மஹிந்திரா கார்களில் இனி பெட்ரோல் இன்ஜின்!

2018-ம் ஆண்டுக்கு முன்னதாக தனது வாகனங்கள் அனைத்திலும் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியன்ட்களை அறிமுகப்படுத்துவது என்று மஹிந்திரா முடிவு செய்துள்ளது. பெட்ரோல்-டீசல் இடையேயான விலை வித்தியாசம் குறைந்து வருவதால், டீசல் கார்களின் விற்பனை சரிந்து வருவதே இதற்குக் காரணம். ஆம், ஏப்ரல் 2016 - ஜூன் 2016 வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையில் 59 சதவிகிதம் பெட்ரோல் கார்கள். மஹிந்திரா விற்பனை செய்யும் KUV1OO காரில் பாதிக்குப் பாதி பெட்ரோல் கார்கள்தான்.

‘’தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இனி மஹிந்திரா களமிறக்கும் ஒவ்வொரு புதிய காரும், நாங்கள் தயாரிக்கப் போகும் 1.2 லிட்டர், 1.5 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் எனப் பொருத்தமான இன்ஜினுடன் விற்பனைக்கு வரும்’’ எனக் கூறியுள்ளார் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா.

ரீ-கால் செய்யப்பட்ட கார்கள்!

ரியர் டிரைவ்-ஷாஃப்ட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்வதற்காக, செப்டம்பர் 2014 வரையிலான காலத்தில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் எஸ்யுவி கார்களை ரீ-கால் செய்துள்ளது மஹிந்திரா. அதேபோல, பின்பக்கக் கதவுகளின் மேனுவல் சைல்டு லாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்வதற்காக, 539 ஆக்டேவியா கார்களை ரீ-கால் செய்துள்ளது ஸ்கோடா.

அக்டோபரில் வருகிறது டாடா ஹெக்ஸா!

தீபாவளி சமயத்தில் ஹெக்ஸா காரைக் களமிறக்க முடிவுசெய்துள்ளது டாடா. இந்த நிறுவனத்தின் விலை அதிகமான காராக இருக்கப்போகும் இது, மஹிந்திரா XUV 5OO காருடன் போட்டி போடுகிறது. மூன்று வேரியன்ட்டுகளில் வரப்போகும் இந்த காரின் ஆரம்ப விலை, XUV காரைப்போல 13 லட்ச ரூபாயாக (எக்ஸ் ஷோரும்) இருக்கும் எனத் தெரிகிறது. டச் ஸ்கிரீன் சிஸ்டம், JBL ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, லெதர் சீட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ESP, 6 காற்றுப் பைகள் என ஹெக்ஸாவின் பிரீமியம் பொசிஷனிங்குக்கு ஏற்ப அதிக சிறப்பம்சங்கள் காரில் இடம்பெறும்.

156bhp பவர் - 40kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ள ஹெக்ஸா, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வரும் கார்களில், Rotary Controller வாயிலாக ஆஃப் ரோடு செட்டிங்கை மேற்கொள்ளலாம். மற்ற மாடல்களில் இந்த Rotary Controller வாயிலாக டிரைவிங் மோடுகளை செலெக்ட் செய்யலாம். தற்போது விற்பனையில் இருக்கும் ஆரியா தயாரிக்கப்படும் அதே X2 பிளாட்ஃபார்மை அடிப்படையாகக்கொண்டு ஹெக்ஸா தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஆரியாவைவிட லக்ஸுரியான கேபின், முற்றிலும் மேம்படுத்தப்பட்ட டிஸைன் என ஒரு புதிய காருக்கான அம்சங்களைக்கொண்டிருக்கிறது ஹெக்ஸா.

மினி பைக் மேக்கர் டெஸ்ட்! - Ride 2016

ஆண்டுதோறும் தேசிய அளவிலான மினி பைக் டிஸைன், ஃபேப்ரிகேஷன் மற்றும் ரேஸிங் போட்டிகளை ரைடு (RIDE) என்ற பெயரில் நடத்திவருகிறது, கோவை கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங் கல்லூரியைச் சேர்ந்த ஆட்டோமொபைல் துறை. நான்காம் ஆண்டான இந்த ஆண்டு மினி பைக் டிஸைன் ஃபேப்ரிகேஷன் அண்டு ரேஸிங் போட்டியை RIDE-2016 எனும் பெயரில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்துகிறது. மாணவர்களே இந்தப் போட்டிக்கான மினி பைக்கை உருவாக்க வேண்டும் என்பதுதான் போட்டியின் முதல் விதி. இந்தப் போட்டிக்கான முன்பதிவு நடந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் பதிவு செய்துவருகின்றனர்.

வழக்கமாக 60cc, 80cc, எலெக்ட்ரிக் மற்றும் சோலார் பைக்குகள் என மூன்று பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகள் இந்த முறை 6 பிரிவுகளில் நடக்கிறது. இது தொடர்பாக கல்லூரி ஆட்டோமொபைல் துறைத் தலைவர் கணேஷ் முரளியிடம் பேசினோம்.

“மினி பைக் டிஸைன் ஃபேப்ரிகேஷன் அண்டு ரேஸிங் போட்டியை கடந்த 2013-ம் ஆண்டு துவங்கி ஆண்டு தோறும் நடத்திவருகிறோம். இது நான்காவது ஆண்டு. வழக்கமாக 60cc, 80cc, எலெக்ட்ரிக் மற்றும் சோலார் பைக்குகள் பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். இந்த முறை மினி ஏடிவி (ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்), செல்ஃப் பேலன்ஸ்டு டூவீல் ஸ்கூட்டர், மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என மூன்று புதிய பிரிவுகளைச் சேர்த்துள்ளோம். மொத்தப் பரிசுத் தொகை 1.50 லட்சம் ரூபாய்.

மாணவர்கள் வகுப்பில் படிக்கிறார்கள். ஆனால், அதை உருவாக்கத் தெரியவில்லை. மெக்கானிக்கைத் தேடிப் போகிறார்கள். மாணவர்களே கற்றுக்கொள்ளும் போது, அது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வகுப்பறைகளைவிட பெரிய அளவில் கற்றுக்கொள்ள முடியும். இதில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் மட்டுமல்லாது, எல்லா தரப்பு மாணவர்களும் பங்கேற்க முடியும். ஐ.டி துறையில் இருந்தும் மாணவர்கள் பங்கெடுக்கின்றனர். கடந்த ஆண்டு 106 அணிகள் பங்கேற்றன. இந்த முறை 150-ஐ கடக்கும்!” என்றார்.

ச.ஜெ.ரவி, படம்: த.ஸ்ரீனிவாசன்