கிட்டத்தட்ட ‘மைனஸ் டிகிரிக்குப் போகலாமா, வேண்டாமா’ என்று யோசித்துக்கொண்டிருந்த ‘பட பட’ ஊட்டிக் குளிரில்... யாருமே இல்லாத டீக்கடையைச் சுற்றிலும் யமஹா R15, KTM, பல்ஸர், CBR, புல்லட் என்று ‘தட தட’ பைக்குகள். பைக்குகளின் இக்னீஷனைக்கூட ஆஃப் பண்ணாமல் - ரேஸிங் ஜெர்க்கின், ஹெல்மெட், க்ளோவ்ஸ் சகிதம் ஒரு பத்துப் பதினைந்து பேர் செல்லமாக டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தனர்.

விசாரித்தால், ‘‘டீ ரைடு கேள்விப்பட்டிருக்கீங்களா? ஊட்டி வரைக்கும் டீ சாப்பிட்டுப் போலாம்னு வந்தோம்!’’ என்று குளிரில் கூலாக தம்ஸ் அப் செய்தார்கள் அந்த பைக் ரைடர்கள். சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ‘TeamB 2’ பைக் கிளப்பினர். ‘‘வெறும் டீ குடிக்க மட்டும் நாங்க இந்த கிளப்பை ஆரம்பிச்சோம்னு நினைச்சுடாதீங்க பாஸ்!’’ என்று தனது R3 பைக்கின் இக்னீஷனை ஆஃப் செய்துவிட்டு வந்தார் பத்மநாபன். ‘TeamB 2 பைக் கிளப்பின் தலைவர்.

‘‘எங்க ஊர், கிராமத்துக்கும் சிட்டிக்கும் நடுவுல. அதாவது ரெண்டுமே கிடையாது. பல்ஸர், அப்பாச்சி இருந்தா அவங்கதான் பண்ணையார் மாதிரி. நான் மிடில் கிளாஸ்தான். ஆனா, எனக்கு ரேஸிங் மேலதான் ஆர்வம். எப்படியோ கஷ்டப்பட்டு R15 வாங்கி, ஊருக்குள்ள கெத்து காட்டினேன். நினைச்ச மாதிரியே ஒரு வழியா கோயம்புத்தூர் கரி மோட்டார் ஸ்பீடுவேயில் டிராக் ரேஸில்கூட கலந்துக்கிட்டேன். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ - ஆனா இந்த உலகம் நம்மளை உத்துப் பார்க்கறதைக் கவனிச்சேன். என்னை மாதிரி நிறைய பசங்க ரேஸிங் டிப்ஸ் கேட்டு வந்தாங்க. அப்போதான் நாமளே ஒரு பைக் கிளப் ஆரம்பிச்சா என்னனு ஒரு ஐடியா வந்துச்சு. அக்டோபர் 2013-ல் ‘TeamB 2’ பைக் கிளப்பை உருவாக்கினேன். நான் டூ-வீலர் சேல்ஸ் அண்டு ஃபைனான்ஸ் பிஸினஸும் பண்றதால, கிளப் ஆரம்பிக்கிறதுல அவ்வளவா சிக்கலைச் சந்திக்கலை. ஆரம்பத்துல ஒரு நாலு பேர் மட்டும் ட்ரிப் போக ஆரம்பிச்சோம். அப்புறம் படிப்படியா எங்க கிளப்பில் இப்போ 15-க்கும் மேற்பட்ட ரைடர்கள் வந்துட்டாங்க! இதுபோக, இன்னும் நிறைய பேர் கிளப்பில் பதிவு பண்ணாம இருக்காங்க!

பைக் ஓட்டுறதுல அலாதி சுகம் காணுற ப்ரேவ் பாய்ஸ் யார் வேணாலும் எங்க கிளப்ல சேரலாம். எங்க கிளப்போட பேரே ப்ரேவ் பாய்ஸ் ஸ்கொயர்தான். பாதுகாப்பு முறைகளில் எங்க விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறவங்களை மட்டும்தான் சேர்த்துக்குவோம். ஹெல்மெட், நீ பேட், க்ளோவ்ஸ், ஜெர்க்கின் இது எல்லாமே அவசியம். ஆரம்பத்தில் சின்னச் சின்ன ரைடுகள் பண்ண ஆரம்பிச்சோம். இப்போ கர்நாடகா, பாண்டிச்சேரி, சென்னை, பெங்களூருனு பெரிய லெவல்ல ட்ரிப் போறோம். எங்க கிளப்ல பாதி பேர் ரேஸர்கள்தான். அதுக்காக ரேஷ் டிரைவ் பண்றது, கன்னாபின்னானு எட்டு போடுறது, இந்த மாதிரி விஷயங்கள் நாங்க எதுவும் பண்றதை அனுமதிக்கறது இல்லை. சும்மா வெறும் ஆசைக்காக கிளப் ஆரம்பிச்சுட்டு ஊர் சுத்திட்டு வர்ற ஆளுங்க கிடையாது சார் நாங்க! இந்த டீ ரைடுகூட ஒரு மீட்டிங் மாதிரிதான். எங்க கிளப்ல சேஃப்டி மெஷர்ஸ் ரொம்ப முக்கியம். ‘வ்ர்ர்ரூம்... வ்ர்ர்ரூம்’னு பைக்கை விரட்டி டூர் போறது மட்டும் எங்க என்ஜாய்மென்ட் இல்லை.

அதிகமா காட்டு வழிகள்ல ரைடு போறதால ஹை டெஸிபலில் ஹார்ன் அடிச்சு விலங்குகளுக்கு எந்தத் தொந்தரவும் தரக் கூடாதுங்கறது எங்க கிளப்போட ரூல்ஸ்.

சில பேர் மலைப் பாதைகள்ல இறங்கும்போது இக்னிஷனை ஆஃப் பண்ணிட்டு ஸ்பீடா இறங்குவாங்க. பெட்ரோல் சேமிக்கிறாங்களாம். அவங்களை நிறுத்தி, ‘நியூட்ரல்ல போனா பிரேக் பிடிக்காது; கன்ட்ரோல் கிடைக்காது’ங்கற உண்மையை விளக்கி கதறக் கதற க்ளாஸ் எடுப்போம். இது போக எங்க ஏரியாவுல பைக்/கார் ஹெட் லைட்டில் ஸ்டிக்கர் ஒட்டுறது, குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறது தொடர்பான விழிப்புஉணர்வு ரைடுகள் போறது, ரத்த தானம் - இப்படி எல்லாமே எங்க பைக் கிளப் சார்பாக பண்றோம்.

இது எல்லாமே முறைப்படி காவல்துறையோட அனுமதி வாங்கித்தான் பண்றோம். இன்னும் நிறைய பண்ணுவோம்!’’ என்று உற்சாகமாக த்ராட்டில் முறுக்கியபடி, மலை இறங்கினார் பத்மநாபன்.