கிராஸ்ஓவர் போன்ற டிஸைன், நல்ல இடவசதி கொண்ட கேபின், அதிக சிறப்பம்சங்கள், கொடுக்கும் காசுக்கு மதிப்பு ஆகிய அம்சங்கள் ஒன்றுசேர்ந்து, ரெனோவின் சூப்பர் ஸ்டாராக க்விட் காரை மாற்றியுள்ளன. கார் அறிமுகமான ஓர் ஆண்டுக்குள் 80,000-க்கும் அதிகமான புக்கிங்குகளைப் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலான க்விட் உரிமையாளர்கள், காரின் பெர்ஃபாமென்ஸைப் பற்றிப் பெரிதாக வியந்து சொல்லாததைக் கேட்டிருக்கலாம். இதில் உள்ள 799சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினின் மைலேஜ் சிறப்பாக இருந்தாலும், குறைவான பவர் காரணமாக ஓட்டுதலில் பின்தங்கி இருந்தது. இதனைக் களையும் விதமாக, கூடுதல் திறன் கொண்ட 999சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை க்விட்டில் பொருத்தியுள்ளது ரெனோ. இது பழைய காரைவிட அதிக பவர் (68bhp) மற்றும் (9.1kgm)டார்க்கை வெளிப்படுத்துகிறது.

1.0 லிட்டர் இன்ஜினில், அதிர்வுகள் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், ஆரம்ப வேகத்தில் இன்ஜினின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. முன்னே செல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்கான பவர் கிடைப்பதுடன், பெர்ஃபாமென்ஸிலும் கெத்து காட்டுகிறது க்விட். 0 - 100 கி.மீ வேகத்தை, 800சிசி காரைவிட 2 விநாடிகளுக்கு முன்னதாக, அதாவது 15.78 விநாடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த காரின் கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருப்பது பலம். 1,000 சிசி இன்ஜின்கொண்ட க்விட்டில் AMT கியர்பாக்ஸை, இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.

பவர்ஃபுல் இன்ஜின், நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. நல்ல வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிவதுடன், இன்ஜின் சத்தமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கிறது. அருமையான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, காரின் ஓட்டுதல் தரம் மற்றும் நிலைத்தன்மை அசத்தலாக இருக்கிறது. ஸ்டீயரிங் எடை குறைவாக இருப்பது ப்ளஸ் என்றாலும், போதுமான ஃபீட்பேக்கை அது வெளிப்படுத்தத் தவறுகிறது. புதிய இன்ஜின் மற்றும் காரின் மேம்படுத்தப்பட்ட கட்டுமானம் காரணமாக, க்விட்டின் எடை 40 கிலோ அதிகரித்திருக்கிறது (800சிசி க்விட் காரின் எடை - 660 கிலோ). ஆனால், மற்ற 1,000 சிசி கார்களுடன் ஒப்பிடும்போது, குறைவான எடையுள்ள க்விட், அற்புதமான பவர் டு வெயிட் ரேஷியோவைக் கொண்டுள்ளது.

800சிசி க்விட்டைவிட 1,000 சிசி க்விட் ஸ்போர்ட்டியாக இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக, காரின் பக்கவாட்டுப் பகுதியில் Chequered Strip இடம்பெற்றுள்ளது. இது சிலருக்குப் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ரியர்வியூ மிரர்களின் சில்வர் ஃபினிஷ் நிச்சயம் கவரும். ஆனால், அவற்றை காரின் உள்ளிருந்தே அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்பது மைனஸ். 800சிசி க்விட்டில் இருந்த அதே பிராக்டிக்கலான கேபின்தான், 1,000சிசி க்விட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், சென்டர் கன்ஸோலில் இருக்கும் டச் ஸ்கிரீன், இரட்டை க்ளோவ் பாக்ஸ், இடவசதி ஆகியவை இங்கும் தொடர்கின்றன. 0.8 லிட்டர் இன்ஜின்கொண்ட காரில், அதிக வரவேற்பைப் பெற்றது விலை அதிகமான வேரியன்ட்கள்தான். எனவே, 1,000 சிசி இன்ஜினை டாப் வேரியன்ட்டான
RXT-ல் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது ரெனோ. இதில் ஓட்டுநர் பக்க காற்றுப் பை ஆப்ஷனலாகக் கிடைக்கிறது என்பதுடன், Pretensioner - Load Limiter உடனான முன்பக்க சீட் பெல்ட்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஏபிஎஸ் ஆப்ஷனலாகக்கூட இல்லாதது நெருடல்.

ஓட்டுதலில் சுமாராக இருந்த ரெனோ க்விட், தற்போது பெரிய இன்ஜினால், ஓட்டுவதற்கு பெப்பியான காராகவும் மாறியிருக்கிறது. காரின் பெர்ஃபாமென்ஸ் அதிகரித்துள்ளது என்றாலும், மைலேஜில் பெரிய வித்தியாசம் இருக்காது என்கிறது ரெனோ. 800சிசி க்விட்டின் அராய் மைலேஜ் 25.17 கி.மீ என்றால், 1,000 சிசி க்விட்டின் அராய் மைலேஜ் 23.01 ஆக இருக்கிறது. சின்ன இன்ஜின்கொண்ட க்விட்டைவிட சுமார் `30,000 மட்டுமே அதிக விலையைக்கொண்டிருக்கும் பவர்ஃபுல் க்விட், பட்ஜெட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டின் சிறந்த காராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் நாள் தொலைவில் இல்லை.