடுவார்கள். ராலி போட்டி அப்படி இருக்காது. காட்டுக்குள் நடக்கும் போட்டியில் எங்கே விழுந்து கிடக்கிறேன் என்பதை நாம்தான் தகவல் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எனக்குப் பின்னால் வருபவர்கள் உதவினால்தான் உண்டு. ஆனாலும், இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன். முதல்முறை என்பதால் பலமுறை கீழே விழுந்தேன். ஆனாலும் ஒருமுறைகூட எனக்குப் பயம் வரவில்லை. ராலியை ஃபினிஷ் செய்வது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு ஓட்டினேன். இந்த முறை வெற்றி கிடைக்காவிட்டாலும் என் முயற்சியைக் கைவிட மாட்டேன்’’ என்கிறார் 20 வயது இளம் புயல்!