குறைவான பராமரிப்புச் செலவு, நம்பகத்தன்மை - இது மாருதியின் அடையாளம். குறைவான விலை, கண்ணை உறுத்தாத ஸ்டைல் - இது டாடா. அந்த வகையில், செலெரியோவும் டியாகோவும் தங்கள் நிறுவனங்களின் பெயர்களை இன்றளவும் காப்பாற்றிவருகின்றன. இரண்டிலும் ஒரே வகையான 3 சிலிண்டர் இன்ஜின்; கிட்டத்தட்ட நெருக்கமான விலை என்று சில ஒற்றுமைகள் இருந்தாலும் டியாகோ, கூடுதலாகக் கொஞ்சம் களம் இறங்கி - வசதிகளிலும் பவரிலும் செலெரியோவை முந்தப் பார்க்கிறது. பெட்ரோல் மாடல் வாங்க நல்ல சாய்ஸ் - செலெரியோவா, டியாகோவா?

டிஸைன்

மாருதி கார்களின் டிஸைனைப் பற்றி ஒன்-லைனில் முடித்துவிடலாம். செலெரியோவிலும் அப்படியே! LED, புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் போன்ற கண்ணைக் கவரும் எந்த அம்சங்களும் செலெரியோவில் இல்லை. மேலும், ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், டிஸைனும் போர் அடித்துவிட்டது. டியாகோவிலும் கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லையென்றாலும், பழைய டாடா கார்கள்போல டல் அடிக்கவில்லை. ‘அட, டாடாவின் காரா இது!’ என்று புதிதாகப் பார்ப்பவர்களை டிஸைனில் லேசாகப் புருவம் உயர்த்த வைக்கிறது டியாகோ. நீளத்தில் டியாகோவும், உயரத்தில் செலெரியோவும் கொஞ்சம் வித்தியாசப்படுகின்றன.

உள்ளே...

இன்டீரியர் என்று வரும்போதும் டாடாதான் ஸ்டைலிஷ். செலெரியோவுடன் ஒப்பிடும்போது - கியர் லீவரும், ConnectNext இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமுமே இதற்கு நல்ல சாட்சி. ஃபிட் அண்டு ஃபினிஷும் சூப்பர். ஆனால், ‘சிம்பிள் பட் நீட்’ என்பார்களே, அது செலெரியோவில்தான். சாதாரண 2-டின் சிஸ்டம்; சிம்பிளான டயல்கள் என்று எல்லாமே எளிமையாகவும், விசாலமாகவும் இருக்கின்றன. இரண்டிலுமே ப்ளூடூத், Aux-in, USB கனெக்ட்டிவிட்டி, ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல், டில்ட் ஸ்டீயரிங் என்று வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன. ABS, காற்றுப் பைகள் போன்ற வசதிகள் செலெரியோவின் டாப் வேரியன்ட்டில் ஸ்டாண்டர்டாகவும், வேண்டுமானால் ஆப்ஷனலாகவும் வழங்கப்படுகின்றன. டியாகோவில் காற்றுப் பைகள் மட்டுமே ஆப்ஷனல். எக்ஸ்ட்ராவாக ரியர் பார்க்கிங் சென்ஸார், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஹர்மான் 8 ஸ்பீக்கர் சிஸ்டம் - நேவிகேஷன் கமாண்டோடு நம்மை வரவேற்கிறது டியாகோவின் இன்டீரியர். டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட்மென்ட் இரண்டும் செலெரியோவின் டாப் எண்டான ZXI மாடலில் மட்டும்தான் உள்ளன. ஆனால், டியாகோவின் ஆரம்ப வேரியன்ட்டான XB மாடலில் மட்டும்தான் இது மிஸ்ஸிங்.

இன்ஜின்

டாடாவின் 4 சிலிண்டர் கார்களே அதிர்வுகளுக்குப் பெயர்பெற்றவை. டியாகோவில் இருப்பது 3 சிலிண்டர்தான். ஆமாம்; அதிர்ந்துதான் ஆரம்பிக்கிறது டியாகோ. ஐடிலிங்கில் இருக்கும்போது பெடல்களில் கால்களிலும், கியர் லீவரில் கைகளிலும் இந்த அதிர்வை நீங்கள் உணரலாம். 1.2 லிட்டர் Revotron இன்ஜின், ப்ளே ஸ்கூலுக்குச்செல்லும் குழந்தைபோல ஆரம்பத்தில் அடம்பிடிக்கத்தான் செய்கிறது. 1,500 ஆர்பிஎம் தாண்டிய பிறகு இடைவேளையில்தான் இன்ஜின் உற்சாகமடைகிறது. 3,000 ஆர்பிஎம் தாண்டிய பிறகு, இந்த சீரிஸில் இப்படி ஒரு பெர்ஃபாமென்ஸ் வேறு எந்த கார்களிலும் கிடைத்திருக்க வாய்ப்பில்லையோ என்று தோன்றுகிறது. 84bhp பவரும், 11.4kgm டார்க்கும் இந்த செக்மென்ட்டுக்குப் பழசுதான்; ஆனால், இதில் கிடைக்கும் அனுபவம் புதுசு! 0-100 கி.மீ வேகத்தை 15.27 விநாடிகளில் கடந்தது டியாகோ. ஓட்டுதல் தரத்தில் டாடா கார்களை அவ்வளவாக சிலாகிக்க முடியாது. செலெரியோவை ஒப்பிடும்போது பெர்ஃபாமென்ஸில் டியாகோவை நிச்சயம் சிலாகிக்கலாம். இதில் உள்ள சிட்டி மற்றும் எக்கோ மோடுகளை இதற்குக் காரணமாகச் சொல்லலாம். இதுவே எக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது, பெர்ஃபாமென்ஸில் டியாகோ பம்முவதை நம் கால்களில் உணர முடிகிறது. எக்கோ மோடில் 0-100 கி.மீ-யைக் கடக்க 2 விநாடிகள் அதிகமாக, அதாவது 17.44 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது டியோகோ. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 159 கி.மீ.

செலெரியோவிலும் 3 சிலிண்டர்தான்; ஆனால், டியாகோவை ஒப்பிடும்போது ஆரம்ப அதிர்வுகள் குறைவுதான். இதற்குக் காரணம், மாருதியின் 998 சிசி K-Series இன்ஜின். சின்னதாக ஒரு தயக்கம் இருந்தாலும், ஆரம்ப வேகங்களில் சட்டெனக் கிளம்பி டியாகோவை மிஞ்சுகிறது செலெரியோ. 2,500 ஆர்பிஎம்-மில் இருந்து 6,000 ஆர்பிஎம் வரை எந்த வேகத்தில் சென்றாலும் ஒரு கம்ஃபர்ட் ஃபீல், ஒரு ஃபன், ஒரு தைரியம் வருகிறது. 0-100 கி.மீ போட்டியில் டியாகோவைவிட குறைவாகவே விநாடிகளை எடுத்துக்கொள்கிறது செலெரியோ. 14.24 விநாடிகள். அதேபோல், அதிகபட்ச வேகமாக 158 கி.மீ வரையும் தாக்குப் பிடிக்கிறது செலெரியோ. இத்தனைக்கும் இதில் டியாகோவைவிட 200 சிசியும், 17 bhp-யும் குறைவு. செலெரியோ, ஸ்போர்ட்ஸ் கார் இல்லை; ஆனால், இதை சிட்டியில் ஓட்டும்போது லேசாக ஸ்போர்ட்டி ஃபீல் கிடைக்கிறது.

ஓட்டுதல் தரம், கையாளுமை

செலெரியோவின் டாப் ஸ்பீடுக்கு - K-Series இன்ஜின் தவிர்த்து, இன்னொரு காரணமும் இருக்கிறது. டியாகோவைவிட செலெரியோ சுமார் 200 கிலோ குறைவு. எனவே, வேகப் போட்டியில் எகிறினாலும், நெடுஞ்சாலைகளில் இதுவே ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. காரின் உயரம் அதிகம் என்பதால், காற்றில் லேசாக அலைபாய்கிறது செலெரியோ. டியாகோ அளவுக்கு ஏரோடைனமிக்ஸ் இதில் இல்லை என்பதால், அதிக வேகங்களில் கார்னரிங்கில் லேசாக பாடி ரோல் இருக்கிறது. குறைந்த எடை, லேசான கிளட்ச் போன்றவற்றால், சிட்டி டிராஃபிக்கில் மேடு - பள்ளங்களில் செலெரியோவை நன்றாக ‘வெச்சு’ செய்ய முடிகிறது. இரண்டிலும் 14 இன்ச் டயர்கள், கிரிப்புக்கு ஓகே!

டியாகோவும் சிட்டி டிராஃபிக்குக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல. ஸ்டைலாகவும், க்விக்காகவும் இருக்கும் கியர்பாக்ஸ், பயன்படுத்தவும் ஜாலியாக இருக்கிறது. செலெரியோவைவிட இதில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 5 மிமீ அதிகம் (170 மிமீ). ‘சப்பிள் சஸ்பென்ஷன்’ என்று சொல்லக்கூடிய எளிதில் வளைந்து நெளிந்து கொடுக்கிற சஸ்பென்ஷன்கள் டியாகோவில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், எத்தனை மோசமான சாலைகளையும் அசால்ட்டாகச் சமாளிக்கிறது. ஆச்சரியம் - ஹேண்ட்லிங்கிலும் பாஸ் ஆகிறது டியாகோ. பார்க்கிங் ஏரியாக்களிலும், குறைவான வேகங்களிலும் எடை குறைந்த இதன் ஸ்டீயரிங் இதற்கு உறுதுணை புரிகிறது. செலெரியோவில் லேசான கிளட்ச் என்றால், டியாகோவில் மிகவும் லேசான கிளட்ச். இதனால் ‘சீக்கிரம் போகணும்’ என்று சிட்டி டிராஃபிக்கில் புகுந்து புறப்பட டியாகோ சரியான சாய்ஸ்.

மைலேஜ்

நீங்கள் நினைப்பது சரிதான். எக்கோ, சிட்டி மோடு இருப்பதால், சந்தேகத்துக்கு இடமின்றி டியாகோதான் மைலேஜ் போட்டியிலும் ஜெயிக்கிறது. பொதுவாக, ஷார்ட் கியரிங் இருந்தால், மைலேஜ் அவ்வளவாகக் கிடைக்காது என்பது விதி. அதை உடைக்கிறது டியாகோ. 23.8 கி.மீ ARAI மைலேஜ் கிடைக்கிறது.

செலெரியோவில் மோடு ஆப்ஷன் கிடையாது. இருந்தாலும், மைலேஜ் விஷயத்தில் டியாகோவை நெருங்குவதற்குக் காரணம் - குறைவான இன்ஜின் சிசி, எடை, பவர் மற்றும் டார்க். செலெரியோவின் ARAI மைலேஜ் 23.1 கி.மீ. இரண்டிலுமே டேங்க் கொள்ளளவு 35 லிட்டர்தான். டேங்க்கை நிரப்பிவிட்டு

டியாகோவிலும் செலெரியோவிலும் முறையே 834 கி.மீ மற்றும் 808 கி.மீ வரை பயணிக்க முடிகிறது.

ரெஸ்பான்ஸிவ்வான இன்ஜின், சூப்பர் கியர்பாக்ஸ், தாராளமான கேபின் இடவசதி, முக்கியமாக மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் - இவை எல்லாமே செலெரியோவுக்கு மிகப் பெரிய பலம். ‘மாருதி கார் வாங்கினால், எந்தப் பிரச்னையும் இருக்காது’ என்று வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியது மாருதியின் வெற்றி. இருந்தாலும், அதையும் தாண்டி குறைந்த விலை, நிறைய வசதிகள், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், ஸ்டைல், அசத்தலான ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை என்று டியாகோ இந்தப் போட்டியில் தங்கம் வெல்கிறது. வெள்ளி வென்ற செலெரியோவுக்கும் வாழ்த்துகள்!