மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

‘கஸ்டமர் இஸ் தி கிங்’ என்ற வாசகம் சாகாவரம் பெற்றது. விளம்பரம் மூலமும், மார்க்கெட்டிங் மூலமும் கண்கட்டி வித்தைகள் காட்டி, வாடிக்கையாளரை எளிதாக தன்பக்கம் ஈர்த்துவிடலாம் என்று பல நிறுவனங்கள் நினைக்கலாம். ஆனால், அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. என்னதான் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்தாலும், என்னதான் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய கார்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தாலும், அந்த நிறுவனத் தயாரிப்பை கண்ணை மூடிக்கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்கிவிட மாட்டார்கள். அதற்கு உதாரணமாக எட்டியோஸைச் சொல்லலாம்.

டொயோட்டா குவாலிஸ் கார் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள் வாடிக்கையாளர்கள். அதை அடுத்து கொண்டுவந்த இனோவாவும் சூப்பர் டூப்பர் ஹிட். ‘டொயோட்டா என்றால் நம்பிக்கை; நம்பிக்கை என்றால் டொயோட்டா’ என்ற எண்ணம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆழப் பதிந்திருந்த நேரம் அது. எம்பிவி செக்மென்ட்டை வெற்றிகொண்ட டொயோட்டா, செடான் மார்க்கெட்டையும் எளிதாக வெற்றிகொண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையோடு எட்டியோஸ் காரை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களும் மிக ஆவலோடு எட்டியோஸ் மீது ஆர்வம் காட்டினார்கள்.

ஆனால், எட்டியோஸ் பல விஷயங்களில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டியோஸுக்கு நான்கு முறை ஃபேஸ் லிஃப்ட்டும் 400 மாற்றங்களையும் செய்தது டொயோட்டா. இது கொஞ்சம் கொஞ்சமாக எட்டியோஸ் மீது நம்பிக்கையை வரவழைத்தது. இப்போது பட்ஜெட் செடான் கார் செக்மென்ட்டில், தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து நிற்கிறது எட்டியோஸ். இப்போது, எட்டியோஸுக்கு டொயோட்டா கொடுக்கும் ஐந்தாவது ஃபேஸ் லிஃப்ட் மாடல் அறிமுகமாகவிருக்கிறது.

குளோபல் என்கேப் நிறுவனத்திடமிருந்து எட்டியோஸ் பெற்ற 4 ஸ்டார் முத்திரையைத் தக்கவைத்துக்கொள்வதை டொயோட்டா மிக முக்கியமாகக் கருதுகிறது. அதனால், பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து இதை உருவாக்கி இருக்கிறது டொயோட்டா.

வாடிக்கையாளர்களின் குரலுக்கு உள்ள வலிமையை புதிய எட்டியோஸ் எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது என்பது, எட்டியோஸ் பற்றி இடம்பெற்றிருக்கும் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்குப் புரியும்.