இந்தியாவில் A3 கார்தான் ஆடியின் விலை குறைவான மாடல். ஆனால், அதிகம் விற்பனை ஆவது என்னவோ A4 மாடல்தான்.

ஆனால், போட்டி யாளர்களின் அதிரடியால், சந்தையில் தனது இடத்தை இழந்த ஆடி, அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய A4 காரைக் களமிறக்க இருக்கிறது. பழைய காருக்கும் இதற்கும் தோற்றத்தில் வித்தியாசம் இல்லையே என முதலில் தோன்றினாலும், கூர்ந்து கவனித்தால், மாற்றங்கள் தென்படுகின்றன.

ஆடியின் புதிய MLB EVO பிளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதால், பழைய காரைவிட 95 கிலோ எடை குறைவாக இருக்கிறது. காருக்குள்ளே நுழைந்தால், விலை அதிகமான Q7-க்குள் சென்றதுபோல இருக்கிறது.

அனலாக் ஸ்பீடோ மீட்டருக்குப் பதிலாக, Q7-ல் இருந்த ‘Virtual Cockpit’ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் இங்கும் தொடர்வது க்ளாஸ். மர வேலைப்பாடுகள் உடனான டேஷ்போர்டின் தரம் அசத்தல் ரகம். பழைய காரைவிட புதிய A4-ல் இடவசதி அதிகரித்துள்ளதுடன், இருக்கைகளும் சொகுசானதாக மாறியுள்ளன. சிறப்பான டிரைவிங் பொசிஷன் காரணமாக, வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது.

பழைய காரில் 170bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்திய 1.8 லிட்டர் இன்ஜின் - CVT கியர்பாக்ஸ் அமைப்பு இருந்தது. புதிய A4-ல், 150bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது.

பழைய காரைவிட சின்ன இன்ஜின் என்றாலும் புதிய காரின் எடை குறைந்திருப்பதால், A4 காரின் பெர்ஃபாமென்ஸ் நன்றாகவே இருக்கும் என்கிறது ஆடி. (0-100 கி.மீ வேகம்: 8.5 விநாடிகள்). இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸின் இயக்கம் ஸ்மூத்தாக இருக்கிறது. மிட் ரேஞ்ச் சூப்பராக இருந்தாலும், பழைய காரின் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் இதில் இல்லை.

எவ்வளவு மோசமான சாலையில் சென்றாலும், சஸ்பென்ஷன் அதிர்வுகளை உள்வாங்கிக்கொள்கிறது. அதிக வேகத்தில் செல்லும்போது, பழைய காரின் பின்பக்கம் ஆட்டம் போடும். ஆனால், புதிய A4-ன் பாடி கன்ட்ரோல் சிறப்பாக இருப்பதுடன், ஸ்டீயரிங்கும் போதுமான ஃபீட்பேக்கைத் தருகிறது.

இன்ஜினின் அளவு குறைந்துள்ளது மைனஸ் என்றாலும், நல்ல மைலேஜ் கிடைக்கும் என்பது ஆறுதல். எனவே, நகருக்குள் டிரைவர் வைத்து காரில் செல்பவர்களுக்கு ஏற்ற ஆப்ஷனாக, புதிய A4 இருக்கும்.